யாரை ஏமாற்ற?
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், சாத்தனூர் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு விபூதி பட்டை அடித்து அவமரியாதை.
"15MP சீட், 26ல நீ தான் முதலமைச்சர், ரூ.1,000 கோடி தரோம்னு கூப்பிட்டாங்க; தெருக்கோடிலகூட நின்னுகிறேன்; உன்னோட வர மாட்டேனுட்டேன்" - சீமான்
பட்டாசு வெடித்து குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு .
அரியலூர் செந்துறை அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை.
சீனாவுக்கு பருத்தி ஏற்றுமதியால் கடன் சுமை.கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியில் 200 ஜவுளி உற்பத்தியாளர்கள் தற்கொலை.
இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு மாற தங்களின் முன் அனுமதி தேவை என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு வருகிறார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. காலையில் நெல்லையிலும், மாலையில் கோவையிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் தமிழ்நாட்டில் வீடு எடுத்து தங்கினாலும் பா.ஜ.க வெல்லாது.தமிழ்நாடு மீது பிரதமருக்கு எந்த அக்கறையும் இல்லை " "தேர்தலுக்கு தேர்தல் பேன்ஷி டிரஸ் ஷோ போல வந்து செல்கிறார். பாஜக கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்தால் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டல். பாஜகவின் உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம். - உதயநிதி .
யாரை ஏமாற்ற?
60 சட்டமன்ற தொகுதிகளையும், 2 மக்களவை தொகுதிகளையும் கொண்ட அருணாச்சலப் பிரதேச மாநிலம், நில கையகப்படுத்தம், சர்வாதிகார ஆட்சி ஆகிய காரணங்களால் திக்குமுக்காடி வருகிறது.அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள காரணத்தாலும், அங்கு திபெத்திய வாழ்வுமுறை நீடிப்பதாலும், அப்பகுதிக்கு சீனாவும் சொந்தம் கொண்டாடி வருகிறது.
அவ்வகையில், அருணாச்சலத்தின் 30 பகுதிகளுக்கு பெயர்மாற்றமும் செய்துள்ளது சீனா.
ஆனால், அதனை எதிர்த்து எவ்வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமல் மோடியும், அவரது அரசும் வாய் மூடி, கை கட்டி இருப்பதால், எதிர்காலத்தில், இந்தியா வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசம் என்ற பகுதி இருக்குமா என்கிற கேள்வி எழும் அளவிற்கு அச்சம் நிலவி வருகிறது.
இவ்வாறான சூழலில், இந்திய மக்களவை தேர்தலோடு இணைந்து, அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலும் மே - சூன் மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான, தேர்தல் பிரச்சாரங்களும் வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனினும், மற்ற மாநில அரசியல் சூழலை விட, மாறுபட்ட சூழலே அருணாச்சலப் பிரதேசத்தில் நிலவி வருகிறது.
காரணம், அருணாச்சலப் பிரதேசத்தில் பாசிச பா.ஜ.க.வின் அடக்குமுறையாலும், பா.ஜ.க.வால் விதைக்கப்படுகிற அச்சத்தாலும், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வின் வலையில் சிக்கிக்கொண்டு எதிர்க்கட்சியே இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் கலக்டங், பூம்டிலா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிர்க்கட்சிகளில் இருந்து போட்டியிட்டு வென்று, பா.ஜ.க என்கிற washing machine திசைக்கு சென்றவர்கள்.மேலும், ஆட்சியில் இருக்கும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட 10 பா.ஜ.க நிர்வாகிகள், போட்டியின்றி சட்டமன்ற உறுப்பினர்களாக, தேர்தலுக்கு முன்பே தேர்வாகியுள்ளனர்.
இதனால், ஜனநாயகத்தை நிறுவுகிற தேர்தல் முறையும் அடிபட்டு போயுள்ளது. இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப இயலாதவாறும், எழுப்பினால் வெளி உலகிற்கு அறிவாதவாறும் ஊடகங்களை தன் கைக்குள் வைத்துள்ளது பா.ஜ.க.
இதற்கிடையில், அருணாச்சலம் சென்ற பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, “சமையல் எரிவாவு விலையை ரூ. 400 ஆக குறைப்போம். 25,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்” என வாய் வந்த போக்கிற்கு அள்ளிவிடுகிறார்.
கடந்த 10 ஆண்டுகால, ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை அதிகரித்தவர்கள், புதிதாக இவ்வாறு முழக்கமிட்டு வருவது,யாரை ஏமாற்ற?