நான் அவனில்லை.

"பொள்ளாச்சியில் முகநூலில் நட்பாகி, ஏராளமான பெண்களை மிரட்டி வீடியோ எடுத்ததாக பிடிபட்ட இளைஞர்களே ஒப்புக் கொண்ட நிலையில், 4 வீடியோக்கள் மட்டுமே தங்களிடம் கிடைத்திருப்பதாகவும், பாலியல் பலாத்காரம் என்று எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை எனவும் ,அதிமுக கட்சி தலைவர்கள்,அவர்கள் வாரிசுகள் என பலர் பெயரை குற்றவாளி கூறிய பின்னரும் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அளித்துள்ள பேட்டி பொள்ளாச்சி மக்களை கோபத்தில் தள்ளியுள்ளது."


1500 காணொளிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் தங்களிடம் இருப்பது 4 மட்டுமே என்று காவல்கண்காணிப்பாளர் ஒருவாரத்துக்குப்பின் பெட்டியில் சொல்வது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அதிமுக அமைச்சர்,கட்சி பிரமுகர்கள்,மற்றும் அவர்கள் வாரிசுகளை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை முனைப்புடன் செயல்படுவதாக தெரிகிறது.

ஒரு மாதமாக நடக்கும் இவ்வழக்கு வெளியே கசிந்த பிறகும் மறைப்பதிலேயே காலம்கடத்திய காவல்துறை திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் என்று அறிவித்தப்பின்னர்தான் அதிமுகவில் இருந்து நாகராஜ் என்பவர் நீக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை,அதிமுக செயல்பாடுகள் பலத்த ஐயத்தை உருவாக்குகிறது.

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களிடம் முகநூலில் நட்பாக பேசி, காதல் வலையில் வீழ்த்திய திருநாவுக்கரசு, ஆபாச வீடியோ எடுத்த கூட்டாளி சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த் ஆகியோரின் கும்பல் பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிய கொடுமை குறித்து நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த்குமார், சதீஷ் ஆகியோரை பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் கையும் களவுமாக,காணொளியுடன் போலீசிடம் பிடித்து கொடுத்தனர் .ஆனால் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு மட்டும் மேலிட தகவல் வரவுக்குப்பின் காவல்துறை விடுவித்து விட்டனராம்.

அதுவும் 3 பேர் மீது முதலில் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.
உடனே தலைமறைவான திருநாவுக்கரசு "இந்த ஆபாச காணொளி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது.
குறிப்பாக அதிமுக தலைவர்கள் ஆதரவுடன் தாங்கள் செயல்பட்டதாகவும்,அதிமுக வாரிசுகள் பலர் இதில் நேரடியாக தொடர்பு வைத்திருந்ததாகவும்,இதற்கு முன்னர் வெளிவந்த குற்றசாட்டுகளை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் " முதலில் ஆடியோவும், பின்னர் வீடியோ வெளியிட்டு சாதாரண ஆபாச காணொளி குற்றத்தை வேறு நிலைக்கு கொண்டு செல்லும் விதமாக செயல்பட்டதால் வேகவேகமாக கைது செய்யப்பட்டார்.
திருநாவுக்கரசு வெளியில் இருந்தால் வேறு பலவற்றையும் வெளியிட்டு அதிமுகவை கேவலப்படுத்திவிடுவார் என்பதே முதலில் விடுவிக்கப்பட்ட வரை காவல்துறை மீண்டும் கைது செய்யக்காரணமாகத் தெரிகிறது.

இந்த பிளாக்மெயில் கும்பலை நம்பி, திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டுக்கு சென்ற ஏராளமான இளம் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், GFX1 out இந்த கும்பலிடம் சிக்கிய ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான பதை பதைக்க வைக்கும் அபயக்குரல் தான் இது..!

இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததும், முதல்முறையாக திமுக வழக்கறிஞர்களும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரனும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


இதற்கிடையே அத்துமீறல் கொடுமையை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை, பார் நாகராஜன் என்பவர் தலைமையிலான 4 பேர் கும்பல் தாக்கியது.
அதனால் கைது செய்யப்பட்ட அந்த 4 பேர்களும் உடனே எளிதாக பிணையில் வெளியே வந்ததால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

திமுகவினர் இதை கையில் எடுத்து தமிழ்நாடு முழுக்க பரவலாக்கியதால் வேறு வழியின்றி "முதலி அதிமுகவினர் யாரையும் இதில் இல்லை என்ற அதிமுக ,கட்சியின் பெயருக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பார் நாகராஜன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தது.

இதையடுத்து முக்கிய அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்களில் பரவியது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட பலர் இது தொடர்பாக போராட்டங்களை  தெரிவித்து வருகின்றனர்.
இந்த குற்றச் சம்பவம் பூதகரமாகி ஒரு வாரம் கடந்த நிலையில் விவகாரம் பெரிதானதால், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ,செய்தியாளர்களை சந்தித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு குற்றவாளிகளை,அதிமுகவினரை காப்பாற்றும் விதமாக ஒரு வரியில் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனிடம் சிக்கிய போது, குற்றம் சட்டப்பட்ட திருநாவுக்கரசுவும், சபரிராஜனும் நிறைய பெண்களை 1500க்கும் அதிகமாக வீடியோ எடுத்திருக்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால் எஸ்.பி பாண்டியராஜன், 4 வீடியோக்கள் மட்டுமே செல்போனில் இருந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 வீடியோவில் உள்ள பெண்ணின் அபயக்குரல் காண்போரை குலை நடுங்கச்செய்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

ஆனால் எந்த பெண்ணும் பாலியல் பலாத்காரம் நடந்ததாக புகார் தரவில்லை அதனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பலாத்கார வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்கிறார் எஸ்.பி பாண்டியராஜன்.

பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைக்கும் விதமாக பெண்ணின் பெயரையோ, அவரது உறவினர்களின் பெயரையோ வெளியிடக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெயரை வெளியிட்டது காவல்துறையின் தவறு என்று ஒரு கட்டத்தில் தவறை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் பாண்டியராஜன்.

பெண்ணின் பெயரை வெளியிட்டு மேற்கொண்டு எந்த ஒரு பெண்ணும் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்ல இயலாதபடி செய்த காவல் துறையினர் மீது என்ன விதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுக்கடைக்கு எதிராக போராடியதற்காக பெண்களை கன்னத்தில் அறைந்து ,மோசமான வார்த்தைகளில் திட்டி விரட்டி அது காணொளியாக பரவலாகி பொது மக்கள் கோபத்தை பெற்றவர்தான் இந்த கோவை எஸ்.பி பாண்டியராஜன்.

அப்படியானால் இப்படிப்பட்ட கொடூரர்கள் மீது எத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டும்..!
ஏன் காட்டவில்லை என்ற கேள்வியும் எழுகிறது..!

கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் இரு குழந்தைகளை கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த முக்கிய குற்றவாளி போலீசாரிடம் தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.
அந்த அளவிற்கு பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது அன்றைய காவல்துறை,
அதே நேரத்தில் வெகுஜன மக்களிடம் பெரும் தாக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி கூட்டு பாலியல் அத்துமீறல் வழக்கை அதிமுக வசம் உள்ள ,குற்றவாளிக்களைக்காப்பாற்றும் விதமாகவே செயல்படும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பதேபொள்ளாச்சி மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

 இந்த சம்பவத்தில் தொடர்பே இல்லாத ஒருவரின் படத்தை, அவர் திமுகவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, பொய்யாக பரப்பி வருகிறார்கள்.. 
உண்மை குற்றவாளிகளு தப்ப உதவி செய்யாதீர்கள்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 (தேர்தல்)திருவிழா.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒரிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு முட்டுக் கொடுப்பதற்காகவே தொடர்ந்து நடத்தப்படாமல் இருந்த 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு தேர்தல்நடைபெறுகிறது.
அதிலும் கூட வழக்குகள் இருப்பதாகசாக்குப்போக்கு கூறி மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.


 இவ்வாறு அறிவித்தால் மட்டும் போதாது. பாரபட்சமின்றி இந்த நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்யப்படுவது முற்றாக தடுக்கப்பட வேண்டும்.
கடந்த பல தேர்தல்களாக பண விநியோகத்தை தடுத்து நிறுத்தும்ஆற்றலை தேர்தல் ஆணையம் இழந்துவிட்டது. பண விநியோகம் காரணமாக வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் போது முன்பை விடகூடுதலான அளவில் பணம் புகுந்து விளையாடிய அனுபவங்கள் தமிழகத்தில் உண்டு.

எனவேபண விநியோகம் முற்றாக தடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையற்ற கெடுபிடிகள் விதிக்கக்கூடாது.
 ஜனநாயக நாட்டில் மக்களிடம் தங்களதுகருத்துக்களை எடுத்து முன்வைத்து அதன்மூலம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
ஆனால் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆளுங் கட்சியினருக்கு சாதகமாக நடந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை ஒடுக்குவதே நடைமுறையாக உள்ளது.
அண்மைக் காலமாக வாக்களிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்ல முன்னேற்றமாகும்.

அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதை ஊக்குவிப்பதும் உறுதி செய்வதும் தேர்தல் ஆணையத்தின் தவிர்க்க இயலாத கடமையாகும்.
குறிப்பாக இளையவர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.கடந்த காலத்தில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மோடி ஆட்சியின் கண் அசைவுக்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

பல்வேறு மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதில் இது வெளிப்பட்டது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுயேச்சையான அமைப்பு.
அதன் மீதான நம்பகத்தன்மை தகர்வது என்பது ஜனநாயகத்தின் ஆணி வேரையேஅசைத்து விடும்.

எனவே மக்களவைத் தேர்தலைநேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஆணையத்திற்குஉண்டு.
தேர்தல் ஆணையத்தின் மீதான கருத்துக்கணிப்பாகவும் எதிர் வரும் தேர்தல் அமையவுள்ளது.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது பெரு விழா.அதில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வார்கள்.
மதுரை மாநகர் மக்கள் மட்டுமின்றி மாவட்டம் முழுக்க உள்ளவர்களுக்கு அது முக்கிய விழா.தமிழகம் முழுக்க இருந்து மக்கள் கலந்து கொள்வார்கள்.
அதே தேதியில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இது போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் செயல்பாடுகள் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
மதுரை கள்ளழகர் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே சித்திரைத்திருவிழா,தேரோட்டம் என்று பல்வேறு நகரங்களில் இக்கொண்டாட்டம் இருக்கும்.

மக்கள் அனைவரும் பாரம்பரிய விழாக்கொண்டாட்டங்களில் இருக்கும்  மே -18ம் தேதி அன்றே தேர்தல் திருவிழாவை (வாக்குப்பதிவு ) வைத்திருப்பது எவ்வளவு பெரிய தவறான செயல்.
அதுவும் இந்திய நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய மக்கலவைத்தேர்தல் ஒரு புறம்.தமிழ் நாட்டின் அரசியலையே புரட்டிப்போடும் 21சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  மறுபறம்.

தேர்தல் தேதிகளை  அறிவிக்கும் முன்னர் மாவட்டங்கள் வாரியாக,தொகுதிவாரியாக நிலவரம்,சட்டம் ஒழுங்கு,விழாக்கள் ,மற்றும் பல்வேறு நிகழ்வுகள் விபரங்களை அறிக்கையாகக்கேட்டு அதன் பின்னர்தான் அறிவிப்பு வெளியாகும்.
அப்படிப்பட்ட நிலையில் இந்த மே-18 தேதியை தமிழக மக்கள் பல்வேறு விழாக்கொண்டாட்டங்களில் இருக்கும் தேதியைக்குறிப்பாக அறிவித்தது எந்த அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணையை அறிவித்தது என்ற கேள்வியையே உருவாக்குகிறது.
21 சட்டமன்றத் தேர்தல்களுக்கு 3 தொகுதிகளில் வழக்கு நடப்பதை காரணமாக் கூறி 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவிக்கும் ஆணையம் விழாக்காலத்தைக்கணக்கில் கொள்ளவில்லை என்பதே வேடிக்கை.
 
====================================================
ன்று,
மார்ச்-12.

உலக சிறுநீரக தினம்

மொரீசியஸ் தேசிய தினம்

 நியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)

ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பரா  பெயரிடப்பட்டது(1913)

சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)
====================================================
 காஷ்மீரிலிருந்து வெளியாகும் நாளிதழ்களில் ‘கிரேட்டர் காஷ்மீர்’மற்றும் ‘காஷ்மீர் ரீடர்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பிரபலமான பத்திரிகைகளும் கூட. இந்நிலையில், இவ்விரு நாளிதழ்களுக்கும் அரசு விளம்பரங்கள் தருவதை, மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், திடீரென நிறுத்தியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது.

காஷ்மீரிலிருந்து வெளிவரும் அனைத்து ஆங்கில மற்றும் உருதுநாளிதழ்கள், தமது முகப்புப் பக்கத்தை, செய்தி எதையும் வெளியிடாமல் வெற்றிடமாக விட்டு, நூதன முறையில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளன.“

அரசின் இந்த நடவடிக்கைக் கான காரணங்கள் என்ன என்றுநாங்கள் திரும்பத் திரும்பக் கேட்டபோதிலும், அதற்கான காரணங்களை அரசு இதுவரை தெரிவிக்கவில்லை; எனவேதான் எங் கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக முதல் பக்கத்தில் செய்தி எதுவும் வெளியிடாமல் வெற்றிடமாக வெளியிட்டிருக்கிறோம்”

என்று ‘காஷ்மீர் மானிட்டர்’ நாளேட்டின் ஆசிரியர் பஷீர் மன்சார் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
10ஆண்டுக்கு முந்தைய திட்டங்களும் துவக்கவிழா.!
 மக்களை ஏமாற்றும் மோடி வித்தை!!

5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதற்கு வந்துபோனதைத் தவிர, வெளிநாடுகளைச் சுற்றி வந்ததுதான் அதிகம்.
மாநிலங்கள் அளவில், புல்லட் ரயில்திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் மற்றும்சிலைகள் திறப்பைத் தவிர வேறு பெரியதிட்டங்கள் எதையும் அவர் துவக்கி வைக்கவும் இல்லை;
அதற்காக மாநிலம்மாநிலமாக சுற்றுப்பயணம் மேற் கொள்ளவும் இல்லை.

ஆனால், மக்களவைத் தேர்தல்நெருங்கிய நேரத்தில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும், எம்.பி. தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கிடைத்த படுதோல்வி, பிரதமர் மோடிக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது.
இதனால் கடைசிக் கட்ட முயற்சியாக, ஜனவரி 8 முதல் பிப்ரவரி 7 வரை,சுமார் ஒரு மாதகாலம், நாடு முழுவதும்28 சுற்றுப்பயணங்களை பிரதமர் மோடிமேற்கொண்டுள்ளார். 
அப்போது, ரூ. 32 ஆயிரம் கோடிக்கு 157 திட்டங்களை அவர் துவக்கி வைத்துள்ளார்.

நெடுஞ்சாலை, ரயில்வே துறை,மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்கள், விமானநிலையங்கள், மின்சார ஆலைகள் மற்றும் பல திட்டங்களை பிரதமர் மோடிதொடங்கி வைத்துள்ளார்.

ஆனால், இவை ஒன்றுகூட உடனடியாக செயல் பாட்டுக்கு வரப்போவது இல்லை.ஆட்சிக்கு வந்த நேரத்திலேயே இத்திட்டங்களை துவங்கியிருந்தால், ஒருவேளை இந்நேரம் அவை பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.


அவ்வாறுசெய்யாமல், ஆனால், நாங்களும் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக கடைசிக் கட்ட மோடி வித்தையில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.

கொடுமை என்னவென்றால், கடந்த ஒரு மாதத்தில் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் பலதிட்டங்கள் ஏற்கெனவே துவங்கப்பட்டு, செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களாகும்.

உதாரணத்திற்கு, மார்ச் துவக்கத்தில்உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில்ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து, துப்பாக்கிகள் தயாரிக்கும் ஆலை ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 
ஆனால், இந்த ஆலைக்கான தொடக்க விழா 2007 ஆம் ஆண்டே நடத்தப்பட்டு விட்டதாகவும், ஆலையில் துப்பாக்கி தயாரிப்புப் பணிகளும் 2010-ஆம் ஆண்டே துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

பீகாரின் கரமாலிசக்கில், பாதாளச் சாக்கடைத் திட்டம் ஒன்றுக்கு, 2017 அக்டோபரில் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். 
தற்போது, 2019 பிப்ரவரி 17 ஆம் தேதி மீண்டும் அதே திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதுபோக, மோடி துவக்கி வைத்தவற்றில் 140 திட்டங்கள் மிகச்சிறிய திட்டங்கள் ஆகும். 

சில நகராட்சி அளவிலான திட்டங்கள். காசியாபாத் முனிசிபாலிட்டியில் மாட்டுக் கொட்டகைதிறப்பு விழாவைக் கூட மோடி விடவில்லை.
 இதனை என்டிடிவி தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சி முடியப் போகும் தருவாயில், ஒரே மாதத்தில் 28 பயணங்களை, அரசாங்கப் பணத்தில் மேற்கொண்டுள்ளார்.

ஆனால், 2014தேர்தல் நெருங்கும்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேர்தல்நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் எந்தவிதப் பயணமும் செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?