இன்று...!

 சென்னை, ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். காரில் வந்த 4 பேர்  கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டி போட்டு தப்பியோட்டியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் முத்தாபுதுபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

------------------

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் இறுதி வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. 

-----------------

“ரூ.1.45 லட்சம் கோடி  கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் மத்திய பாஜக அரசால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?; நடுத்தரக் குடும்பத்தினர் ஜி.எஸ்.டி வரியைப் பார்த்து கப்பர் சிங் வரி எனப் புலம்புகின்றனர். ஜி.எஸ்.டி வரியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 


-----------------------

 உதகையில் நாளை நடைபெற இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனப் பேரணி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

-----------------------

பூத் சிலீப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

---------------------

நாடு முழுவதும் ரூ.4658.16 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள், ரூ.4.43 கோடி அளவில் மதுபானம் ரூ.78.75 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

----------------------

`இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என்ற விளம்பரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

----------------------

பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் நிலையை கண்டு கொள்ளவில்லை; இதுதான் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு;அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார்கள். தமிழர்களின் தமிழ் மொழி, கலாச்சாரம், அடையாளங்களை அழிப்பதற்கு பாஜகவினர் முயற்சி செய்கின்றனர்-  ராகுல் காந்தி 

-----------

நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் ₹11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பா.ஜ.க. அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. 33% மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பாஜக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், அது இப்போதைக்கு அமலுக்கு வராது4 கோடி வீடுகளைக் கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52000 வீடுகளைக் காட்ட முடியுமா?அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ₹1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?வேளாண் விளைப்பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவதுபுதியசிந்தனைஅல்ல-ப.சிதம்பரம் .

--------------------------

கவிதாவிற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் சிபிஐ காவலை, ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

----------------------

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு. தங்கம் ஒரு கிராம் ரூ.6,790-க்கும், சவரன் ரூ.54,320-க்கும் விற்பனையாகிறது. 

------------------------

நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டதுநெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்குநெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டதுதாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து சம்மனை துரையிடம் வழங்கினார். எப்.ஐ.ஆரில் முக்கியத் தகவல்

சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளதுபாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்ததாக தகவல்நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் தகவல்"வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம்"தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல்நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு வருமாறு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

---------------------------

அண்ணாமலை மீது     தேர்தல் விதிமீறலல் வழக்குபதிவு.புகாரின் பேரில்  2 பிரிவின் கீழ் அண்ணாமலைமீதுசூலூர்காவல்நிலையத்தில் வழக்குபதிவு.

----------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?