எப்படி தேர்தல் நடத்துவீர்கள்?

மொத்தமதிப்பெண்கள்100ல்345மதிப்பெண்கள் எடுப்பது எப்படி?

ரயில்வே துறையில் காலியாகஉள்ள 62,907 பணியிடங்களுக்கு 1 கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
 குரூப் 4 தேர்வு கடந்த 2018 செப்டம்பர் 17துவங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றுள்ளது.
சிப்ட் முறையில் ஒரு நாளைக்கு 3 தேர்வுகள் என 50 நாட்கள்தேர்வு நடத்தியுள்ளனர்.
 ஒரே தேர்வுக்கு150 வகை வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 4 ஆம்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

 மொத்த மதிப்பெண்கள் 100 என்றுஇருக்கையில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பலருக்கும் 101, 109, 110 என கூடுதலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.எல்லாவற்றிலும் அசிங்கம் ஒரு மாணவருக்கு மொத்தமதிப்பெண்கள் 100 என்றிருக்கையில் அவர் தேர்வில் 345 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என தகவல்கள் வருகின்றன.

நிர்வாகத் தரப்பில்கேட்டால்  இயல்பான முறையில்தான் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கின்றனர்.அப்படியெனில் தமிழகத்தைசசேர்ந்தவர்களுக்கு மட்டும் 100க்கு தோல்வியாக 35 மதிப்பெண்களே கொடுக்கப்பட்டது எப்படி அதுவம் நிர்வாக முறை அடிப்படையில்தானா?

நாடு முழுவதும் குரூப் 4 தேர்வுகளை ஒரு நாளில் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்திடும் வகையில் அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அரசே மாவட்ட வாரியாக தேர்வு செய்திட வேண்டும்.

மேலும் அந்தந்த மண்டலங்களில் நடைபெறும் தேர்வுகளில் சம்பந்தப்பட்ட மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


குரூப் 4 தேர்வு குறித்த முழுவிபரங்களை ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தென்மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு செய்கின்ற துரோக செயலாகத்தான் பார்க்க வேண்டும்.
காரணம் முன்பு நடந்த தபால்துறை தேர்வில் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்தான்.
 காரணம் அரியானா,ராஜஸ்தான்,உ.பி.மாநிலங்களைசேர்ந்தவர்கள்அனைவரும்  தமிழ்த் தேர்வில் 60,80 என்ற அளவில் தேர்ச்சிப்பெற்றிருக்க தமிழ்நாட்டைசசேர்ந்த தேர்வாளர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழில் 20,30 மதிப்பெண்களைப்பெற்று தோல்வியடைந்துள்ளார்கள்.
என்ன அநியாயம் இது.நீதிமன்றத்தில் நீதிபதிகளே வியந்து போன செய்தி.
இது தொடரும்.
ஆனால் பொதுமக்கள் பயன்படுத்தும் ரெயில்வே,தபால் துறையில் தமிழ் தெரியாதவர்களால் மக்கள்தான் துன்பமடைகிறார்கள்.
அதன் வெளிப்பாடு சென்னை தபால் அலுவலகத்தில் தமிழில் முகவரி எழுதிய உள்ளூர் தபால்களை வாங்க மறுத்து இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுவர சொன்ன நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
தொழிலாளர் காப்பீடு நிறுவனத்தில் 220 பணியிடங்களுக்கு 180 வடமாநிலத்தவரால் நிரப்பட்டுள்ளது.
மீதி 40 இடங்களில்தான் தமிழர்கள் உட்பட்ட தென்மாநிலத்தவர்கள்.

மத்திய அரசு நிறுவனங்களில்தான் இப்படி என்றால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வடமாநிலத்தவர்கள் ஒதுக்கீடில்லாமல் மொத்தமாக கலந்து கொள்ளலாம் என்று விதிகளைத்தவிர்த்து உள்ளது.
ஆக பலமுனைகளிலும் இருந்து தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
கிராமநிர்வாக அலுவலர் வரை இந்தி பேசுபவர் உட்கார்ந்து இந்தியால் கேள்விகளைக்கேட்டு நம்மை நோகச் செய்யும் காலம் காத்திருக்கிறது.அதை தடுக்கும் கடமை நமக்கிருக்கிறது.இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய ஆட்சியாளர்களின் எடுபிடிகள் என்பதால் இவர்களை மாற்றுவதே நம் முன் இருக்கும் முக்கிய கடமை.

அரசு ஊழியர்களை நம்பாமல் எப்படி தேர்தல் நடத்துவீர்கள்?
                                                                                                                                -பெரணமல்லூர் சேகரன்
தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டுப் பயனளிப்புடன் கூடியபழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், காலியாக உள்ள அரசு ஊழியர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் 9 நாட்கள் நடைபெற்றன.

அரசு என்பது அடக்குமுறைக் கருவி என்பதற்கொப்ப அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டத்தை நசுக்க பல உத்திகளைக் கையாண்டது தமிழ்நாடு அரசு. முன்னணி அரசுஊழியர் - ஆசிரியர் இயக்க நிர்வாகிகளைகைது செய்து சிறையில் அடைத்தது தமிழகஅரசு. எண்ணற்ற அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 17(ஆ)ன் கீழ் குற்றச்சாட்டுக்கள் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜாக்டோ - ஜியோ சார்பில் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டு அனைவரும் பணியில் சேரத் தயாராக இருந்தனர்.
 ஆனால் கைது நடவடிக்கைக்கு உள்ளாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீளப்பணியில் அமர்த்தாமல் அலைக்கழித்து அழிச்சாட்டியம் செய்தது தமிழக அரசு. ஜாக்டோ - ஜியோ சார்பில் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக படிப்படியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுப் பணியில் சேர்ந்தனர்.
ஆனால் இன்னமும் தலைமைச் செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் சிலர் பணியில் சேர இயலாத நிலையில் ஜாக்டோ ஜியோ அவர்களுக்குக் குடும்பப் பாதுகாப்பு நிதியை வழங்கிப் பாதுகாத்து வருகிறது. எண்ணற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பணியிட மாறுதல் செய்து வஞ்சம் தீர்த்தது தமிழ்நாடு அரசு.

அரசு ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் கடும் அதிருப்தி மேலோங்கியது.
2003ல் நடைபெற்ற வேலைநிறுத்தமும் அதன்மீதான ஜெயலலிதா அரசின் வரலாறு காணாத அடக்குமுறையும் 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைப் புகட்டியது.

 தற்போதைய தமிழக அரசின் ஊழியர்விரோத ஆசிரியர் விரோத நடவடிக்கைகளுக்கு (2004 தேர்தலில் எதிர்வினையாற்றியதைப் போல)2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் நிகழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் தமிழ்நாடு அரசு தமிழகத் தேர்தல் ஆணையத்தை அணுகி தேர்தல் பணியில் தமிழக ஆசிரியர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.
தற்போது தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் ஆணையிட்டு அதனடிப்படையில் துறைவாரியாக மாவட்ட மாறுதல் ஆணைகள் வரப் பெற்று,5 நாட்களாக தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபடச் செய்துவிட்டது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை எந்தத் தேர்தல் காலத்திலும் அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றியதில்லை.
தற்போது மத்திய அரசின் பிடியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் ஜாடிக்கேற்ற மூடியாய் மோடிக்கேற்ற எடப்பாடியாய் உள்ள தமிழ்நாடு அரசின்அபிலாஷைகளுக்கிணங்க தவறான முடிவெடுத்து அமல்படுத்திவிட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் முன் சில கேள்விகள்:-
இதுவரை எந்தத் தேர்தலிலும் பின்பற்றாத நடைமுறையான அலுவலர்களுக்கான மாவட்டமாறுதல் அஸ்திரத்தைக் கையில் எடுத்ததேன்?

 அரசு அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையத்துக்கு நம்பிக்கை இல்லையா?

 ஆம் எனில், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மூலம் பணியேற்கும் அலுவலர்கள் மீது நம்பிக்கை வந்துவிடுமா?

மு தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் குடும்பம், பெற்றோர், பிள்ளைகள் படிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறும் பதில் என்ன?


 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களாகவும் பணியாற்றி வருவது தேர்தல் ஆணையத்திற்குத் தெரியுமா?

 ஆம் எனில், அவ்வூராட்சிகளில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து பணியேற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் தனிஅலுவலர் பொறுப்பு வகித்து ஊராட்சிகளில் பணியாற்ற முடியுமா?

 எதிர்வரும் வறட்சி, குடிநீர் பஞ்சம் போன்றவற்றை அந்தந்த மாவட்டத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால்தான் பகுதிமக்களுடன் இணைந்து குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியுமா?

இவையனைத்தும் அறிந்த தமிழக அரசு அலுவலர்கள் மீது அவநம்பிக்கை கொண்டதேன்?

 மின்னணு வாக்கு எந்திரத்தில் எந்தத் தவறும் யாரும் செய்துவிட முடியாதெனின் அரசு அலுவலர்களை நம்ப மறுப்பதேன்?

 சொந்த மாநிலத்தின் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை நம்ப மறுக்கும் தமிழக அரசு, அரசின் நலத்திட்டங்கள் அமலாக்கம் செய்வதில் மட்டும் அலுவலர்களையும் இலட்சக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியில் மட்டும் ஆசிரியர்களையும் நம்புகிறதா?-

இக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் கிடைக்காது என்பது தெரிந்ததுதான்.

ஆனால் தமிழகம் தழுவிய அளவிலான ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தேர்தல் பணிகளைப் புறக்கணிப்புச் செய்வதென முடிவெடுத்தால் தமிழ்நாட்டில் அந்தளவிற்கு வேறு எங்கிருந்து ஆட்களை வரவழைத்துத் தேர்தலை நடத்தப் போகிறது?
தற்போது கடும் எதிர்ப்பின் காரணமாக தேர்தல் ஆணையம், மாவட்டம் விட்டு மாவட்டம்மாற்றும் உத்தரவை நீக்கியுள்ளது.திரும்பப்பெற்றுள்ளது.

தமிழக அரசும் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுப் பணியில் சேர இயலாமல் உள்ளவர்களுக்குப் பணியாணை வழங்குவதும் 17(ஆ)ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ரத்து செய்வதும் ஆகிய முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மேனாள் மாநிலப் பொதுச் செயலாளர்.
 
====================================================
ன்று,
மார்ச்-08.
உலக சிறுநீரக தினம்
மகளிர் தினம்
அல்பேனியா,ரோமானியா அன்னையர் தினம்
இந்திய விடுதலை வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)
====================================================

மோடி ஆட்சியில் காணாமல் போனவை:
*மோடி யின் கல்லூரி சர்டிபிகேட்
*ஸ்மிரிதி இரானியின் கல்வி சான்றிதழ்

*ஸ்விஸ் வங்கியில் நமக்கு வழங்கப்படுவதாக சொன்ன 15 லட்ச ரூபாய் பணம்
*டீமானிட்டைசேசன் அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக பாஜக வாங்கிய நன்கொடை பணம்
* அமித் ஷா மகன் கம்பெனியில் எப்படி முதலீடு வந்தது என்பதற்கான ஆவணங்கள்
* அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து சிபிஐ கைப்பற்றிய ஆவணங்கள்
* கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா வைத்திருந்த ஆவணங்கள்
* தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நீட் விலக்கு தீர்மான மசோதா.
* டீமானிட்டைசேசன் சமயத்தில் கைப்பற்றுவதாக சொன்ன கருப்புப்பணம்
* திருப்பூர் போல நாடு முழுவதும் பல சிறு குறு தொழில் நிறுவனங்கள்
*தேசத்தின் பொருளாதார வளர்ச்சி
* சர்ஜிகல் ஸ்ட்ரைக்கின்போது கொன்ற 300உடலங்கள்.
*மக்கள் நலத்திட்டங்கள்.
*விவசாயிகள் நல்வாழ்வு.
*மத நல்லிணக்கம்
* அடிக்கடி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் காணாமல் போவார்கள். நிரந்தரமாக காணாமல் போனவர்கள் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள்
*இந்தியமக்களின் நல்வாழ்வு
இன்று 
* பேல்_பேர_ஆவணங்கள்

முகநூலில் 
பாலசிங்கம் பா.ச



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?