குஜராத் மாடல்?

 தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் முதலிடம்.

குஜராத் மாடல்?

நாட்­டின் போதை பொருள்­களின் கேந்­தி­ர­மாக இருந்து வரு­கி­றது என்­கிற குற்­றச்­சாட்டை நிரூ­பிக்­கும் வகை­யில் நேற்று முன்­தி­னம் பா.ஜ.க. ஆளும் குஜ­ராத் மாநி­லத்­தில் ரூ.600 கோடி மதிப்­பி­லான 86 கிலோ போதைப் பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் பிரச்­சா­ரத்­தின்­போது பிர­த­மர்மோடி­யும் பா.ஜ.க. வின­ரும் தேவை­யின்றி உண்­மைக்கு மாறாக தமிழ்­நாட்­டில் போதை பொருள் கலாச்­சா­ரம் பெருகி வரு­கி­றது என்று குற்­றச்­சாட்டு கூறி வந்­த­னர்.

ஆனால் உண்­மை­யில் குஜ­ராத் மாநி­லம் தான் போதை பொருளை உற்­பத்தி செய்­யும் மாநி­ல­மா­கத் திகழ்­கி­றது என்­பதை அண்­மை­யில் நடை­பெற்று வரும் சம்­ப­வங்­கள்நிரூ­பிக்­கின்­றன.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் ரூபாய் 600 கோடி மதிப்­புள்ள போதை பொருளை அர­பிக் கட­லில் படகு ஒன்­றி­லி­ருந்து பறி­முதல் செய்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக இந்­திய கட­லோ­ரக் காவல் படை தெரி­வித்­துள்ள­தா­வது:–

அர­பிக்­க­டல் வழி­யாக போதைப்பொருள் கடத்­தப்­ப­டு­வ­தாக தக­வல் கிடைத்­தது. இதை­ய­டுத்து, ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட போதைப் பொருள் தடுப்பு நட­வ­டிக்­கை­யில் கட­லோ­ரக் காவல் படை­யின் கப்­பல்­கள் மற்­றும் விமா­னங்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. 

இந்­திய கட­லோர காவல் படை­யின் ஐசிஜி கப்­பல் ராஜ்­ரத்­த­னில் இருந்த குஜ­ராத் பயங்­க­ர­வாத தடுப்­புப் படை­யி­னர், தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதி­கா­ரி­கள் சந்­தே­கத்­துக்­கு­ரிய மீன்­பிடி படகை அடை­யா­ளம் கண்­ட­னர்.

இந்­திய கட­லோர காவல் படை­யி­டம் அந்­தப் படகு சர­ண­டைந்­த­தைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்­புக்­கான சிறப்பு குழு­வி­னர் அந்­தப் படகை சோத­னை­யிட்­ட­னர். 

அப்­போது, அந்­தப் பட­கில் 78 பொட்­ட­லங்­க­ளாக மொத்­தம்86 கிலோ போதைப் பொருள்­கள் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்­திய கடற்­ப­டை­யும் குஜ­ராத் பயங்­க­ர­வாத தடுப்­புப் படை­யும் இணைந்து கடந்த 3 ஆண்டு களில் மேற்­கொண்­டுள்ள 11- ஆவது நட­வ­டிக்கை இது என இந்­திய கட­லோர காவல் படை தெரி­வித்­துள்­ளது.

இந்த நட­வ­டிக்கை தொடர்­பாக குஜ­ராத் மாநில காவல் துறை தலை­வர் விகாஸ் சாஹே செய்தி யாளர்­க­ளி­டம் கூறு­கை­யில், ‘இந்­திய கடற்­ப­டை­யும் மாநி­லத்­தின் பயங்­க­ர­வாத தடுப்­புப் படை­யும் வீரத்­து­டன் பாகிஸ்­தான் மீன்­பிடி படகை அணு­கி­யுள்­ள­னர். 

பட­கில் இருந்­த­வர்­கள் மீது கட­லோர காவல் படை அதி­காரி துப்­பாக்­கிச் சூடு நடத்த வேண்­டிய சூழல் ஏற்­பட்­டது.

இதில் அந்­தக் குழு­வின் தலை­வர் காய­ம­டைந்­தார்.அதன்­பி­றகே அவர்­கள் சர­ண­டைந்­த­னர். காய­ம­டைந்­த­வ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.

கைது செய்­யப்­பட்ட அனை­வரும் பாகிஸ்­தா­னின் பலூ­சிஸ் தான் மாகா­ணத்­தைச் சேர்ந்­த­வர்­கள்’ என்­றார்.

இந்நிலையில், குஜராத் கடல் பகுதியில் 2-வது நாளாக நேற்றும் ஐசிஜி, என்சிபி மற்றும் ஏடிஎஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த இந்திய மீன்பிடி படகை இடைமறித்து சோதனையிட்டனர். அதில் இருந்த 173 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப் படகில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

கடந்த மாதம் ரூ.400 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் வந்த படகை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்தது. அதில் இருந்த 6 பாகிஸ்தானியர்களை கைது செய்தது. இதுபோல கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3,300 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. ஆளும் குஜ­ராத் மாநி­லத்­தில் இவ்­வாறு அடிக்­கடி போதைப் பொருள்­கள் பிடி­ப­டு­வதுகவ­னிக்­கத்­தக்­கது. இதன் மூலம் மோடி­யின் பொய்ப்­பி­ரச்­சா­ரம் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.இந்தியபோதையின் தலைநகரம் குஜராத் தான் என்பது மீண்டும் நிருபணமாயுள்ளது.

தமிழ்நாடு சங்கிகளுக்கு பின்னால் தீ வைத்துள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?