சர்வதிகாரம் அன்றும் -இன்றும.
குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலப்பு? - புதுக்கோட்டை சங்கம்விடுதியில் அதிகாரிகள் விசாரணை.
மணிப்பூரில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுட்டுக்கொலை.
தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும். வானிலை ஆய்வு மையம்.
தேர்தல் விதிகளை மீறி மதரீதியாக பிரசாரம்; மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கில் நீதிபதி திடீர் விடுப்பு வழக்கு ஒத்தி வைப்பு.
மோடி கண்ணீர் விட்டு அழுவதை விரைவில் பார்க்கலாம்” : ராகுல் காந்தி !
ரூ.4 கோடி சிக்கிய பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:
மோடி அலை எதுவும் இல்லை,மோடி பேச்சு விஷம்தான் பரவியுள்ளது: -ஜெயராம் ரமேஷ்.
உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்
இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் புகார்.
சர்வதிகாரம் அன்றும் -இன்றும.
ஹிட்லர் காலத்து சர்வாதிகாரத்திற்கும், நடப்பு சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெள்ளத் தெளிவாக வேறுபிரித்து காட்டிவருகிறது பா.ஜ.க.
முன்பு, வெளிப்படையாக அடக்குமுறை, நாடுகடத்தல், சிறுபான்மையின ஒழிப்பு ஆகியவை நடத்தப்பட்டது போல, தற்போது மறைமுகமாக அதே செயல்கள் அரங்கேறிவருகின்றன.
எனினும், பா.ஜ.க நடத்துகிற இந்நாடகம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கண்டறியப்பட்டு, பா.ஜ.க.விற்கு எதிராக திரும்பி வருகிறது.
அவ்வகையில், ஒரு மாதத்திற்கு முன்பு கூட மணிப்பூர் கலவரம், விவசாய சிக்கல் ஆகியவை தொடர்பாக ஒன்றிய அரசை கண்டிக்கும் பதிவுகளை X தளத்திலிருந்து நீக்க ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் வற்ப்புறுத்துவதாக X நிறுவனமே தெரிவித்தது.
“ஒன்றிய பா.ஜ.க அரசின் கோரிக்கை, கருத்துரிமைக்கு தடையாக இருப்பது, கண்டிக்கக்கூடியதாக விளங்குகின்ற போதிலும், தவிர்க்கமுடியாமல் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்கிறோம்.
எனினும், X தள பதிவுகளின் முடக்கம் இந்தியாவிற்குள் மட்டுமே அமல்படுத்தப்படும்” என்று மக்களுக்கு வெளிப்படையான பதிவை வெளியிட்டது X நிறுவனம்.
ஒன்றிய அரசின் இந்த கருத்துரிமை பறிப்பு நடவடிக்கைக்கு உலகளவில் கண்டனங்கள் எழுந்து, அதற்கான தீர்வே கிடைக்கப்படாத நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சை செயலில் ஈடுபட்டிருக்கிறது பா.ஜ.க.
ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு எதிரான பதிவுகளை முடக்கியால் போதாது என்று, மக்களின் தனிப்பட்ட உரிமைகளிலும் மூக்கை விடும் செயல் தான் அது.
அதில் ஒரு பகுதியாக, இந்திய தகவல் தொடர்புத்துறையில், புதிய IT விதிமுறைகளை வகுத்துள்ளோம் என WhatsApp பயன்பாட்டாளர்களின் தகவல்களை சூரையாட திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க.
அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற Whatsapp நிறுவனம், “வாட்ஸ்அப் தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் பல கோடி மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப்பில் பல மில்லியன் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இது பாதுகாப்பானது. அதனை encryption செய்ய முடியாது.
புதிய IT விதிமுறைகளை சுட்டிக்காட்டி, தகவல் அனுப்பிய நபருடைய விவரங்களை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது. அது சாத்தியமில்லை.
வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில், end to end encryption-ஐ சிதைக்கும் வகையில் ஒன்றிய அரசு எங்களை கட்டுப்படுத்தினால், நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்!” என வாதிட்டுள்ளது.
இதன் வழி, மக்களின் கருத்துரிமையும், பாதுகாப்பையும் அச்சுறுத்த எண்ணும் பா.ஜ.க, ஹிடலரின் ஆட்சியை இந்தியாவிலும் செயல்படுத்த மும்முறமாக செயல்பட்டு வருவது அமபலமாகியுள்ளது.
இதற்கு உலக அரங்கில் எதிர்ப்புகள் அதிகரித்தாலும், மோடியின் ஆட்சி முடிவை தீர்மானிக்கும் இடத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்பது மக்களவை தேர்தல் முடிவுகளின் வழி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏமாற்றம்..
“தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம்” என்பதை உறுதிப்படுத்தும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகள் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளு படி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள் ளது கவலையளிக்கிறது.
தற்போதுள்ள ஏற்பாட்டில் வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் வரும்போது அதை போக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை 100 விழுக்காடு எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு களுடன் ஒப்பிட வேண்டும் என்று பெரும் பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த வழக்கு விசாரணையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான மூலக்குறியீட்டை (source code) ஆணையம் வெளியிடக்கூடாது என்றும் வெளியிட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 விழுக்காடு சேதமடை யாதவை என்றும் அவற்றை ஹேக் செய்ய முடி யாது என்றும் தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் கூறியதற்கும் மேற்கண்ட நிலை பாட்டிற்கும் முரணாக உள்ளது.
இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு தொகுதியில் பதிவான வாக்கு களில் 5 விழுக்காடு வாக்குகள் மட்டுமே விவி பேட்டுடன் ஒப்பிடப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவில் 20விழுக்காடு வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. எனவே உச்ச நீதிமன்றம் விபிபேட் சாதனத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் வாக்குகளின் விழுக்காட்டையாவது அதிகரித்திருக்கவேண்டும். தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
அப்படி கோரிக்கை வைக்கும் போது அதற்கான செலவுகளை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு ஏற்புடையது அல்ல. இது அடிப்படை உரிமைக்கு எதிரானது.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள போதிலும் விவிபேட் இயந்திரத்தை வாக்குப்பதிவின்போது கடைசியாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையம் ஏன் நிராகரித்தது என்ற கேள்வியை எழுப்பி யிருக்கவேண்டும். எனவே விவிபேட் தொடர் பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்பதைவிட நியாயமான தேர்தல் என்ற கருத்துக்கு வலுசேர்க்கவில்லை.
இந்தியதேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளிடம் மட்டுமல்ல வாக்காளர்களான மக்களிடமும் நம்பிக்கை இழந்துவிட்டது.