நாற்காலி கனவுகள்
சனிக்கிழமை [05-03-11] மாலை நடைபெற உள்ள திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் கருணாநிதி அதில் கூறியிருந்தார்.
இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி அந்தரத்தில் ஊசலாடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 'பிரச்சனை தீர்ப்பாளர்' பிரணாப் முகர்ஜியை டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்தித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலை பற்றி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர் கூட்டணி தொடர்வதாகவும், எல்லை பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
"எங்களது அரசியல் உறவு குறித்து நான் உறுதி கூறுகிறேன்.சில நேரங்களில் எங்களுக்கிடையே சில பிரச்சனைகள் இருந்தன.பிரச்சனையை உருவாக்கும் திறமை எங்களுக்கு உள்ளது.அதே சமயம் அதை தீர்க்கும் திறமையும் உள்ளது; தீர்க்கப்படும்" என்று பிரணாப் கூறினார்.
இதனால் கூட்டணி முறியாது என்றே கருதப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் சற்றும் எதிர்பாராத முடிவை எடுத்து, அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது திமுக.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்திற்கு பின்னர், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டது.
மேலும் மத்திய கூட்டணி அரசிலிருந்தும் விலகுவதாக அறிவித்த திமுக, பிரச்சனையின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியும் முடிவாகி விட்ட நிலையில், காங்கிரஸ் தற்போது போக்கிடம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊருக்கு இரண்டுபேர்கூட இல்லாமல் மத்தியில் ஆட்சியை[அதுவும் கூட்டணியால்]பிடித்து விட்ட தெனாவெட்டில் இருந்த காங்’குக்கு
ஜெய்ஹிந்த்,

இதுசரியான ஆப்பு.
கூட்டணிகட்சிகளையும் அவமதித்தும்,மிரட்டியும் காரியம் சாதித்த காங்கிரசுக்கு வங்கத்தில் மம்தா ஆப்பு அவ்வப்போது வைக்கிறார்.இப்போதும் வங்கத்தேர்தலில் மிகக்குறைந்த இடத்தையே ஒதுக்குவதாக பிடிவாதம் செய்துள்ளார்.அங்கு காங்” செல்வாக்கு தமிழகத்தைபோலதான்.
இளங்கோவன் ,யுவராஜா,கார்த்தி சிதம்பரம்,போன்றவர்கள் கட்சி செல்வாக்கைப்பற்றி ராகுலுக்கு உசுப்பேத்தியே இதை செய்து முடித்துள்ளார்கள்.
ஆமாம்,இப்போது காங்கிரஸ் யாரிடம் கூட்டுவைக்கும் .சரத் இருக்கிறார்.மொத்த சீட்டுகளையும் சமமாக பங்கு வைத்துத்தருவதாகவும் ஆட்சியில் பங்கு தருவதாகவும் கூறினால் ஒருவேளை கிருஸ்ணசாமி,கார்திக்,விஜயகாந்த், ராமதாஸ் வரலாம்.கனவும் பலிக்கலாம்.ஜெய்ஹிந்த்,