தேர்தலுக்காக


மோதலைத் தூண்டுகிறார் மோடி!
இந்திய உளவுத் துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத்
 பகிரங்க குற்றச்சாட்டு!

இந்திய உளவுத்துறையின் (Intelligence Bureau)சிறப்புஇயக்குநராகவும், வெளிநாடுகளுக் கான உளவுப் பிரிவான ‘ரா’ (RAW)அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐபிஎஸ் அதிகாரிஏ.எஸ். துலாத்.
குறிப்பாகச் சொன்னால், 1999 - 2000 ஆண்டுகளுக்கு இடையே நடை பெற்ற கார்க்கில் போரின்போது, ‘ரா’அமைப்பின் (ரிசர்ச் அண்ட் அனலைஸ்விங் - Research and Analysis Wing))தலைவராக இருந்தது இவர்தான்.

 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல் பட்டுள்ளார்.தற்போது, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில், ‘தி கேரவன்’இணையதள ஏட்டிற்கு பேட்டி ஒன்றைஅளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

"புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தையஇந்திய அரசின் நடவடிக்கை பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை.
ஆனால்,பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் பகுதியில்இந்தியா நடத்திய விமானப்படைத் தாக்குதலுக்குப் பின்னரும், தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்தையும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்று பாகிஸ் தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய விதம் இந்தியாவுக்கு அதாவது மோடிக்கு அதிர்ச்சியையும் ,உலகநாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தானிலும், உலக அளவிலும் இம்ரான்கான் நல்ல பெயரைச் சம்பாதித்துள்ளார். 
அதேநேரம், இந்த விமானத் தாக்குதல் மூலம் நரேந்திர மோடிக்கு, உலகநாடுகள் அளவில் மிகப்பெரிய அளவிற்கு கெட்டப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
300 பேர்களுக்கு மேல் தீவிரவாதிகள் பலி என்பதற்கு ஆதாரமாக ஒரு பிணம் கூட இல்லாததும்.அதை தாக்குதல் நடந்த இடத்துக்கு உலக நாடுகள் ஊடகங்கங்களை பாகிஸ்தான் அரசு ஹெலிகாப்டர்  மூலம் பறவையிட செய்ததும் அதற்கு காரணமாக அமைந்துவிட்ட்து

  புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, வான் வெளித் தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாமல் போனதற்கு சிலரின் தேர்தல்மனநிலையே காரணம்.

உண்மையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வேண்டுகோளை ஏற்று,அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்து இருக்க வேண்டும்.
அதன்மூலம்பதற்றத்தையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும்.
ராஜதந்திரம்தான்தற்போது தேவை.

இங்கு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது நடத்தாமல் போவதோ, அது அரசின் முடிவு. குத்துச்சண்டையில் 3 அடிப்படைச் சுற்றுக்கள் உண்டு.
அதன்படி இப்போதுஆடிக்கொண்டிருப்பது முதல் ரவுண்ட்.
ஆனால், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இந்திய தேர்தலுக்காக நடத்தப்படும் தாக்குதல் என்று சரியாக ஊகித்து காய்களை நகர்த்துவதால் போர் சூழ்நிலை விளையாட்டு மோடியின் கையை மீறி முடித்து விட்டது.

கடந்த 30 ஆண்டுகளாகவே, இந்தியா தீவிரவாதத்தை தனது பக்கத்தில்வைத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் தீவிரவாத தொழிற்சாலை இருக்கிறது என்பதிலும், அதில் தீவிரவாதிகள் உருவாக்கப்படுவதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால், குறிப்பிட வேண்டியது என்னவென்றால், தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு, இந்தியா போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை விட, பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாத இயக்கங்களால்தான் பாதிப்பு அதிகம்.
அப்படியொரு ஆபத்தான அண்டை நாட்டை வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.காஷ்மீர் விவகாரத்தை ஒவ்வொருபிரதமரும் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்.

வாஜ்பாய் 3 முறை சோதித்துப் பார்த்திருக்கிறார்.
 கார்க்கில் போர், விமானக் கடத்தல், நாடாளுமன்ற வளாகத் தாக்குதல் ஆகியவற்றை அவர் எதிர்கொண்டிருக்கிறார்.
அவர் கடைசிவரை ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு கிடையாது.
 மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மும்பைத் தாக்குதலை எதிர்கொண்டார்.
இவர்களை ஒப்பிட் டால், மோடி ஒரு அதிர்ஷ்டசாலி. புல் வாமா தாக்குதல்தான் அவர் சந்தித்த பெரிய சோதனை.

இன்னென்று, காஷ்மீரில் பிரச்சனையில் வாஜ்பாயோடு, மோடியை ஒப்பிடவே முடியாது.
அனைவரும் இதைபார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் கள்.
வாஜ்பாய் கடைசிவரைக்கும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் மீது மரியாதை வைத்திருந்தார்.

ஆனால்,மோடி ஆட்சியில் இப்போது என்ன நடக்கிறது?
மோடி பிரதமரான ஆரம்பத்தில் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஏராளமான நம்பிக்கை இருந்தது. ஆனால், ராணுவநடவடிக்கை மூலம் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பதை அவர்உணரவில்லை.

கடந்த 2 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சனையை நிறையவே குழப்பிவிட்டோம்.
வாஜ்பாயும், மன்மோகன் சிங்கும் குறைவாகத்தான் பேசுவார்கள்.
 ஆனால்செயல்பாடு அதிகமாக இருக்கும்.

ஆனால், மோடியோ இந்த விவகாரத்தை பூதாகரமாக்கப் பார்க்கிறார்.
பிரதமரின் இந்த நடவடிக்கைகளை மக்களவைத் தேர்தலையொட்டிய நிகழ்வாகவே பார்க்கிறேன்."
இவ்வாறு ஏ.எஸ். துலாத் கூறியுள் ளார்.
பலியானோர் எண்ணிக்கை தெரியாது!
 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், பாலகோட்டில் விமானப்படை நடத்திய குண்டுவீச்சு, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் ஆகியவை நாடு முழுவதும் விவாதங் களை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலேவை வரவழைத்த,
விஜய்கோகலே

 வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், அவரிடம் நடைபெறும் விஷயங்கள் விளக் கம் கேட்டுள்ளனர்.
அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், விஜய் கோகலேவும் அவரது சக அதிகாரிகளும்திணறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் தவறான தகவல்களை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வரவேற்கத்தக்கது என்றாலும், இவ்விவகாரத்தை ஏன், உலக நாடுகளிடம் எடுத்துச் செல்லவில்லை?
அதேபோல பாலகோட் தாக்குதலின் போது எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்? 

என்று கேட்கப் பட்டதற்கு, அதற்கான விவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றுவெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே  கூறியது, நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிர்ச்சி அடையச் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
====================================================

ன்று,
மார்ச்-03.
எண்ணெய் வளம்

ஜியார்ஜியா அன்னையர் தினம்

எகிப்து விளையாட்டு தினம்


 சவுதி அரேபியாவில் பெட்ரோலிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது(1938)


இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)


போஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது(1992)
====================================================
வளர்ச்சி மேலும் குறையும்
சாதனை என்று மோடியால் எதையும் சொல்ல முடியாது!

ஜிஎஸ்டி வரி வசூலானது,2019 பிப்ரவரி மாதத்தில், 97 ஆயிரத்து 247 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
கடந்த ஜனவரியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 503 கோடி ரூபாயாக ஜிஎஸ்டி வரிவருவாய் இருந்தது.

ஆனால், தற்போது 97 ஆயிரத்து 247 கோடி ரூபாய் அளவிற்கே வசூல் வந்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், மத்திய ஜிஎஸ்டி வசூல் 17 ஆயிரத்து 626 கோடி ரூபாய்;
மாநில ஜிஎஸ்டி வசூல் 24 ஆயிரத்து 192 கோடி ரூபாய்;
ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல் 46 ஆயிரத்து 953 கோடி ரூபாய்,
 செஸ் 8 ஆயிரத்து 476 கோடி ரூபாய் என் றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018-19ஆம் நிதியாண் டில் ஜிஎஸ்டி வரியாக சுமார்12 லட்சத்து 90 ஆயிரம்கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
அதாவது, ஒவ் வொரு மாதமும் சராசரியாக 1 லட்சத்து 7 ஆயிரம் கோடிரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது.

பின்னர் மத்திய அரசு தானாகவே, இலக்கை 11 லட்சத்து 47 ஆயிரம் கோடியாக குறைத்துக் கொண்டது.
 இதில் பிப்ரவரி மாதம் வரை 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

 2019-20 ஆண்டுக்கான ஜிஎஸ்டி வசூல் இலக்கு 13 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

2018-2019 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (GDP) 6.6 சதவிகிதமாகச் சரிந்துள்ளது.
ஜூலை முதல் செப்டம் பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபிவளர்ச்சி 7 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அதில் மீண்டும் சரிவுஏற்பட்டு, 6.6 சதவிகிதத்திற்கு இறங்கியுள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் என்று ‘ராய்ட்டர்ஸ்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 “கடந்த 5 காலாண்டுகளாகவே, இந்தியாவில் மெதுவான பொருளாதார வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது.
 அரசின் திட்டங்கள் அனைத்தும் நாட்டின்பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச்செய்துள்ளன என்று சொல்லக் கூடியநிலையில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இல்லை.
உள்நாட்டு மொத்த உற்பத்தி மற்றும் வெளித்தேவை குறைந்ததால், பொருளாதார வளர்ச்சி சதவிகிதமும் குறைந்துள்ளது.

தற்போதைய வளர்ச்சி கவுரவமானதாக பார்க்கப்பட்டாலும், உற்பத்தித் துறைக்குஎதுவும் செய்யவில்லை என்றகுற்றச்சாட்டை மோடி சந்தித்து வருகிறார்;
 போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட் டும் அவர் மீது உள்ளது.

விவசாயஉற்பத்தி விலை வீழ்ச்சி, கிராமப்புறத்தை பாதிப்படையச் செய்திருப்பதும், பொருளாதார ரீதியில் இந்திய நலிவடைவதற்கு ஒரு காரணமாகும்.

இந்நிலையில், தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் பொருளாதாரச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்” என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியப் பொருளாதாரம் பஞ்சராகியுள்ளதாகவும், வரும் நான்காவது காலாண்டுப் புள்ளியும் சரிவில் இருக்கும் பட்சத்தில் மத்திய அரசின்முகத்திரை கிழிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ரபேல் விமங்கள் இருந்திருந்தால் இந்திய ராணுவம்
 
 இதைவிட நன்றாக செயல்பாட்டிற்கும்."
 
-ரபேல் மோடி, மன்னிக்கவும் நரேந்திர மோடி.

 
 
 
 
 
 
இந்தியப்படைவீரர்களின் தியாகத்தை,திறமையை இதைவிட அசிங்கப்படுத்தமுடியாது.ஊழலுக்காகன காரணத்தை தேடுகிறாரோ மோடி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
குமரி மாவட்ட பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம்.
பாதுகாவலர்களால் பிடித்து இழுத்து  வெளியேற்றப்பட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?