ஏப்ரல் ஏற்றம்?

 தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை உயர்த்தப்பட்டது.

 குறிப்பிடத்தக்கது. அதேநேரம்,  2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வை விட தற்போதைய விலையேற்றம்  குறைவாகும். 

இந்த விலையேற்றத்தின் தாக்கம் அத்தியாவசிய மருந்துகளில மட்டுமின்றி, வலிநிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் மீதும்  அடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடவடிக்கையால் 800 மருந்துகளின் விலை அதிகரிக்கும். 

அந்த பட்டியலில், பாராசிட்டமால், அசித்ரோமைசின், வைட்டமின்கள், தாதுக்கள், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க உதவும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவையும் அடங்கும். 

மேலும், அமோக்ஸிசிலின், ஆம்போடெரிசின் பி, பென்சாயில் பெராக்சைடு, செஃபாட்ராக்சில், செடிரிசின், டெக்ஸாமெதாசோன், ஃப்ளூகோனசோல், ஃபோலிக் அமிலம், ஹெப்பரின், இப்யூபுரூஃபன் போன்ற முக்கியமான மருந்துகளும் விலையேற்றம் கண்டுள்ளன. 

இந்த மருந்துகள் அனைத்தும் அத்தியாவசியமாக குறிப்பிடப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளிலும், சில்லறை விற்பனையிலும் முக்கியத்துவம் வகிக்கின்றன. 

வலி நிவாரணிகள்: டிக்லோஃபெனாக், இப்யூபுரூஃபன், மெஃபெனாமிக் அமிலம், பாராசெட்மால், மார்பின்

  • காசநோய் எதிர்ப்பு மருந்து: அமிகாசின், பெடாகுலின், கிளாரித்ரோமைசின்
  • வலிப்பு எதிர்ப்பு மருந்துகள்: க்ளோபாசம், டயஸெபம், லோராசெபம்
  • நச்சுக்கான மாற்று மருந்து: செயல்படுத்தப்பட்ட கரி, டி-பெனிசில்லாமைன், நலாக்சோன், பாம்பு விஷம் எதிர்ப்பு சீரம்
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள்: அமோக்ஸிசிலின், ஆம்பிசிலின், பென்சில்பெனிசிலின், செஃபாட்ராக்சில், செஃபாசோலின், செஃப்ட்ரியாக்சோன்
  • கோவிட் மேலாண்மை மருந்துகள்
  • இரத்த சோகைக்கான மருந்துகள்: ஃபோலிக் அமிலம், இரும்பு சுக்ரோஸ், ஹைட்ராக்ஸோகோபாலமின் 
  • பார்கின்சன்ஸ் மற்றும் டிமென்ஷியா: ஃப்ளூனாரிசைன், ப்ராப்ரானோலோல், டோனெபெசில்
  • எச்.ஐ.வி மேலாண்மை மருந்துகள்: அபாகாவிர், லாமிவுடின், ஜிடோவுடின், எஃபாவிரென்ஸ், நெவிராபின், ரால்டெக்ராவிர், டோலுடெக்ராவிர், ரிடோனாவிர்
  • பூஞ்சை எதிர்ப்பு: க்ளோட்ரிமாசோல், ஃப்ளூகோனசோல், முபிரோசின், நிஸ்டாடின், டெர்பினாஃபைன் 
  • கார்டியோவாஸ்குலர் மருந்துகள்: டிலிடாசெம், மெட்டோப்ரோலால், டிகோக்சின், வெராப்ராமில், அம்லோடிபைன், ராமிபிரில், டெல்மிசார்டன்
  • தோல் மருத்துவ மருந்துகள்
  • பிளாஸ்மா மற்றும் பிளாஸ்மா மாற்றுகள்
  • வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்: அசைக்ளோவிர், வால்கன்சிக்ளோவிர் 
    மலேரியா மருந்துகள்: ஆர்ட்சுனேட், ஆர்டெமீதர், குளோரோகுயின், கிளிண்டமைசின், குயினைன், ப்ரிமாகுயின்
  • புற்றுநோய் சிகிச்சை மருந்துகள்: 5-ஃப்ளூரோராசில், ஆக்டினோமைசின் டி, ஆல்-டிரான்ஸ் ரெட்டினோயிக் அமிலம், ஆர்சனிக் ட்ரை ஆக்சைடு, கால்சியம் ஃபோலினேட்
  • கிருமி நாசினிகள் மற்றும் கிருமிநாசினிகள்: குளோரோஹெக்சிடின், எத்தில் ஆல்கஹால், ஹைட்ரஜன் பெராக்சைடு, போவிடின் அயோடின், பொட்டாசியம் பெர்மாங்கனேட் 
  • ஹாலோத்தேன், ஐசோஃப்ளூரேன், கெட்டமைன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பொது மயக்க மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் மருந்துகள்

பட்டியலிடப்பட்ட மருந்துகள்:

இந்திய சந்தையில் சுமார் 6,000 மருந்து வகைகள் கிடைக்கும் நிலையில், அவற்றில் சுமார் 18 சதவிகிதம் பட்டியலிடப்பட்ட மருந்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

அவற்றின் விலை தேசிய மருந்து விலை நிர்ணயஆணையத்தால்நிர்ணயிக்கப்படுகிறது.


தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன்' - ஓ.பன்னீர்செல்வம் .

தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்.

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை.

மாண்புமிகு 29 பைசா மோடியை செல்லா காசாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்: சிதம்பரத்தில் திருமாவளவனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தேர்தல் அறிக்கை தயாரிக்க மறந்த பாஜ: கடைசி நேரத்தில் குழுஅமைப்பு.காங்கிரஸ் கிண்டல்.

ஊழல் குடுமி பாஜ கையில் இருப்பதால் பழனிசாமியால் ஒருபோதும் பாஜவை எதிர்க்க முடியாது .தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் .

வரி பயங்கரவாதம்

பா.ஜ.க. தலை­மை­யும், பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் நிலை­கு­லைந்து போயி­ருக்­கி­றார்­கள் என்­ப­தற்கு உதா­ர­ணம், தவ­றுக்கு மேல் தவறு செய்து கொண்டு இருக்­கி­றார்­கள். வரு­மான வரி கணக்­கில் முரண்­பாடு இருப்­ப­தா­கச் சொல்லி காங்­கி­ரசு கட்­சிக்கு 1,823 கோடி ரூபாயை அப­ரா­தம் விதித்­துள்­ளார்­கள். 

இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்கு அப­ரா­தம் விதித்­துள்­ளார்­கள். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இவர்­கள் நிம்­ம­தி­யாக பங்­கெ­டுக்­கக் கூடாது என்­பதுதான் இதன் நோக்­கம், வேறு எது­வு­மில்லை!

ஐ.நா.சபையே இத­னைக் கண்­டித்து விட்­டது. “ஒரு நாட்­டில் மக்­க­ளின் அர­சி­யல் மற்­றும் சிவில் உரி­மை­கள் பாது­காக்­கப்­பட வேண்­டும். இந்­தி­யா­வில் அனை­வ­ரின் உரி­மை­க­ளும் பாது­காக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கி­றோம். 

இந்­தி­யா­வில் சுதந்­தி­ர­மான மற்­றும் நியா­ய­மான முறை­யில் தேர்­தல் நடை­பெ­று­வதை உறுதி செய்ய வேண்­டும்” என்று ஐக்­கி­ய­நா­டு­கள் அவை சார்­பி­லான அறிக்கை, மோடிக்கு எதி­ரான கண்­டன அறிக்­கை­யா­கவே வெளி­யாகி உள்­ளது. காங்­கி­ரஸ் கட்­சி­யின் வங்­கிக் கணக்கை முடக்­கி­ய­தை­யும், அப­ரா­தம் விதித்­த­தை­யும், டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வாலை கைது செய்­த­தை­யும் சுட்­டிக் காட்டி ஐ.நா. இந்த அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

உல­க­நா­டு­க­ளால் பாராட்­டப்­ப­டும் பிர­த­மர் என்று மோடி­யைச் சொல்­லிக் கொள்­கி­றார்­களே, அவர் ஐ.நா.அறிக்­கைக்கு பதில் சொல்ல வேண்­டாமா? உலக நாடு­கள் மத்­தி­யில் இந்­தி­யா­வின் மானம் காற்­றில் பறக்­கி­றதே?

 இதற்கு யார் கார­ணம்? மோடிதானே!

காங்­கி­ரஸ் கட்சி 2018-–19 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரு­மான வரிக் கணக்கை 44 நாட்­கள் தாம­த­மா­கத் தாக்­கல் செய்து விட்­ட­தாம். அத­னால் அந்­தக் கட்­சி­யின் 4 வங்­கிக் கணக்­கு­களை முடக்கி இருக்­கி­றார்­கள். அதற்கு 210 கோடி ரூபாய் அப­ரா­தம் விதித்­துள்­ளார்­கள்.

2017-–18

,


2018 – -19


2019- – 20

2020 – -21 -– ஆகிய நான்கு நிதி­யாண்­டு­க­ளுக்­கான வரு­மான வரிக் கணக்­கி­லும் முரண்­பா­டு­க­ளாம். இதை வைத்து 1,823 கோடி ரூபாயை அப­ரா­த­மா­கச் செலுத்த வேண்­டும் என்­கி­றார்­கள்.

 இதில் 1,076 கோடியே 35 லட்­சம் ரூபாய் அப­ரா­தம்.மீதி உள்ள தொகை அதற்­கான வட்­டித் தொகை­யாம். இவை ஏற்­க­னவே நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள வழக்­கு­கள் ஆகும்.

 டெல்லி உயர்­நீ­தி­மன்­றத் தீர்ப்பை எதிர்த்து தடை வாங்க காங்­கி­ரஸ் கட்­சிக்கு உரிமை இருக்­கி­றது. அதற்­கான நேரத்தை காங்­கி­ரஸ் கட்சி பயன்­ப­டுத்­திக் கொள்ள அனு­ம­திக்­கா­மல் அப­ரா­தம் போட்­டுள்­ளது.

 பச்சை அர­சி­யல் பழி­வாங்­கு­தல் அல்­லவா? 

தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சியை பங்­கெ­டுக்க விடா­மல் தடுக்­கும் சூழ்ச்சி இது.

காங்­கி­ரஸ் கட்­சியை அர­சி­யல் ரீதி­யாக மக்­கள் மன்­றத்­தில் எதிர்­கொள்ள தைரி­யம் இல்­லா­மல், இப்­படி கொல்­லைப்­பு­றம் வழி­யாக காங்­கி­ரஸ் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தப் பார்க்­கி­றது பா.ஜ.க. ‘வரி பயங்­க­ர­வா­தம்’ என்று குற்­றம் சாட்டி இருக்­கி­றார் ராகுல் காந்தி.

தேர்­தல் பத்­திர ஊழல் வழக்­கில் சிக்­கி­யது முதல் விழி­பி­துங்­கிக் கிடக்­கி­றது பா.ஜ.க. ரூ.8 ஆயி­ரம் கோடி பணத்தை தேர்­தல் பத்­தி­ரங்­க­ளின் மூல­மாக சுருட்டி இருக்­கி­றார்­கள்.

“தேர்­தல் பத்­தி­ரங்­கள் வழி­யாக நன்­கொடை வழங்­கி­ய­தன் மூலம் 38 கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், 179 முக்­கி­ய­மான ஒப்­பந்­தங்­கள் மற்­றும் திட்­டங்­களை மத்­திய மற்­றும் பா.ஜ.க. ஆளும் மாநில அர­சு­க­ளி­டம் இருந்து பெற்­றுள்­ளது.

 இந்த நிறு­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூல­மாக ரூ.2,004 கோடி நன்­கொடை வழங்­கி­ய­தன் மூல­மாக மொத்­தம் ரூ.3.8 லட்­சம் கோடி மதிப்­புள்ள திட்­டங்­கள் மற்­றும் ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­றுள்­ளன.41 கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் மொத்­த­மாக 56 முறை, அம­லாக்­கத் துறை, சிபிஐ, வரு­மான வரித்துறை சோத­னை­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ளன. 

இந்­நி­று­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு ரூ.2,592 கோடி கொடுத்­துள்­ளன. இதில் ரூ.1,853 கோடி விசா­ரணை அமைப்­பு­க­ளின் சோத­னைக்­குப் பின்­னர் கொடுக்­கப்­பட்­டுள்­ளது”என்று ஜெய்­ராம் ரமேஷ் குற்­றம்­சாட்டி இருக்­கி­றார். 

இவை எல்­லாம் வெளி­யில் பரவி வரு­கி­றது. பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்­ப­லம் ஆகி வரு­கி­றது. அதில் இருந்து திசை திருப்­ப­வும் இதுபோன்ற நட­வ­டிக்­கை­யைச் செய்­கி­றார்­கள்.

“மது­பான முறை­கேடு புகா­ரில் கைது செய்­யப்­பட்ட அர­விந்தோ ஃபார்மா இயக்­கு­ன­ரி­டம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்­தல் நன்­கொடை பத்­தி­ரத்தை பெற்­றுள்­ளது. ரூ.55 கோடிக்கு பா.ஜ.க.வுக்கு தேர்­தல் பத்­தி­ரம் வழங்­கிய பின்­னர் அர­விந்தோ ஃபார்மா இயக்­கு­னர் ஜாமீ­னில் விடு­வி­டுக்­கப் பட்­டி­ருக்­கி­றார்.

 மது­பான வழக்கு குற்­ற­வா­ளி­யி­டம் இருந்து ரூ.55 கோடி நன்­கொடை பெற்­றது குறித்து பிர­த­மர் மோடி­யும், பா.ஜ.க. தலை­வர் நட்­டா­வும் விளக்­கம் அளிக்க வேண்­டும். இது குறித்து அம­லாக்­கத்­து­றை­யும் விளக்­கம் அளிக்க வேண்­டும்” – என்று - ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்­துள்­ளது. பா.ஜ.க.வின் யோக்­கி­யதை இது­தான்.

டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் கைது செய்­யப்­பட்­டுள்ள மது­பான கொள்கை வழக்­கில் மிக முக்­கி­யக் குற்­ற­வாளி ஒரு­வ­ரின் பெயர் ரகாவா மாகுண்டா. இவர் அப்­ரூ­வ­ராக மாறி­விட்­டார். 

இவ­ரது தந்தை ஸ்ரீநி­வா­சலு, தெலுங்கு தேசம் கட்சி வேட்­பா­ள­ராக ஆந்­தி­ரா­வில் போட்­டி­யி­டு­கி­றார். அவரை ஆத­ரிக்­கி­றது பா.ஜ.க. கட்சி. இவர்­க­ளது யோக்­கி­யதை இது­தான்.

ஏர் இந்­தியா –- இந்­தி­யன் ஏர்­லைன்ஸ் இணைப்பு வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்டு அம­லாக்­கத்­துறை விசா­ர­ணை­யில் இருப்­ப­வர் பிர­புல் படேல். இவர் இப்­போது பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் இருக்­கி­றார். இந்த வழக்கை முடித்­துக் கொள்­கி­றோம் என்று டில்லி ரோ அவென்யூ நீதி­மன்­றத்­தில் சி.பி.ஐ. மனு போட்­டுள்­ளது. 

அவ்­வ­ளவு தான் பா.ஜ.க. வாஷிங் மிஷி­னில் பிர­புல் படேல் வெளுக்­கப்­பட்டு விட்­டார். வெளியே வந்­து­வி­டு­வார். இவர்­களது யோக்­கி­யதை இது­தான்.

இதை­யெல்­லாம் மறைக்­கவே காங்­கி­ரஸ் கட்­சி­யின் வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­ப­டு­கி­றது. முடக்­கு­வோர், விரை­வில் முடக்­கப்­ப­டு­வார்­கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?