சுய மரியாதை[அ]சிங்கம்

"இன்று  எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். காலை முதல் தொகுதி உடன்பாடு குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் நிறைவை எட்டியுள்ளது. திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளிடையே தொகுதிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.திமுக 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63, பாமக 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்கு நாடு முன்னேற்ற கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.இழுபறி, தயக்கம்: பேச்சுவார்த்தையின் இடையே இழுபறி, தயக்கம் என்ற நிலை இருந்தாலும் கூட நம்முடைய அந்த நிலையை பத்திரிகைகள் தரக்குறைவாக எழுதி உறவே ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் தவறாக திசை திருப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டன. அவர்களுக்கு நல்ல பதிலாக இந்த அறிவிப்பு இருக்கும் என எண்ணுகிறேன்.திமுக அணியில் உள்ள கட்சிகள் நட்பு, நேசம் கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டுள்ளன.
திமுக-காங்கிரஸ் உடன்பாடு.""
 இது ஒரு அரசியல் அடிமையின் வாக்குமூலம்.இரு தினங்களுக்கு முன் உறையில் இருந்து வாளைக் கழற்றி சுழற்றி வீரன்
அபிமன்யுவாக காட்சியளித்தவர் ,இன்று சக்கரவியூ
காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள்
கத்தில் தானே மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டு
பத்திரிக்கைகள் மீது பழிபோடும் சோகம்.
ஓட,ஓட விரட்டி தனது காரியத்தை சாதித்துக் கொண்டது காங்கிரஸ்.
தி.மு.கழகத் தொண்டர்கள் மட்டுமின்றி,காங்”தொண்டர்களும் இணைந்து வேலை செய்ய மனதளவில் இனி ஒற்றுமை இருக்குமா?இருவருமே அடிப்படையில் கூட்டணியை விரும்பவில்லையே. அப்படி காங்”கிடம் கருணாநிதி பணிந்து,குனிய வேண்டிய நிர்பந்தம் என்னவந்தது,எல்லோரும் நினைக்கும் அலைக்கற்றை விவகாரம் தானா? குடும்பத்தை காப்பாற்ற தனது சுயமரியாதையை விட்டுக் கொடுத்தால் சரி. ஒட்டு மொத்த தொண்டர்களின் மானத்தையும் அல்லவா குழி தோண்டி புதைத்து விட்டார் தி.மு.க.தலைவர்.அது மட்டுமின்றி இனி இவர்கள் தேர்தல் பிரசாரம் மக்களிடம் எடுபடுமா. 
இந்திரா காலத்தில் அவசர நிலையில் அசராமல் நின்று எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் அவர் மருமகள்,பேரன் காலில் விழுந்தது காலத்தின் கட்டாயம் அல்ல.காலத்தின் முடிவு காலம்.
 இது பகுத்தறிவு சிங்கம் ஒன்று சுயமரியாதை [அ]சிங்கமான காலம் எனக் கொள்ளலாமா?
கொஞ்சம் நஞ்சம் இருந்த பொதுமக்கள் ஓட்டும் இனி இவர்களுக்கு இல்லை.
இன்று மகிழ்ச்சியான நாளாக அவருக்கு இருக்கலாம்.ஆனால் மே13 மகிழ்ச்சியான நாளாக அமையாது எனத் தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?