ரபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை

 ஊழல் சாதனை!

  • மோடி – அமித்ஷா தலையிைலான அரசாங்கத்தின் ஊழல் 7.5 லட்சம் கோடி என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG)-இன் அறிக்கை! இது மட்டும்தான் ஊழலா?
  • RSS-BJP ஆட்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமலான. GST வரிகொள்கை மூலம் சுமார் 50 லட்சம் கோடிக்கு மேல் வசூலான தொகை என்ன ஆனது?
  • கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் படுபாதாள அளவிற்கு குறைந்த நிலையிலும் வரிகளை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலையில் அடித்த கொள்ளை 32 லட்சம் கோடி போனது எங்கே? 2014-ல் கேஸ் விலை ரூ.411, பெட் ரூ.72. 2024-ல் கேஸ் விலை ரு.818. பெட் ரூ.102
  • உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்த்தப் பட்டதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் அடித்த கொள்ளை லாபம் எத்தனை லட்சம் கோடி?
  • கடந்த பத்து ஆண்டுகளில் கார்ப்பரேட் களுக்கு கடன் தள்ளுபடி 25 லட்சம் கோடி. இதனால் பொதுத்துறை வங்கிகளின் லாபம் மாயமாகி விட்டது!
  • மினிமம் பேலன்ஸ் இல்லாதது, ATM பயன்படுத்தியது. SMS அனுப்ப செலவு என பொது மக்களிடம் அடித்த கொள்ளை 35 ஆயிரம் கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்!
  • அறிவிப்பில்லாமல் ரயில்வேயில் கட்டண உயர்வு. முதியோர் பயண கட்டண சலுகை பறிப்ப. தரம் குறைந்த கொள்முதல் என பல்லாயிரம் கோடி எங்கே செல்கிறது?
  • கார்ப்பரேட்களுக்கு 30%-லிருந்து 22%-மாக வரி குறைப்பு செய்ததன் மூலம், கடந்த 5 ஆண்டு களில் மட்டும் வருவாய் இழப்பு சுமார் 8 லட்சம் கோடி!
  • மோடியின் ஆட்சியில் அதானி உலக பணக்காரர் வரிசையில் 312-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு தாவியது எப்படி? கடைசி இரண்டு ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் பரிவர்த்தனையானது எப்படி? இந்த விசயத்தில் ED ரெய்டு செல்லாதது ஏன்?
  • நாடு முழுவதும் பல லட்சம் கோடிக்கு நடக்கும் போதை பொருள் கடத்தலயும் கிரிமினல் கும்பலையும் NIA சுற்றி வளைக்காதது ஏன்?
  • மோடி அரசின் 10 ஆண்டுகால பட்ஜெட்டின் வரவு – செலவு திட்டங்களை ஆய்வு செய்தால், மக்களுக்கு? கார்ப்ரேட்களுக்கு? என்ன செய்தார்கள் என்பதை அறிய முடியும்!
  • பணமயமாக்கம், பங்கு விற்பனை என்கிற பெயரில் அரசின் நிறுவனங்கள். சொத்துக்கள், இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்பட்டது ஏன்?
  • இந்தியாவின் கடன் 2014-ல் காங் ஆட்சியில் -53 லட்சம் கோடி. 2023 டிசம்பரில் 172 லட்சம் கோடி, இந்தக் கடன் யாருக்காக பெறப்பட்டது? பட்டினியில் துடிப்பவர்கள் 22 கோடி பேர்!
  • நாடாளுமன்றத்தில் அமளிதுமளி செய்து, மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு நிறைவேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான சட்ட திருத்தங்கள் யாருக்காக? எதற்காக?
  • பாதுகாப்பு துறையில் தனியார் மயத்தை திணித்தது முதல் ரபேல் ஊழல் வரை நாடே சந்தி சிரித்து விட்டது?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?