விதி­ ­மீ­றிய

 “End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவோம்-டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப்.

தெலங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்யும்! - அமித் ஷா.

கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தாலி, பொன் குண்டுகள், வெள்ளி பூணால் திருட்டு... திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் அர்ச்சகர் ஸ்ரீவாத்சாங்கன் என்பவர் கைது.

அவதூறு,வெறுப்பு பரப்புரை செய்த்தற்காகஒரு பிரதமர் (மோடி)க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது இதுவே முதல்முறை.-ஜெயராம் ரமேஷ்.

பெண்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயைவிரும்பவில்லை.வேலையையும் விரும்பவில்லை.அவர்கள் ராமர் கோவிலை தான் விரும்பினார்கள். அதைமோடிநிறைவேற்றிவிட்டார்.எனவேமீண்டும் மோடி தான் பிரதமர். -நடிகர் சுரேஷ் கோபி.

தூத்துக்குடியில் கனிமொழி தோல்வி உறுதி.மோடி அலையில் அவர் அடித்துச் செல்லப்படுவார்.எங்கள் வேட்பாளர் வெற்றி உறுதி.-ஜி.கே.வாசன்.




நெறி தவறி­ய - விதி­ ­மீ­றிய 

மோடி­யின் உரை­கள் தேர்­தல் நடத்தை விதி­களை மீறி­ய­தா­கும் என்றுதேர்­தல் ஆணை­யத்­தி­டம் காங்­கி­ரஸ் கட்சி புகார் அளித்­துள்­ளது. தேர்­தல் தொடங்­கி­யது முதல் நெறி தவறி, முறை தவ­றித்­தான் பிர­த­மர் மோடி பேசி வரு­கி­றார். 

அவ­ரது உரை­கள் அனைத்­தும் விதி­மீ­றிய உரை­கள்­தான்.

சொந்­த­மா­கச் சொல்­லிக் கொள்ள எந்­தச் சாத­னை­க­ளும் இல்­லா­த­தால் அவ­தூ­று­க­ளின் மூல­மாக தேர்­தல் களத்தை திசை திருப்பி வரு­கி­றார் பிர­த­மர் மோடி. தமிழ்­நாட்­டி­லும் அதே அவ­தூ­று­க­ளைத்­தான் செய்­தார்.

*தமிழ்­நாடு அர­சுக்கு நிதி ஒதுக்­க­வில்லை என்­கி­றார்­கள். நான் நேர­டி­யாக மக்­க­ளுக்­குக் கொடுத்­து­விட்­டேன் –- என்று பச்­சைப் பொய்­யைச் சொன்­னார்.

*என்­னு­டைய சாத­னை­களை அச்­சி­ட­வி­டா­மல் நாளி­தழ்­க­ளைத் தமி­ழ­கத்­தில் உள்ள தி.மு.க. அரசு தடுக்­கி­றது. மக்­க­ளி­டம் சென்று அடை­யா­மல் தொலைக்­காட்­சி­க­ளை­யும் தமி­ழக அரசு கட்­டுப்­ப­டுத்­து­கி­றது - என்று அடுத்த அவ­தூறை அள்ளி வீசி­னார். 

அவ­ரது உரை­கள் அனைத்து நாளி­தழ்­க­ளி­லும் பக்­கம் பக்­க­மாக வெளி­யா­கத்­தான் செய்­தது. அவ­ரது அனைத்­துப் பொதுக்­கூட்­டங்­க­ளை­யும் தமிழ்த் தொலைக்­காட்­சி­கள் நேரலை செய்­யத்­தான் செய்­தன. யாரைத் தடுத்­தார்­கள்? ஏதோ தனக்கு எதி­ராக ஏதோ சதி நடப்­ப­தைப் போல அவரே தன்­னைப் பெரி­தாக நினைத்­துக் கொண்­டார்.

*செங்­கோல் வைத்­தேன். அதனை இவர்­கள் வாழ்த்­த­வில்லை என்­றார். ராமர் கோவி­லுக்கு வர­வில்லை என்­றார்.

*ஜெய­ல­லி­தாவை சட்­ட­ச­பை­யில் தி.மு.க. அவ­மா­னப்படுத்­தி­யது என்­றார். சட்­ட­மன்­றத்­தில் நடந்­தவை குறித்து தவ­றான தக­வலை பொது­வெ­ளி­யில் மோடி பேசி­யதே அவை உரிமை மீறல் ஆகாதா? 

அப்­படி நடந்­த­தற்கு என்ன ஆதா­ரம் இருக்­கி­றது? 

ஜெய­ல­லி­தாவே நடத்­திய நாட­கம் என்­பதை அப்­போது அவ­ரு­டன் இருந்த திரு­நா­வுக்­க­ர­சர், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் பதிவு செய்­தி­ருக்­கி­றாரே?

*தமிழ்­நாட்டு மீன­வர்­கள் இலங்­கைக் கடற்­ப­டை­யால் தாக்­கப்­பட தி.மு.க.வும் காங்­கி­ர­சும்­தான் கார­ணம் என்­றார். 2019ஆம் ஆண்டு பேசும் போது ஜெய­ல­லி­தா­வும் சோனி­யா­வும்­தான் கார­ணம் என்­றார். தேர்­த­லுக்­குத் தேர்­தல் ஆட்­கள் பெயரை மாற்­றிக் கொண்டு தப்­பாட்­டம் ஆடு­வது மோடி­யின் வழக்­கம்.

*‘தி.மு.க.வை இனி பார்க்க முடி­யாது. இனி தி.மு.க. எங்­குத் தேடி­னா­லும் கிடைக்­காது’ –- என்று மிரட்­டி­னார். அப்­பு­றம் பாண்டி பஜா­ரில் சில நூறு பேர்­க­ளுக்கு ‘ரோட் ஷோ’ காட்­டி­விட்டு களைத்­துப் போன மோடி, இதே அவ­தூ­று­களை வட மாநி­லங்­க­ளில் தொடங்கி விட்­டார்.

*ராம­ருக்­குக் கோவில் கட்­டி­னேன் என்­ப­தைத் தாண்­டிய சாதனை எது­வும் இல்லை.

*அனு­மர் பாட்­டுப் பாட நாட்­டில் அனு­மதி இல்லை என்­கி­றார். எந்த நாட்­டில் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தைச் சொல்­ல­வில்லை. இந்த நாட்டை ஆள்­வது அவர்­தான். எங்கே அனு­மர் பாட்­டைப் பாட அனு­மதி மறுத்­தார்­கள்?

*‘என்னை வீழ்த்­து­வ­தற்கு அந்­நிய நாடு­கள் சதி செய்­கின்­றன’ –- இது வட மாநி­லங்­க­ளில் செய்த பூச்­சாண்­டித் தனம். இவரை எதற்­காக உலக நாடு­கள் வீழ்த்த வேண்­டும்? அனைத்து நாடு­க­ளின் அதி­பர்­க­ளுக்­கும் மோடி நண்­பர் தானே? 

போகாத நாடு உண்டா?

 உல­கப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க இவ­ரைத்­தான் அணு­கு­கி­றார்­கள் என்று ‘பா.ஜ.க. வாட்ஸ் அப் யுனி­வர்­சிட்டி’ பால பாடம் சொல்­லுமே? 

அந்­நி­யச் சதி பீதி எடு­ப­ட­வில்லை என்­ற­தும், அடுத்து இசு­லா­மி­யர் வெறுப்பு அர­சி­யல் கை கொடுக்­குமா எனப் பார்க்­கி­றார்.

*“காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யில் இருந்­த­போது, நாட்­டின் சொத்­துக்­­களில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கே முதல் அதி­கா­ரம் என்று சொன்­னார்­கள். உங்­க­ளி­டம் உள்ள தங்­கம் உள்­ளிட்ட சொத்­துக்­க­ளைப் பறித்து அதிக குழந்­தை­கள் பெற்­றுக் கொள்­ப­வர்­க­ளி­டம் கொடுத்து விடு­வார்­கள். சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டிற்­குள் ஊடு­ரு­வி­ய­வர்­க­ளி­டம் உங்­கள் சொத்­துக்­க­ளைக் கொடுத்து விடு­வார்­கள். நீங்­கள் கஷ்­டப்­பட்டு உழைத்த பணத்தை அவர்­க­ளி­டம் கொடுக்க வேண்­டுமா? இதை நீங்­கள் ஏற்­பீர்­களா? இதைச் செய்­வோம் என்­று­தான் காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­யி­ருக்­கி­றார்­கள். தாய்­மார்­கள், சகோ­த­ரி­க­ளின் தங்க நகை­ க­ளைக் கணக்­கெ­டுத்து அவற்றை உங்­க­ளி­ட­மி­ருந்து பறித்து அவர்­­களி­டம் கொடுத்­து­வி­டு­வார்­கள். மன்­மோ­கன் சிங் என்ன சொன்­னார் தெரி­யுமா? 

நாட்­டின் சொத்­துக்­க­ளில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு முதல் அதி­கா­ரம் எனக் கூறி­னார். சகோ­தர சகோ­த­ரி­களே, இது­தான் நகர்ப்­புற நக்­சல்­கள் சிந்­தனை. 

என் தாய்­மார்­கள், சகோ­த­ரி­க­ளின் தாலி­யைப் பறிக்க யாருக்­கும் அதி­கா­ரம் இல்லை” –- இது அடுத்த எபி­சோட். இது­தான் இறுதி எபி­சோட்.

*எல்­லாச் சொத்­து­க­ளை­யும் இசு­லா­மி­யர்­க­ளுக்கு கொடுத்­து­வி­டப் போகி­றார்­கள் என்­கி­றார். அப்­படி யாருமே சொல்­ல­வில்லை.

*பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யின மக்­க­ளது இட­ஒ­துக்­கீ­டு­கள் காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் இசு­லா­மி­யர்க்­குப் போய்­வி­டும் என்­கி­றார். அப்­படி யார் சொன்­னது?

இப்­படி முழுக்க முழுக்க பொய் மூட்­டை­க­ளின் களஞ்­சி­ய­மாக இருக்­கி­றது பிர­த­மர் மோடி­யின் உரை­கள். இவ்­வ­ளவு அவ­தூ­று­க­ளான உரை­களைஆற்­றிய இந்­தி­யப் பிர­த­மர்­கள் இது­வரை இல்லை. 

வாட்ஸ் அப் மெசேஜ்­களை உரை­க­ளாக ஆக்கி வாசிப்­ப­தன் மூல­மாக, சரக்கு இல்­லாத சக்கை சர்க்­காரை அவர் இந்த பத்­தாண்டு காலம் கொடுத்­தி­ருப்­பதே திரும்­பத் திரும்ப மெய்ப்­பிக்­கப்­பட்டு வரு­கி­றது.

--------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?