நிதியும் கிடையாது- நீதியும் கிடையாது
தமிழ்நாடு கேட்டதோ ரூ.37,907 கோடி,மோடிஅரசு தந்ததோ ரூ.276கோடி - மு.க. ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் நாளை கொடைக்கானல் வருகை: 5 நாட்கள் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திட்டம்.
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி.
“நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த நாளே அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவு செய்திருக்க வேண்டும்” மோடி பேச்சு.
நிதியும் கிடையாது- நீதியும் கிடையாது
தமிழகத்தில் 2023 டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகின.
இரண்டு வார இடைவெளியில், டிசம்பர் 17, 18 தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்து க்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் வரலாற்றில் இல்லாத மழை - வெள்ளப் பாதிப்பைச் சந்தித்தன.
பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் இழப்பைச் சந்தித்னர்.
8 மாவட்டங்களில் ஏற்பட்ட இந்த மழை - வெள்ளப் பாதிப்புக்கு ரூ. 37 ஆயிரத்து 907 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மோடிக்கு கடிதம் எழுதினார். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமை யில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை நேரிலும் சந்தித்து முறையிட்டனர்.
அப்போது, ஜனவரி இறுதியில் நிதி ஒதுக்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்திருந்தார்.
முன்னதாக ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தமிழகத்திற்கு நேரில் வந்து வெள்ளப் பாதிப்பைப் பார்வை யிட்டு, உரிய நிவாரணம் ஒதுக்கப்படும் என்றனர்.
ஆனால், நான்கு மாதங்களாகியும், தமிழக அரசு கேட்ட ரூ. 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயில், ஒரு பைசாவைக் கூட ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கீடு செய்ய வில்லை. இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் ஏப்ரல் 3 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
“2023 டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால், தமிழ கத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப் பட்டன. ஆகவே, புயல் மற்றும் கனமழை யால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய ரூ. 19 ஆயிரத்து 692 கோடியே 69 லட்சம் நிவாரணத் தொகையை விடுவிக்கு மாறு ஒன்றிய உள்துறை அமைச்ச கத்திடம் கடந்த டிசம்பர் 14 அன்று கோரியிருந்தோம்.
அதேபோல, கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில், தமிழ கத்தின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மிகக் கனமழை பெய்தது. அந்த மழையால் ஏற்பட்ட சேதங் களை சரிசெய்ய, நிவாரணமாக ரூ. 18 ஆயிரத்து 214 கோடியே 52 லட்சத்தை விடுவிக்குமாறும், ஒன்றிய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராம னிடம் கோரியிருந்தோம்.
ஆனால், தமிழக மழை வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரும், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை.
எனவே, தமிழக அரசு கோரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்பிறகும் கூட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதாக இல்லை.
இதனால், ஒன்றிய அரசு தமிழ கத்தை வஞ்சிக்கும் விவகாரம் மக்கள வைத் தேர்தலிலும் முக்கியப் பிரச்சார மாக மாறியது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதனை தேர்தல் களத்தில் முன்வைத்து நீதி கோரினர்.
இந்நிலையில் தான், ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழகத்திற்கு மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாயும், மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு 397 கோடி ரூபாயுமாக மொத்தம் 682 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதிலும் கூட உடனடியாக வழங்கும் நிவாரண நிதி என்று பார்த்தால், மிக்ஜம் புயல் நிவாரணத்திற்கு ரூ. 115 கோடியே 49 லட்சம், மழை வெள்ள நிவாரண நிதியாக ரூ. 160 கோடியே 61 லட்சம்..
ஆக மொத்தம் ரூ. 276 கோடியே 10 லட்சம் மட்டுமே ஆகும்.
தமிழ்நாடு அரசு ரூ. 37 ஆயிரத்து 907 கோடியைக் கேட்டிருந்த நிலையில், ஒன்றிய அரசு வெறும் 276 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்து, தமிழக மக்களை அவமதித்துள்ளது.
ஆனால், இதே ஒன்றிய அரசு, கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ. 3 ஆயிரத்து 454 கோடியைத் தூக்கிக் கொடுத்துள்ளது.
கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பாக்கி உள்ளதால் அந்த மாநில மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக கர்நாடகத்திற்கு இந்த நிதியை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒன்றயி அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
நிதியும் கிடையாது- நீதியும் கிடையாது!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
தமிழக மக்கள் மீது ஒன்றிய பாஜக அரசு காட்டியிருக்கும் நிதிப் பாரபட்சம் மற்றும் அநீதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்க வும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் தமது கண்டனத்தில் குறிப்பிட்டுள்ளார்.