செயற்கை மழை வெள்ளம்!

 மணிப்பூர் பாஜ தலைவர் காங்கிரசில் இணைந்தார்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி,மதுரை,திருச்சி,கோஙை,சேலம் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!

முந்தைய 9 ஆண்டுகளை விட பாஜ ஆட்சியில் ஈடி சோதனை பல மடங்கு அதிகரித்துள்ளது: புள்ளி விவரங்கள் வெளியீடு.

குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி.

துபாய் மழை!

துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதற்கு செயற்கை மழைதான் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாலைவன பூமியான துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கடும் வெப்பநிலையை தாக்குபிடிக்க அவ்வப்போது செயற்கை மழை வரவழைக்கப்படும்.

 வானில் விமானங்களில் இருந்து சில ரசாயனங்கள் தூவப்பட்டு செயற்கை மழை வரவழைக்கப்படும். 

இது மேக விதைப்பு எனப்படும்.


குடிநீர் உற்பத்திக்கும், நிலத்தடி நீரை பெருக்கவும் அவ்வப்போது இவ்வாறு செயற்கை மழை வரவழைப்பது வழக்கம்.


 அந்த வகையில் தற்போது அதிகப்படியான மேக விதைப்பு செய்யப்பட்டதால்தான் துபாயில் வரலாறு காணாத மழை கொட்டியிருப்பதாக டபிள்யுஏஎம் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


துபாய் சர்வதேச விமான நிலைய வானிலை தரவுகளின்படி, கடந்த 15ம் தேதி மாலையில் மழை தொடங்கியது. 20 மிமீ மழை பெய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மழை தீவிரமடைந்து நாள் முழுவதும் ஆலங்கட்டி மழை கொட்டியது. 


இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 142 மிமீ மழை பதிவாகி உள்ளது. 


துபாயின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் 94.7 மிமீ மட்டுமே. இப்படி ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால், விமானம் நிலையம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்தது.

மழை அரிதாக பெய்வதால் துபாய் சாலைகளில் பெரிய அளவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை.


 இதனால் அனைத்து முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. துபாய் மட்டுமின்றி பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிலும் மழை பெய்தது.


இந்த மழைக்கு முன்பாக கடந்த 14ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இவ்வாறு அதிகப்படியான மேக விதைப்பால்தான் ராட்சத மழை கொட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் தரப்படவில்லை. 


இந்த வரலாறு காணாத மழையில் ஓமனில் பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 10 மாணவர்கள் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். ஓமனில் மழைக்கான பலி 19 ஆக அதிகரித்ததாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


கனமழை காரணமாக, கேரளாவிலிருந்து நேற்று சார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


 கொச்சியிலிருந்து துபாய், சார்ஜா, தோகாவுக்கு செல்ல வேண்டிய 5 விமானங்களும், கோழிக்கோட்டிலிருந்து சார்ஜா, துபாய்க்கு செல்ல வேண்டிய 2 விமானங்களும், திருவனந்தபுரத்திலிருந்து துபாய் மற்றும் சார்ஜாவுக்கு செல்ல வேண்டிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

அமுலாக்கத்துறை சுறுசுறுப்பு!

வரி ஏய்ப்பு, கருப்பு பணம் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற கடுமையான குற்றங்களை தடுக்க கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) அமல்படுத்தப்பட்டது. 


 பாஜ அரசு இந்த சட்டத்தை பயன்படுத்தி அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


இந்நிலையில், காங்கிரசின் ஐமு கூட்டணி அரசின் 2005 ஜூலை முதல் 2014 மார்ச் வரையிலும், பாஜ அரசின் 2014 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலுமான அமலாக்கத்துறையின் செயல்பாடு குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கடந்த 10 ஆண்டுகளில் 5,155 பிஎம்எல்ஏ வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் (2005-2014) 1,797 புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. 

அதாவது பாஜ ஆட்சியில் வழக்கு பதிவு 3 மடங்கு அதிகரித்துள்ளது.


* இந்த சட்டத்தின் கீழ் 2014ம் நிதியாண்டில் முதல் தண்டனையை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 63 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.


* 2014-2024 காலகட்டத்தில் நாடு முழுவதும் 7,264 ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இது முந்தைய காலகட்டத்தை விட 86 மடங்கு அதிகம். காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 84 சோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

* கடந்த 10 ஆண்டுகளில் 755 பேர் கைது செய்யப்பட்டு, ₹1,21,618 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவே முந்தைய 9 ஆண்டில், 29 கைதுகள் மற்றும் ₹5,086.43 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 மடங்கும், சொத்துக்கள் பறிமுதல் 24 மடங்கும் அதிகரித்துள்ளது.

* கடந்த பத்தாண்டுகளில் 1,971 அசையா மற்றும் அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. முந்தைய காலகட்டத்தில் 311 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

* கடந்த 10 ஆண்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் 12 மடங்கு அதிகரித்து, 1,281 ஆக உள்ளது. முந்தைய 9 ஆண்டில் 102 குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* பல்வேறு நீதிமன்றங்கள் மூலம் 36 வழக்குகளில் 63 பேர் மீது வழக்குத் தொடர ED 36 வழக்குகளில் தண்டனை உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் மொத்தம் 73 குற்றப்பத்திரிகைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

* கடந்த பத்து ஆண்டுகளில் ₹ 2,310 கோடி மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. முந்தைய காலகட்டத்தில் இது ₹ 43 லட்சமாக இருந்தது.

* கடந்த 10 ஆண்டுகளில் 43 நாடு கடத்தல் கோரிக்கை மற்றும் 24 இன்டர்போல் நோட்டீஸ்களை அமலாக்கத்துறை விடுத்துள்ளது. இதற்கு முன் இது போன்ற எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

* கடந்த 10 ஆண்டில் 4 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதே நேரத்தில் தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் சஞ்சய் பண்டாரி போன்றவர்களை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?