வருந்துகிறோம்,,,,,,
ஜப்பான் மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
நாகசாகி,கிரொசிமாவில் அணுகுண்டுவீச்சில் எழுந்துவந்த ஜப்பானியர் இப்பேரழிவையும் எதிர்கொண்டு மீள்வர்.ஆனால் சொந்தங்களின் உயிர் இழப்புகளுக்கு நாம் வருத்தம் தெரிவிப்பதைத்தவிர வேறென்ன செய்ய இயலும்.
வருத்தத்துடன் :சுரன் குறிப்புகள்,
அணு நிலையம் வெடித்து சிதறுகிறது |
கடுமையான நிலநடுக்கமும் சுனாமியும் அடுத்து ஜப்பானில் மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஆரம்பித்துள்ளன. 1300 கொல்லப்பட்டுள்ளதாக இதுவரையில் தெரியவருவதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மினாமிஸன்ரிகு என்ற ஒரு துறைமுக நகரில் மட்டும் பத்தாயிரம் பேர் வரையிலானோர் கதி என்னானது என்று தெரியாமல் இருக்கிறது என ஒரு தகவல் கூறுகிறது.
இந்த நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடமான செண்டாய் என்ற கடலோரத்து ஊரில் ஏற்பட்டுள்ள சேதங்கள் வியப்பும் திகைப்பும் ஊட்டும் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.
பிரம்மாண்டமான கப்பல் பொதிப் பெட்டிகள் ஊருக்குள் அடித்து வரப்பட்டு கட்டிடங்களில் மோதி நிற்பதாகவும், துறைமுகத்தை ஒட்டி பல இடங்களில் தீ பரவியுள்ளது. மரங்கள் மரப் பலகைகள் மற்ற இடிபாட்டுக் குவியல்கள் ஆகியவை எல்லா திசையிலும் குவிந்து கிடக்கின்றன.
சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கார்களும் மற்ற வாகனங்களும் உடைந்தும் நொறுங்கியும் குப்புறக் கவிழ்ந்தும் கிடக்கின்றன. எல்லா இடத்திலும் சுனாமி அலை கொண்டு வந்து சேர்த்த கருஞ்சேறும் சகதியுமாக இருக்கிறது. செண்டாய் நகருக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. வழியிலுள்ள கடைகள், பெட்ரோல் நிலையங்கள், சாப்பாட்டு விடுதிகள் எல்லாமும் மூடியிருக்கின்றன.
பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலை ஒட்டிய பல இடங்களில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
ஜப்பானில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தற்போது அவசரகால தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ஜப்பானியத் துருப்பினரும் நூற்றுக்கும் அதிகமான கப்பல்களும் விமானங்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ரிகுஸெண்டகடா என்ற ஒரு ஊரில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 400 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஊரின் பெரும்பகுதி அழிந்துபோயுள்ளது.நாகசாகி,கிரொசிமாவில் அணுகுண்டுவீச்சில் எழுந்துவந்த ஜப்பானியர் இப்பேரழிவையும் எதிர்கொண்டு மீள்வர்.ஆனால் சொந்தங்களின் உயிர் இழப்புகளுக்கு நாம் வருத்தம் தெரிவிப்பதைத்தவிர வேறென்ன செய்ய இயலும்.
வருத்தத்துடன் :சுரன் குறிப்புகள்,