மூவாயிரம் கோடி ராசா பதுக்கலா
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 3 ஆயிரம் கோடியை தனது மனைவியின் பெய ரில் மொரீசியஸ் மற்றும் சீசல்ஸ் நாடு களில் உள்ள வங்கிகளில் முதலீடு செய் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிபிஐ அதிகாரிகள் ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் திட்ட மிட்டு செய்யப்பட்ட முறைகேட்டின் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட் டுள்ளது என்று சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஊழல் மூலம் ஆ.ராசாவுக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடிவரை லஞ்சமாக தரப் பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இந்த பணத்தை ஆ.ராசா தனது மனைவியின் பெயரில் கணக்குத் துவங்கி மொரீசியஸ் மற்றும் சீசல்ஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளார்.
இந்தப்பணம் தொடர்பாக மொரீ சியஸ் மற்றும் சீசல்ஸ் நாட்டு அதி காரிகளுக்கு சிபிஐ சார்பில் ஏற்கெ னவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், மொரீசியஸ், சைப்ரஸ், துபாய், ரஷ்யா, நார்வே, ஜெர்ஸி-ஐஸ் லாண்டு, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐஸ் லாண்டு உள்ளிட்ட பல்வேறு நாடு களில் உள்ள வங்கிகளில் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பூர்வாங்க விசாரணை நடை பெற்றது. இதில் மொரீசியஸ் மற்றும் சீசல்ஸ் வங்கிகளில் ஊழல் பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டறியப் பட்டு அந்த நாடுகளுக்கு தகவல் தரப் பட்டுள்ளது என்று சிபிஐ வட்டாரம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு தெரிவித்துள்ளது.
இது உண்மையாய் இருக்குமா ?
இல்லை அதிக இடம் பெற காங்கிரஸ் தகவலை கசியவிடுள்ளதா?
இது போன்ற தகவல்களை சி.பி.அய், நீதிமன்றத்தில் கூறா மல் வெளியேபத்திரிகைகளுக்கு முதலில் சொல்வது காங்” வேலையாகத்தான் இருக்கும். முலாயம்,மாயாவதி,லல்லு போன்றவர்களை தனக்கு ஆதரவாக இடதுசாரிகளுக்கு எதிராக வாக்களிக்க சோனியா சி.பி.அய் யைக்காட்டித்தானே மிரட்டினார். அதே ஆயுதத்தை இப்போது ஆட்சியில் பங்கு கேட்க பயன் படுத்துகிறார் என்றே தெரிகிறது.
ஊழல் பணம் பதுக்கிய இடம் தெரிந்த பின்னர் எதற்காக இன்னும் பிடியை இருக்காமல் சி.பி.அய் காத்திருக்கிறது. சீட்டு ஒதுக்கீடு முடிவுக்காகவா?