வீரர் அபிநந்தன் வருகையும்

போரிலும் அரசியல் செய்யும் பாஜகவும்.!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களின் மீது வான்வழி தாக்குதல் நடத்தச் சென்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட விமானி அபிநந்தன் நல்லெண்ணஅடிப்படையில் விடுதலை செய்யப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததுமகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிப்பதாக அமைந்தது.

அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு போர்க்கூச்சலை எழுப்பி வந்தவர்களுக்கு ஏமாற்றமாகவும் இது அமைந்தது.
சர்வதேச நிர்ப்பந்தம் மற்றும் ஜெனீவா உடன்படிக்கையின்படியே அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முன்வந்ததாக கூறப்பட்டபோதும், பெரும் பதற்றமும், கவலையும் தொற்றிக்கொண்டிருந்த வேளையில் உடனடியாக அதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.


மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை இம்ரான்கான் வெளியிட்டபோது மேசையை தட்டி உறுப்பினர்கள் வரவேற்றதும் அந்த நாட்டின் சமூக வலைதளங்களில் அபிநந்தனை விடுதலை செய் என்ற முழக்கம் பரவலானதும், சில இடங்களில் பெண்கள், குழந்தைகள் இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பெரும் விலையை கொடுத்துள்ளது என்றும், போர்செய்யும் நிலையில் தங்கள் நாடு இல்லை என்றும், அமைதியையே தங்கள் நாடு விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்திருப்பதை பலவீனம் என்றும், மோடியின் ராஜதந்திர நடவடிக்கையால் பாகிஸ்தான் சரணடைந்துவிட்டது என்றும் வியாக்கியானம் செய்வது பொருத்தமானது அல்ல.

ஜம்மு - காஷ்மீர் மாநில பிரச்சனை உள்படஇருதரப்பு பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முயல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. ராணுவரீதியாக மட்டுமே ஜம்மு- காஷ்மீர் மாநிலபிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட முடியாது.

 பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதேநேரத்தில் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இந்திய அரசு செயல்படும் போதுதான் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த முடியும். ஆனால்இந்த திசை வழியில் எத்தகைய நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எடுக்கப்பட வில்லை.
 நாட்டின் பாதுகாப்பை தனது குறுகிய அரசியல் அறுவடைக்கு பாஜக பயன்படுத்த முயல்வது அருவருப்பானது.

மோடி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் நாட்டுக்காக பலியான மத்திய பாதுகாப்பு படையினரின் படங்களை மாட்டி வைப்பதும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் 22 சீட்டுகள் உறுதி என்றுபேசுவதும் சகித்துக் கொள்ள முடியாதது.

ஒட்டு மொத்த தேசத்தையும் அவமானப்படுத்தக்கூடியது. தேச நலனை விரும்பும் அனைவரும் இதை கண்டிக்க வேண்டும்.
"இதெல்லாம் உங்களைப்பார்த்து  எதிர்க்கட்சிகள் திட்டவேண்டிய வார்த்தைகள்.நீங்கள் முந்திக்கொண்டு பேசுவது வேதனையாக,வேடிக்கையாக  இருக்கிறது போலி தாக்குதல் காணொளி,படங்களைப்பகிர்ந்த பாஜகவின் பிரதமர் மோடி அவர்களே."
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
டுவிட்டரில் மோடியை தூக்கி நிறுத்தும் 
பாஜக கூலிப்படை!
தமிழகப் பெயர் கொண்ட பாஜக ஆதரவு ட்விட்டர் கணக்கு ஒன்றிலிருந்து போலி பெயர்களில் மிக அதிகமாக பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் மோடிக்கு ஆதரவான ட்விட்களும், ரீ-ட்விட்டுகளும்  செய்யப்பட்டுவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பாஜகவினர் நாடு முழுவதும் பதற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

 தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அது எந்தெந்த தொகுதிகள் என்றுஇறுதி செய்யப்படாத நிலையில் பிரச்சாரக் கூட்டங்களைநடத்திவருகிறது.
மோடியின் பிம்பத்தை மீண்டும் பெரிதாக கட்டமைக்க முயற்சி நடந்து வருகிறது.

ஆனாலும் தமிழகத்தில் அவர்களது எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் கானல் நீராகி வருகிறது.
 கடந்தஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சியைத் திறந்துவைக்க மோடி தமிழகம்வந்ததிலிருந்து தற்போது வரை ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் சமூக வலைத் தளங்களில் #Go Back Modi என்னும் ஹேஷ்டேக் மோடி எதிர்ப்பாளர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.


வெள்ளியன்றும் மோடி குமரி வருகையையொட்டி, காலையிலிருந்து இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #Go Back Modi முதலிடத்தில் இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் ட்விட்டரில் மோடியின் பலத்தைக் கூட்டும் விதமாக, மோடிக்கு ஆதரவான செய்திகளை மிக அசாத்தியமான எண்ணிக்கையில் பகிரும் சீனிவாசன் என்ற தமிழகப் பெயர் கொண்டடுவிட்டர் கணக்கு ஒன்றை பிரெஞ்சு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியட் ஆல்டெர்சன் கண்டுபிடித்துள்ளார். 

சீனிவாசன் ட்விட்டர் கணக்கு இந்த பிப்ரவரி மாதத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. 
ஆனால் இதுவரையில் சுமார் 16,300 ட்விட்டுகளும்,
 ரீ-ட்விட்டுகளும் அந்தக் கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளன. 

அவை அத்தனையும் மோடிக்கு ஆதரவான கருத்துகள்.பாஜக சார்புள்ளவர்கள்  81 பேர் மட்டுமே அந்தக் கணக்கைப் பின்பற்றுகின்றனர். 

மோடி, அருண் ஜெட்லி, அமித் ஷா, விஜய் டிவி, நடிகைகள் கவுதமி , சாய் பல்லவி, எம்.எஸ்.தோனி, ஏ.ஆர்.முருகதாஸ், கமல்ஹாசன், தமிழ்நாடு பாஜக, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 123 பேரை அந்த சீனிவாசன் பின்பற்றுகிறார்.

 இந்தக் கணக்கிலிருந்து பிப்ரவரி 13ஆம்தேதி 3 மணிநேரத்தில் 1,500 ட்விட்டுகள் பதிவிடப்பட்டிருப்பதாக எலியட் ஆல்டெர்சன் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அடுத்தடுத்து இட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தக் கணக்கிலிருந்து 28 நாட்களில் 16,200 ரீ-ட்விட்டுகள் பதியப்பட்டுள்ளன.
சராசரியாக ஒரு நாளைக்கு 578 ரீ-ட்விட்டுகள் பதியப்பட்டுள்ளன.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணிநேரம் உறங்குகிறான்.
 இதன்படி பார்த்தால் எஞ்சியுள்ள 16 மணி நேரத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சராசரியாக 36 ரீ-ட்விட்டுகள் பதிவாகியுள்ளன.
இதற்கு இரண்டே சாத்தியங்கள்தான் உள்ளன.
ஒன்று, பணம் கொடுத்து ஒருவர் இப்பணியைச் செய்து வந்திருக்க வேண்டும் அல்லது ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதே போல்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் மோடி ஆதரவான டுவிட்கள் மோடி தமிழகம் வருகையின் போதெல்லாம் வெல்சம் மோடி என்றும்.மதுரை வரவேற்கிறது,திருப்பூர் வரவேற்கிறது ,குமரி வரவேற்கிறதுஎன்றெல்லாம்  மகாராஷ்டிராவில் இருந்து டிரெண்ட் ஆக்க அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.ஆனால் அவை அனைத்தும் #Go Back Modமுன் அசிங்கப்பட்டு தோற்றுப் போயுள்ளது.

சமூக வலைதளங்களில் குடிமக்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக பிப்ரவரி 25ஆம் தேதி ட்விட்டர் நிர்வாகி கோலின் குரோவெல்லுடன் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்தியது.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேர்தல் தொடர்பாக உள்நோக்கத்துடன், எந்தவிதமான அரசியல் தலையீடுகளையும் ட்விட்டர் மேற்கொள்ளக் கூடாது என்று அன்றைய கூட்டத்தில் டுவிட்டர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதே ட்விட்டரைப் பயன்படுத்தி பாஜக ஆதரவு கணக்கிலிருந்து மோடி ஆதரவுப் பிரச்சாரத்துக்காக அசாத்தியமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வெளியாகியுள்ளது.

====================================================
 
ன்று,
மார்ச்-02.

 டெக்சாஸ், குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)

உப்பு சத்தியாகிரகம் என்ற தண்டி யாத்திரை துவக்கம் (1930)

இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)

மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1956)

====================================================
 திறக்காதே.!
ஸ்டெர்லைட் தாமிர உருக்குஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கோரி ஆலை நிர்வாகத்தின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதானவிசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது.

வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்க மறுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியிருந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் எதிர்த்தரப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தன்னை இணைத்துக் கொண்டார்.
 இந்த மனு நேற்று (மார்ச்1)விசாரணைக்கு வந்தபோது மார்க்சிஸ்ட் கட்சித் தரப்பில் பிரபல வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பல வலுவான ஆதாரங்களுடன் தனது வாதத்தை முன்வைத்தார்.
இது நீங்கள் பேசவேண்டிய வசனம் இல்லை.எதிர்க்கட்சிகள் உங்களைப்பார்த்து திட்ட  வேண்டிய அறிவுரை.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சரியானது என்றும் பராமரிக்க என்று சொல்லிக்கொண்டு ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை என்றும் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்றும் கூறிய  உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனு மீதான விசாரணை யை மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் அரசும்,மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தங்கள் விளக்கத்தை அன்று நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என்றும் கூறினர்..
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?