செவ்வாய், 5 மார்ச், 2019

திசை திருப்புவது யார்?

"எதிர்க்கட்சிகளுக்கு மேடைதோறும் நாகரீகமாகப்பேசுங்கள் என்று படம் எடுக்கும் மோடி,
தன்னை ஏழைத்தாயின் மகன் என்று ஏளனம் செய்வதாக கண்ணீர் விட்டு கதறி அழும் மோடி,
இந்தியாவின் பிரதமர் என்ற பொறுப்புக்கூட இல்லாமல் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் பற்றிய மாணவர்கள் கேள்விக்கு ராகுலை நக்கலடிப்பதாக எண்ணி அக்குழந்தைகளை சிறுமைப்படுத்தி பேசியுள்ளார்.
சாதாரணமானவர்களே இதுபோன்ற குறைபாடுகள்,மாற்றுத்திறனாளிகளை குறை கூற கூடாது என சட்டப்பாதுகாப்பு நிலையில் ஒரு பிரதமர் இப்படி பேசியுள்ளது இந்தியா மட்டுமின்றி  முழுக்க கண்டனத்தை உருவாக்கியுள்ளது."

மோடியின் செயல்களும் சொற்களும் இவ்வளவு இழிவானதாக இருக்குமா என நினைக்கும் பொழுதே இப்படிப்பட்டவர் இன்னும் பிரதமர் பதவியில் தொடரலாமாஎன்ற கொதிப்புமிக்க கேள்வியை ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுத்திவிட்டார்.

‘டிஸ்லெக்சியா’ எனப்படும் குழந்தைகளிடம் காணப்படும் கற்றல் குறைபாடு உள்ள சிரமங்கள் குறித்து மோடியின் மோசமான பேச்சு பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 
உண்மையில் டிஸ்லெக்சியா என்பது ‘கற்றல் குறைபாடு’ அல்ல! 

அது ‘கற்றல் மாறுபாடு’. அதாவது மூளை நரம்புகளில் உள்ள சில மாற்றங்கள் காரணமாக குழந்தைகள் மாறுபட்ட வழிகளில் கற்க முயல்கின்றனர் என மருத்துவ உலகம் வரையறை செய்துள்ளது. 
ஆனால் டிஸ்லெக்சியா குறைபாட்டை கிண்டல் செய்துள்ள மோடியின் பேச்சு டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை விளைவித்துள்ளது.
மோடியின் அருவருப்பான பேச்சுஐ.ஐ.டி. கரக்பூரில் ‘ஸ்மார்ட் இண்டியா ஹேக்கத்தலான்’ எனும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் மாணவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.
 அப்பொழுது ஒரு மாணவி டிஸ்லெக்சியா குழந்தைகளுக்கு உதவும் தனது கண்டுபிடிப்பு குறித்து முன்வைத்தார். அப்பொழுது குறுக்கிட்டு பேசியமோடி, “இது 40 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு உதவுமா” என கேட்டுள்ளார்.இதனை எதிர்பார்க்காத அந்த மாணவிசுதாரித்து கொண்டு, சாத்தியமே என பதில் கூறினார். அதற்கு மோடி “அப்படியானால் அவரது தாய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என கூறினார்.

இது ராகுல் காந்தியையும் சோனியா காந்தியையும்தான் குறிக்கும் என்பது வெள்ளிடைமலை!
 இந்தியாவில் 18 சதவீதம் குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளதுஎன மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மிகப்பெரிய சவாலை சந்திக்க மருத்துவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் செயல்பட்டு வரும் வேளையில் ராகுல் காந்தியைகிண்டல் செய்ய இதனை பயன்படுத்திக் கொள்ள முயன்ற மோடியின் கீழ்த்தரமானபேச்சு கடும் கண்டனங்களை விளைவித்துள்ளது.
 இவ்வளவு மலிவானவரா நம் பிரதமர்?
தொலைக்காட்சி புதிர்ப்போட்டி நடத்துபவரும்,வலதுசாரி ,பாஜக ஆதரவாளருமான  சுமந்த் ராமன்  கீழ்கண்டவாறு டிவிட்டரில் கூறியுள்ளார்:-

“லியானார்டோ டாவின்சி, ஆல்பர்ட் ஐன்ஸ்டின், பாப்லோ பிக்காசோ, லீ குவான் கியூ, அலெக்சாண்டர் கிரஹாம் பெல், டாம் குரூஸ் மற்றும்
பல மகத்தான ஆண்களும் பெண்களும் டிஸ்லெக்சியாவால்
பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் நம் வாழ்வில்
எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தினர் என்பதை பாருங்கள்.
மாற்றுத் திறனாளிகளை கேலி செய்வது என்பது அரசியல்
தளத்தில் புதிய ‘கீழ்த்தரத்தை’ சாதித்துள்ளது”.

ஜாய்தாஸ் என்பவர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“அரசியல் எதிரியை விமர்சிக்க டிஸ்லெக்சியாவை கிண்டல் செய்வது அருவருக்கத்தக்கது. நரேந்திர மோடியின் கீழ்த்தரத்திற்கு எல்லை என்பதே இல்லை. இவரது பேச்சுக்கு மாணவர்கள் கை தட்டு
வது இன்னும் மோசம். ஆனால் அவர்களை குறை சொல்ல முடியாது.
தேசத்தின் பிரதமர் இவ்வளவு மலிவானவராக இருக்கும்பொழுது
அவரை மாணவர்கள் சந்தோஷப்படுத்த வேண்டியிருந்தது.”

ஜாஸ் ஓபராய் கீழ்கண்டவாறு கண்டிக்கிறார்:
“டிஸ்லெக்சியா மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட குழந்தை
களை கேலி செய்வதன் மூலம் தனது அரசியல் எதிரியை கிண்டல்
செய்வது அறிந்தேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமர் இவர்!
மிகக் கேவலம்!
இதனை ரசித்து சிரித்த முதுகெலும்பு இல்லாத பொறியியற் மாணவர்களின் செய்கை இன்னும் மோசம்.
அழிவுப்பாதையில் இந்தியா!”

தர்மபாடா எனும் டிவிட்டர் பதிவு கீழ்கண்டவாறு பதிவு செய்கிறது:
“சர்வதேச மேடையில் STRENGTH என்பதை STREANH என
உச்சரித்த 68 வயது மனிதர் டிஸ்லெக்சியாவை கிண்டல் செய்வது
விந்தை!”
இந்த பதிவுக்கு ஒரு பதில் நையாண்டி பதிவு:
“ Mrs மைத்திரி பாலாவை M.R.S. மைத்திரிபாலா என சரியாக
உச்சரித்ததை நீங்கள் பாராட்ட வேண்டாமா?”

பிரீத்தி சர்மா மேனனின் பதிவு:
“ கடவுளே! மோடி இதற்கு மேல் கீழ்த்தரமாக பேச முடியாது என
எண்ணும் பொழுது இன்னொரு புதிய சாதனையை மோடி உருவாக்கு
கிறார். டிஸ்லெக்சியாவை கிண்டல் செய்யும் எந்த பேச்சையும் எனது குழந்தைகள் கேட்கக் கூடாது என எண்ணுகிறேன். ஆனால் நமது பிரதமரே இப்படி பேசினால் என்ன சொல்வது?”

ஆகாஷ் மாவலின் பதிவு:
“டிஸ்லெக்சியாவை கிண்டல் செய்வது என்பது மிகவும் அரு
வருக்கத்தக்கது. பூமியின் அடித்தளத்திற்கே சவால்விடுகிறது இந்த கீழ்த்தரமான பேச்சு”

இப்படி ஏராளமான கண்டனங்கள் மோடிக்கு குவிகின்றன. இத்தகைய நபர் ஒருவர் இந்த மாபெரும் தேசத்தின் பிரதமர் என்பது எவ்வளவு வேதனையான ஒன்று?
தொகுப்பு : அ.அன்வர் உசேன்
---------------------------------------------------------------------------------------------------------------
திசை திருப்புவது யார்?

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சர்ச்சைக்குள்ளாக்கக்கூடாது என்று கூறிக்கொண்டே சர்ச்சைக்குள்ளாக்கிக் கொண்டிருப்பது பிரதமர் மோடியும், பாஜக பரிவாரமும்தான்.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடு மற்றும் உளவுத்துறையின் தோல்வி குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு மோடியிடம் பதில் இல்லை.
 மறுபுறத்தில் ஜம்மு- காஷ்மீர் பிரச்சனையை மேலும் மேலும் சிக்கலாக்கி, சுமூக தீர்வுக்கான அனைத்து வாய்ப்புகளையும் மூடி, பயங்கரவாதம் செழித்து வளர்வதற்கு காரணமாக இருப்பது மோடி அரசின் அணுகுமுறைதான். ஆனால் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, தன்னுடைய அரசின் கடந்த கால தோல்விகள் அனைத்தையும் திசை திருப்பகிடைத்த வாய்ப்பாக புல்வாமா தாக்குதலை மத்திய பாஜக கூட்டணி அரசு கருதுகிறது.

 ஒரு நாட்டினுடைய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த ஒரு அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளில் ஒன்று பயங்கரவாதத்தை ஒடுக்குவதும், பாதுகாப்பை உறுதி செய்வதும்.
ஆனால் பயங்கரவாதம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் மோடி அரசு குறி வைக்கிறது.
ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு வளர்ந்துள்ளது.
அவர்களதுஅத்துமீறல் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா எப்படி பயங்கரவாதத்தை தன்னுடைய வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொண்டு அதிகாரப்பூர்வ பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதோ அதேபோல பாஜகவும் இந்தியாவில் நடந்து கொள்கிறது.
 இந்த நடவடிக்கைகளுக்கு மோடியின் பூரணமான ஆசி உண்டு.
இந்த பின்னணியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்த தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்பதா என பொங்கியுள்ளார் மோடி.

 தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து விமானப்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறாத நிலையில் ஆதாரமற்ற செய்திகளை மக்களிடம் அள்ளி வீசியது ஆர்எஸ்எஸ்- பாஜக வகையறாவும் அவர்களது ஆதரவு ஊடகங்களும்தான். 

எனவே ராணுவத்தினரை இழிவுபடுத்துவதாக மோடி பேசுவதுதான் உண்மையில் அவர்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது.இந்திய ராணுவத்தை தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பாஜக பயன்படுத்துவதுதான் உண்மையான பயங்கரவாதம்.
அமுலாக்கப்பிரிவு,சிபிஐ,தேர்தல் ஆணையம்,ரிசர்வ் வங்கி வரிசையில் பாஜக கைப்பாவையாக ராணுவத்தையும் கொண்டுவர மோடி முயல்வது இந்தியாவையே அழிக்கும் முயற்சி.
இதற்கும் பாகிஸ்தான் உருவாக்கும் பயங்கரவாதிகளின் அழிவுச் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

 தன்னுடைய குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட பணயம்வைக்க இவர்கள் தயங்கமாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ஊழல், கறுப்புப்பணம், பயங்கரவாதம் போன்றவற்றை தான் ஒழித்துவிட்டதால் தன்னை ஒழிக்க முயற்சி நடக்கிறது என்றும் மோடி கூறியுள்ளார்.

 பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ஊழல், கறுப்புப் பணம், பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்று இவர் உறுதியளித்தார்.
ஆனால் அதன்பிறகு அனைத்தும் செழித்து வளர்ந்துள்ளது.
இதை மறைக்க மோடி முயன்றாலும் உண்மை இவரது பொய்களை விட உயரத்தில் இருக்கிறது.
====================================================
 
ன்று,
மார்ச்-05.
தோழர் ஸ்டாலின் நினைவு நாள்.(1953)
ஈரான் தேசிய மரம் நடுதினம்
பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்தது(1824)
ஐரோப்பாவின் முதல் விமானமான குலோஸ்டர் மெட்டர் பறக்க விடப்பட்டது(1943)
இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்தது(1964)


தோழர் ஸ்டாலின்
சோவியத் ரஷ்யா புதிய சமூகத்தை படைத்தது. அந்த சமூகம் புதிய மனிதனை படைத்தது.
அதில் தோழர் ஸ்டாலினின் பங்கு மகத்தானது. தொழிலும் விவசாயமும் பன்மடங்கு வளர்ந்தன.
 முதலாளித்துவ உலகம் நெருக்கடியில் திணறிக்கொண்டிருந்த பொழுது சோவியத் யூனியன் சாதனைகளை படைத்துக்கொண்டிருந்தது.

1934ஆம் ஆண்டு ரஷ்யாவின் கடைசி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது.
அந்த விழாவிற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின் பேசினார்: ‘‘முதலாளித்துவ நாடுகளில் மக்கள் வேலைகளை தேடிக்கொண்டுள்ளனர்; ஆனால் ரஷ்யாவில் வேலைகள் மக்களை தேடிக்கொண்டுள்ளன.

’’ ஆம்! சோவியத் ரஷ்யாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது. இது சோசலிச சமூகத்தில்தான் சாத்தியம்! அதனை சோவியத் யூனியன் நிரூபித்தது.

 இந்த சாதனைக்கு பின்னால் இலட்சக்கணக்கான ரஷ்ய உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு இருந்தது. அவர்களுக்கு தலைமை தாங்கிய தோழர் ஸ்டாலினுக்கு அதில் முக்கியப் பங்கு இருந்தது.
====================================================
 5ஜி.
 4ஜி  விட நுறு மடங்கு டேட்டாக்களை வேகமாக பரிமாறிக்கொள்ள முடியும்5ஜி வருகையால்.
ஒரு முழு திரைப்படத்தை 3ஜியில் தரவிறக்கம் செய்யும் பொழுது 26நிமிடம் ஆகும்.

 4ஜி யில் டவுன்லோட் செய்யும் பொழுது 6 நிமிடத்தில்  தரவிறக்கம் செய்ய முடியும்.  
அதேப் படத்தை  5ஜி யில் 3.5 வினாடியில் தரவிறக்கம் செய்ய முடியும்.

இதில் உள்ள மிகப்பெரியக் குறை 4ஜி மொபைல் போனை  பயன்படுத்த 10 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல் கம்பங்கள்  இருந்தால் போதும். 
ஆனால்  5ஜி னை பயன்படுத்த 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கம்பங்களை அமைக்க வேண்டியிருக்கும். 
அப்பொதுதான் அதன் இணைய  வேகம் எதிர்பார்த்த அளவு கிடைக்கும். 
இதனால்  அதிக அளவு  அலை கற்றைவீக்க  வெளிப்படுவதால் பறவைகளுக்கு மட்டுமின்றி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பாதிப்புகள் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------