ரியல் கேரளா ஸ்டோரி

ராமர் கோயில் திறப்பு நிகழ்வு - முர்மு தடுக்கப்பட்டதாக ராகுல் குற்றச்சாட்டு.

 “டிடிவி தினகரன் வெற்றிபெற்றால் தமிழ்நாடு மாறும்”அண்ணாமலை .

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல்: -பாஜக தேர்தல் அறிக்கை.

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மக்களவைத்தேர்தலில்ஓ.பன்னீர்செல்வத்தை,தினகரனைஆதரித்துஹெலிகாப்டரில் பரப்புரை மேற்கொண்டார்.(இதற்கும் நண்பர்கள்தான்பணம்கொடுத்திருப்பார்கள்.)

இந்தியாவில் தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகிக்கு தாம்பரம் காவல்துறை சம்மன் .

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் .

சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.66,000 வழிப்பறி.2 திருநங்கைகள் கைது .



5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – பாஜக தேர்தல் அறிக்கை .


இதுதான் ரியல் 

கேரளா ஸ்டோரி 

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், கோடம்புழா பகுதியைச் சேர்ந்த முல்லா முஹம்மது - பாத்திமா ஆகியோரது மகன் அப்துல் ரஹீம். அப்துல் ரஹீமின் தந்தை முல்லா முகம்மது மரணமடைந்துவிட்டார்.

 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி அப்துல் ரஹீம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் ஹவுஸ் டிரைவர் விசாவில் சென்று வேலைக்குச் சேரும்போது அப்துல் ரஹீமுக்கு 26 வயது ஆகியிருந்தது. 

ரியாத்தைச் சேர்ந்த அப்துல்லா அப்துரஹ்மான் அல்ஷாஹ்ரியின் மகனான அனாசி அல்ஷாஹ்ரி என்ற 15 வயது சிறுவனை பராமரிப்பது, அப்துல் ரஹீமுக்கு வேலையாக இருந்தது. சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரி-க்கு கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் செயல்படாமல் இருந்தது. 

சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் சேர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அப்துல் ரஹீம்தான் அந்த சிறுவனை காரில் வெளியில் அழைத்துச் சென்று வந்துள்ளார்.

அப்துல் ரஹீமின் தாய் பாத்திமா
அப்துல் ரஹீமின் தாய் பாத்திமா

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி ரியாத் ஷிஃபா-வில் உள்ள வீட்டில் இருந்து அஸீஸி-யில் உள்ள ஃபாண்டா ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சிறுவனை அழைத்துச் சென்றார் அப்துல் ரஹீம். காரின் பின் சீட்டில் சிறுவன் அமர்ந்திருந்திருக்கிறான்.

 போகும் வழியில் ட்ராபிக் சிக்னலை மீறி காரை ஓட்டிச் செல்லும்படி சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரி கூறியிருக்கிறார். ஆனால், அப்துல் ரஹீம் சிக்னலை மீறாமல் காத்திருந்தார். இதனால் சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்னை ஏற்படுத்தியிருக்கிறார்.

 சிக்னலை மீறக் கூடாது எனக் கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளான். அதை கவனிக்காமல் சிக்னல் விழுந்ததும் மீண்டும் காரை ஓட்ட தொடங்கினார் அப்துல் ரஹீம். கார் ஓட்டிக்கொண்டிருந்த போது பின்பக்கம் சீட்டில் சிறுவனின் சத்தம் கேட்கவில்லையே என்று மெதுவாக திரும்பிப் பார்த்துள்ளார். 

அப்போது சிறுவன் சலனமற்று கிடந்ததை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் வேலைசெய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீரை போனில் அழைத்து உள்ளார்.

முஹம்மது நசீர் அங்கு சென்ற நிலையில் இருவரும் என்ன செய்யலாம் என ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி, பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீமை காரில் கட்டி போட்டுவிட்டு, சிறுவன் அனாசி அல்ஷாஹ்ரியை தாக்கியதாக நாடகமாடினர். 

இதுகுறித்து போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அப்துல் ரஹீமையும், முஹம்மது நசீரையும் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பொய்யாக நாடகமாடியது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

 ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அப்துல் ரஹீம்
அப்துல் ரஹீம்

அதே சமயம் சிறுவனின் பெற்றோர் அப்துல் ரஹீமை மன்னித்தால் அவரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர். அதன்படி இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதுவும் ஏப்ரல் 16-ம் தேதிக்குள் அந்த தொகையை வழங்கினால்தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்துல் ரஹீமின் உயிரை காக்க சமூக சேவகர்கள் களம் இறங்கினர். அப்துல் ரஹீம் சட்ட உதவி டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டது. 

கேரளாவில் கடந்த மூன்று வாரங்களாக இதற்கான செயல்படுகள் நடந்தன. கேரளா மக்கள் அதற்காக மனமுவந்து உதவிகளை செய்தனர். அப்துல் ரஹீமுக்காக ஏற்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் நேற்றைய நிலவரப்படி 34 கோடியே 45 லட்சம் ரூபாய் சேர்ந்தது. 

இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் எனவும், அப்படி பணம் அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள்களில் இந்த பணம் வழங்கப்பட உள்ளது. அதற்காக இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தன் மகனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என அப்துல் ரஹீமிம் தாய் பாத்திமா தெரிவித்துள்ளார். இதை ரியல் கேரளா ஸ்டோரி என பிரபலங்கள் கூறிவருகின்றனர்.

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "வெறுப்பையும் பிரிவினையையும் விதைத்து வகுப்புவாதத்தில் இருந்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஹீமின் விடுதலைக்காக கேரளா மலையாளிகள் வழங்கியது 34 கோடி ரூபாய்.

 சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக சிறையில் இருந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீமுக்காக கேரளா மாநிலம் ஒற்றுமையாக நின்று விடுதலைக்காக வழியை ஏற்படுத்திக்கொடுத்து உள்ளது. 

இதுதான் யதார்த்தமான கேரளா ஸ்டோரி. இதுதான் கேரளாவுக்கான எடுத்துக்காட்டு. மனிதர்கள் மிகவும் மதிப்பிற்குரியவர்கள்" என்றார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?