இது வேறு வாயா?

 நெல்லையில் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகள் மற்றும் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும்,

இதனை முறையாக விசாரிக்காமல், தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. சட்டவிரோதமாக வேட்பு மனு ஏற்கப்பட்டதால், தேர்தலை நிறுத்தி வைக்குமாறு மனுதாரர் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. நண்பகல் வேளைகளில் வெளியே வர வேண்டாம் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டது, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை


மேற்கு மாம்பலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் விதிமீறல் தேர்தல் விதிமுறைகளை மீறி சாலையில் விளம்பர பதாகைகள் வைத்ததாக மாம்பலம் மற்றும் பாண்டி பஜார்காவல்நிலையத்தில்வழக்குப்பதிவு.

“மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். அது “மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின்!அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அம்மா ஜெயலலிதா' என பிரதமர் மோடி பேச்சு.


டெல்லி விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.


ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல்.மோடி, அமித்ஷா மீது மதுரை போலீசில் புகார்.


வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது.


வேற வாய்!

இது நாற வாய்?


வல்லரசுகளை ஆளும் உலகத் தலைவர்கள் கூட பார்த்து வியக்கும் தலைவர் மோடி! ஒரு சிறு துரும்பு அளவு கூட தவறு செய்யாத வர் மோடி! 


பரிசுத்தமானவர் மோடி. - இவையெல்லாம் அண்ணாமலை அல்லது தமிழிசை கூறியது அல்ல! அய்யா மருத்துவர் ராமதாசு அவர்கள் கூறுவது! 


அய்யா மருத்துவர் அவர்களே பாஜக ஆட்சிக்கு  பூஜ்யத்துக்கும் கீழேதான் மதிப்பெண் என்று சொன்னீர்களே! அதே வாய்தான் இதுவா? 

அல்லது இது வேறு வாயா? 


மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மவுனம் காக்கிறாரே! 

அது தவறு இல்லையா? 

தேர்தல் பத்திரங்கள் ஊழல் தவறு இல்லையா? 


இந்தி திணிப்பும் தமிழை புறக்கணித்துவிட்டு சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியும் தவறு இல்லையா? அதானியின் அதீத வளர்ச்சிக்காக சட்டங்களை வளைத்து அனைத்தையும் செய்தாரே! 

தவறு இல்லையா?


 மணிப்பூர் எரிந்த பொழுது நீரோ போல பிடில் வசித்தாரே! 

அது தவறு இல்லையா? நிறம் மாறுவதில் பச்சோந்தியை தோற்கடிக்க வேண்டும் என்பது வேண்டுதலா?


 பாவம்! மருத்துவர்! 

குதிரை வேஷம் போட்டால் கனைத்து தானே ஆக வேண்டும்!

கச்சத் தீவு?

"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது முழுத் திறமையையும் பயன்படுத்துவேன்’ என்று  வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆறு மக்களவைத் தொகுதிகளுக்கான வேட் பாளர்களை ஆதரித்துப் பேசுகையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


கடந்த பத்து  ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர் கள் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் வினா  எழுப்பி வரும் வேளையில்தான் மோடி இவ்வாறு குறிப்பிடுகிறார்.


அவரும் சரி, அவரது கட்சியினர் மற்றும்  கூட்டணிக் கட்சியினரும் சரி, இந்த வினா வுக்கான விடையை இதுவரையில் தெரிவிக்க வில்லை. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு நாங்கள் இதைச் செய்வோம் என்று கூட  சொல்ல மறுத்து வருகிறார்கள்.

திடீரென்று அவர்களால் எழுப்பப்பட்ட கச்சத்தீவு பிரச்ச னையில் கூட, கடந்த பத்து ஆண்டுகளில் கச்சத்தீவு விவகாரத்தில் இதைச் செய்தோம், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் என்றெல்லாம் அவர்கள் எந்த வாக்குறுதியும் தரவில்லை.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிற்பது ஒரு புறம் இருக்கட்டும். 


தமிழ்நாட்டிற்கு தேவை ஏற்பட்டபோது பிரதமராக மோடி செய்தது என்ன என்ற வினா மாநில மக்களின் மனங் களைப் பிசைகிறது. பெரு வெள்ளத்தில் தென் மாவட்டங்கள் தத்தளித்தபோது இந்தப் பக்கமே பிரதமர் எட்டிப் பார்க்கவில்லை. மக்களின் துய ரத்தைப் போக்க நிதி வழங்குமாறு, மாநில அரசு வலியுறுத்தியும் அதைத் தர முன்வர வில்லை.


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியதோடு அப்படியே நிற்கிறது. அதைப்பற்றி அவரும், அவர் கட்சியினரும் வாய் திறக்க மறுக்கிறார்கள். புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஆயிரம் கோடியும், மக்கள் மொழியான தமிழுக்கு சில கோடிகளும் ஒதுக்கு வதில் இருந்தே இவர்களின் முழுத்திறமை அம்பலமாகிறது.


மூத்தகுடி தமிழர் என்ற பதம், அறிவியல் பூர்வமாக நிறைவேறிவிடுமோ என்ற அச்சத்தில் கீழடியை மூடி மறைக்க ஒன்றிய அரசு செய்த தகிடுதத்தங்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடுவார்களா? அண்மையில் தேசிய ஏற்றுமதி-இறக்குமதி ஆய்வு நிறுவனம் ஒரு  புள்ளிவிபரத்தை வெளியிட்டிருக்கிறது. 


மின் னணு பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 15 ஆயிரத்து 476 கோடி ரூபாயாக இருந்த மின்னணு பொருட் களில் ஏற்றுமதி ஒரே ஆண்டில் 44 ஆயிரத்து 682 கோடியாக அதிகரித்திருக்கிறது. 


இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டாத பாஜக அரசின் பிரதமர்தான் தற்போது முழுத்திறமையைப் பயன்படுத்துவேன் என்று தேர்தல் மேடையில் நின்று முழங்கிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் இதை ஏற்கமாட்டார்கள் என்பதுதான் கள நிலவரமாகும்.

  





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?