தலைக்கேறிய பயம்!

 தகுதியற்ற வார்த்தைகளாக வருகிறது!

2024 மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முடிந்ததையடுத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. 

அந்தவகையில், கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி அப்பட்டமாக இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை கக்கியுள்ளார்.

மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் (தாலி உட்பட) கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று முன்பு மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது? நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும் ( இஸ்லாமியர்களை குறிப்பிடுகிறார்) மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?”  என்று அப்பட்டமான வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வெறுமனே கூகுளில் தேடுவதன் மூலம் கண்டடையக் கூடிய காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை இருக்கு என்று பொய்யாக பேசி வெறுப்பை கக்கிய மோடியின் இப்பேச்சு, நாட்டில் உள்ள பல்வேறு பிரிவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஊடகங்கள் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தி செய்திகளையும் கருத்துப்படங்களையும் வெளியிட்டு வருகின்றன. “இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

துகுறித்து பேசிய காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “இந்திய வரலாற்றில், மோடி செய்த அளவுக்கு எந்தப் பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை” என்றார். 

அதேபோல ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், “முதல் கட்ட வாக்குப்பதிவின் ஏமாற்றத்திற்குப் பிறகு பிரதமரின் பொய்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டன. அதனால்தான் அவர் மக்கள் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறார்” என்றார்.

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா “எக்ஸ்” தளத்தில் வெளியிட்ட கருத்தில், “ஒரு தேர்தலில் வெற்றிபெற, நீங்கள் இந்து-முஸ்லிம் என்ற பெயரில் பொய்களைப் பரப்புகிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம், இந்து என ஏதேனும் வார்த்தை இருந்தால் காட்டுமாறு பிரதமருக்கு சவால் விடுகிறேன். இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது பொய் சொல்வதை நிறுத்துங்கள்” என்றார்.

உண்மையில், மோடிக்கு இத்தேர்தலில் தோல்வி பயம் தலைக்கேறியுள்ளது. மாநில உரிமைக்கான லடாக் மக்கள் போராட்டம், மோடி அரசிற்கு எதிரான ஹரியானா, பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம், கனிம-வள கொள்ளைக்கெதிராக காடுகளை பாதுகாப்பதற்கான பழங்குடியின மக்கள் போராட்டம், மஹாரஷ்டிராவில் இடஒதுக்கீடுக்கான மராத்தா மக்கள் போராட்டம், குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு எதிரான ராஜ்புத் மக்களின் போராட்டம் என நாட்டின் எல்லா மூலைகளிலும் மோடி அரசிற்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பு குரல்களும் தீவிரமடைந்து வருகின்றன.

ஒட்டுமொத்த இந்திய மக்களும் “மோடி வேண்டாம்” என்பதில் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் வெற்றிபெற எந்த இழிநிலைக்கும் செல்லலாம் என்ற நிலைக்கு மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது. 

இதன் காரணமாகவே, “எதை தின்றால் பித்தம் தெளியும்?” என்ற போக்கில் கீழ்த்தரமான வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், மோடியின் இப்பேச்சுக்கும் இந்தியா முழுக்க எதிர்ப்பு வந்தபோதும் இந்திய தேர்தல் ஆணையமோ மோடியின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகள், தேர்தல்நிதிப்பத்திரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் என எந்தவொரு விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் வாய்மூடியே கிடக்கிறது.

இந்நிலையில் அப்பட்டமான பொய் வெறுப்பு பிரச்சாரத்தை மோடி  செய்கிறார் என தெரிந்தும் அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அப்பட்டமாக தேர்தல் ஆணையம் மோடி அரசின் வாலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் துணையோடு மோடியும் அவர் தலைமையிலான பாசிசக் கும்பலும் எந்தவித தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாமல் இந்துத்துவ முனைவாக்க வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

-------------------------------------------------------

போலி தாமரை

நாட்டில் மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட தேர்தலுக்கு வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம், சூரத்தில் காங்கிரஸ் சார்பாக நிலேஷ் கும்பானி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். 

அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரை முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில் குளறுபடி இருப்பதாகக் கூறி, மாவட்ட தேர்தல் அதிகாரி செளரப், காங்கிரஸ் வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தார். நிலேஷ் கும்பானிக்கு பதில் வேறு ஒரு மாற்று வேட்பாளரும் காங்கிரஸ் சார்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Gujarat: போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர்; சாடும் காங்கிரஸ்.. நடந்தது என்ன?

அவரது மனுவையும் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துவிட்டார். காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனுக்களில் முன்மொழிந்திருப்பவர்கள் குறித்து பா.ஜ.க வேட்பாளரின் ஏஜென்ட் தினேஷ் சந்தேகம் தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தினார். காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களை முன்மொழிந்தவர்கள் தாங்கள் அந்த மனுவில் கையெழுத்திடவில்லை என்று கூறி, கடிதம் கொடுத்து இருப்பதால் வேட்பு மனுக்கள் உண்மையானதாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி, வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி செளரப் தெரிவித்தார்.

வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக நிலேஷ் வழக்கறிஞர் பாபு தெரிவித்தார். 


காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''சூரத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை காட்டுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் 7 சுயேச்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

ஆனால் அவர்கள் அனைவரிடமும் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் முகேஷ் தலால் தரப்பில் மிரட்டிப்பேசி, அவர்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும்படி செய்துவிட்டனர்.

பாஜக வேட்பாளர் முகேஷ்
பாஜக வேட்பாளர் முகேஷ்

அவர்களும் வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளான இன்று தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். 


இதையடுத்து முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 


இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சூரத், முதல் தாமரையை பிரதமர் மோடிக்கு கொடுத்திருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்ட மூன்று பேரையும் முகேஷ் ஆட்கள் கடத்திச் சென்றுவிட்டதாக நிலேஷ் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?