மார்ச் 19 இல் பூமிக்கு அருகே வருகிறது சந்திரன்!


ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றிவரும் நிலவு  வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வருகிறது.  பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 238857 மைல்களாகும்  அதாவது 384403 கிலோ மீற்றர்கள் ஆகும்.
அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும்  பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 406395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.
அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 357643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தகதி சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 221567 மைல்களாக அதாவது 354507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?