”சே”க்குப்பின் பிரபாகரன் தான்,,,,,,

சேகுவேராவிற்கு பின்னர் பிரபாகரன் தான் சிறந்த கெரில்லா தலைவர்

கடந்த 30 வருடகாலத்தில் பிரபாகரந்தான் ஒரே ஒரு சிறந்த கெரில்லா தலைவர். அதைவிட சேகுவேராவிற்கு பின்னர் அவரைத்தான் சிறந்த உலகில் கெரில்லா தலைவராக என்னால் பார்க்க முடியும் என கூறியுள்ளார் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கான செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றினை எழுத தனக்கு பிரபாகரன் அனுமதி தந்ததாகவும் ஆனால் கடைசிவரை நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இன்று இராஜபக்‌ஷவின் தயவில்தான் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனிற்கு பின்னர் தமிழர்களுக்கு தலைமைத்துவம் இல்லை.
அப்படி இருந்தாலும் பிரபாகரன் போல் கிடைக்காது. தமிழ் மக்களை கடந்த 30 வருடமாக வழி நடத்தி வந்த தலைவர் திடீரென விட்டுவிட்டு சென்று விட்டார் எனவும் அதனால் தமிழர்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ள அனிதா பிரதாப் அதற்கு பிரபாகரனை மட்டும் குறை சொல்ல முடியாது பூகோள அரசியலே காரணம் என்கின்றார்.
சீனா, இந்தியா உதவி இருக்காவிட்டால் பிரபாகரனை தோற்கடித்திருக்க முடியாது எனவும் கூறியுள்ளார் அனிதா பிரதாப்.
        நேரடி மோதல் ராஜபக்சேவைவிட,ராமனைப்போல் மறைந்திருந்து அம்பெய்திய இந்தியா,இலங்கையில் தளம் அமைக்க கூலிப்படையான சீனா 
 செய்த சதிதானே ஒரு மாவீரனைக் காவு கொண்டது. இந்தி[சோனி]யாவின் செயல் தமிழுள்ளங்களில் மாறாவடுவை ஏற்படுத்தி விட்டது.
 புறனானுற்றுத்தமிழனுக்கு இவை இன்னுமொரு பாடமே.
                                                                                                     நன்றி:பதிவு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?