காவல்காரரை மாற்ற வேண்டியதுதான்





ரபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டன.

ரபேல் ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடுபோய்விட்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கின் விசாரணை புதனன்று (மார்ச் 6) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார்.

மறுசீராய்வு வழக்கைத் தொடர்ந்த மூத்தவழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், டிசம்பர் 14ஆம் தேதி ரபேல் விவகாரத்தில் அளித்த தீர்ப்பில் மிகப்பெரிய பிழைகள் இருப்பதாகவும், பாஜகதலைமையிலான அரசு நீதிமன் றத்தை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்து நாளிதழ் குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் அளித்த கடிதத்தின் ஆவணங்கள் புதிதாக சமர்ப்பிக்கப்பட் டதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இந்த கட்டத்தில் புதிய ஆவணங்கள் எதையும் பார்க்கப்போவதில்லை எனவும் நீதிபதிகள் கூறிவிட்டனர். இதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால் வாதிடுகையில் தி இந்து ஊடகம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதற்கு எதிர்ப்புதெரிவித்தார்.

 “இதுபோன்ற முக்கியஆவணங்களை வெளியிடுவது ஏற்புடையதல்ல.
இந்த ஆவணங்களை ஒருவர் வைத்திருப்பதே இரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
இதற்காக அரசாங்கம் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளது” என்றார்.
மேலும், “பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரபேல் ஒப்பந்தம் குறித்த சில முக்கிய ஆவணங்கள் முன்னாள் அல்லது இந்நாள் ஊழியர்களால் திருடப்பட்டுள்ளது” என்றும் வேணுகோபால் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆவணங்கள் திருடு போயுள்ளது என்றால்அதுதொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வியெழுப்பினார்.
“ஆவணங்கள் வெளியானது எப்படி என்பது தொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 ரகசிய ஆவணங்களை வைத்து வழக்காடுவது குற்றத் துக்குரிய ஒன்றாகும்.
எனவே இந்தமறு சீராய்வு மனுக்களை தள்ளுபடிசெய்ய வேண்டும்” என வேணுகோபால் கோரிக்கை வைத்தார்.

ஆனால் திருடப்பட்டதாக இருந்தாலும் அதை ஆவணமாகக் கருதலாம்என்று நீதிபதி ஜோசப் கூறினார்.
மேலும் தி இந்து மற்றும் ஏ.என்.ஐ.ஊடகங்கள் வெளியிட்ட ஆவணங்கள் திருடப்பட்ட ஆவணங்கள் என்றால், ஆவணங்கள் திருடு போனது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து மனுதாரர்கள் பிரசாந்த் பூஷண் மற்றும் அருண் ஷோரி ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
 நீதிபதிகள் வழக்கை மார்ச் 14ஆம் தேதிக்குஒத்திவைத்துள்ளனர்.
ராணுவ பாதுகாப்பான சாலையிலேயே 3500 வெடிமருந்துகளை வெடிக்கவைத்து 40 படைவீரர்களைக் கொல்கிறாரகள்.
இப்போது ராணுவ ரகசியம் என்று பொத்திவைத்திருந்த ரபேல் ஊழல் தொடர்பான ஆவணங்கள் திருடு போயுள்ளதாம்.
தன்னைக் கண்துஞ்சா காவல்காரன் என்று மேடைதோறும் சொல்லிக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி காவல் சரியில்லை என்றுதானே அர்த்தம்.காவல்காரரை  மாற்ற வேண்டியதுதான்.

====================================================
ன்று,
மார்ச்-07.
அல்பேனியா ஆசிரியர் தினம்
ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)
அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)
பாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)
====================================================
 Don Ashok
''கேம் ஆஃப் த்ரோன்ஸ்,' சீரீஸில் கொடூரமான ஒரு சாடிஸ்ட் வில்லனைப் பற்றி ஒரு வசனம் வரும்.
"இதுக்கு மேல அவனால என்ன மோசமா பண்ணிற முடியும்?" எனக் கேட்பாள் வில்லனின் மனைவி.
அதற்கு, "உனக்கு அவனைப்பற்றித் தெரியாது. அவனால் இன்னும் இன்னும் மோசமாகக் கூட செயல்களைச் செய்ய முடியும். அதற்கு எல்லையே கிடையாது," என்பான் அவள் மேல் இரக்கம் கொண்ட வேலையாள்.
இந்த வசனம் அந்த சாடிஸ்டுக்கு பொருந்துமோ இல்லையோ, நம்மூர் சாடிஸ்ட் மோடிக்குப் பொருந்தும். சைக்கோத்தனமான நிர்வாகத்திலும் சரி, ஃப்ராடுத்தனம் செய்வதிலும் சரி, பொய் சொல்வதிலும் சரி, கோமாளித்தனம் செய்வதிலும் சரி அவரது சாதனைகளை அவர்தான் முறியடிப்பார்.
Mrs(மிசஸ்) என்பதை எம்.ஆர்.எஸ் என வாசித்தது, ஸ்டைலாக அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் Strength என்பதை strneth என உலக அரங்கில் வாசித்துக் கேவலப்பட்டது, பார்லிமெண்டில் annual dayவில் ஆடும் எல்.கே.ஜி குழந்தைகளைப் போல அஷ்டகோணலாக ஆடிக்காண்பித்து அசிங்கப்பட்டது, இந்திய அரசு தந்தியை நிப்பாட்டியும் தினத்தந்தி இன்னும் வருகிறது என தினத்தந்தி நிகழ்ச்சியில் உளறியது, "புவிவெப்பமயத்தால் குளர் கூடவில்லை, வயதாகிவிட்டதால்தான் உலகத்தில் குளிர் அதிகமாகிவிட்டது," என ஒரு பள்ளிக் குழந்தையிடம் உளறியது, "சாலியே பாண்டிச்சேரிக்கோ வணக்கம்," எனப் பின்னங்லால் பிடறியில் அடிக்க ஓடியது, ஆளில்லாத ஏரிக்கு கை காட்டியது, ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது ஷூட்டிங்கில் இருந்தது, டிஸ்லக்ஸியா குழந்தைகளை குரூரமாகக் கிண்டல் செய்தது என அடுக்கிக்கொண்டே போகலாம். (ஏதாவது விடுபட்டிருந்தால் கமண்டில் சேர்க்கலாம்)
அந்த வரிசையில் இன்று தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, "எமர்ஜன்ஸி காலத்தில் எம்.ஜி.ஆர் அரசை இந்திரா கலைத்தார்," என உளறி வைத்திருக்கிறார். எமர்ஜன்சி சமயத்தில் ஆட்சியில் இருந்தது கலைஞர் அரசு. முதல்வர் மகன் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதெல்லாம் சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும். அதுமட்டுமல்ல, இந்த வர்ல்டுலயே எமர்ஜன்சி எனும் கொடுமைக்கு ஆதரவாகக் கட்சியைக் கூட்டித் தீர்மானம் போட்ட ஒரே மானஸ்தன் நம்ம எம்.ஜி.ஆர். அதை ஆதரித்த ஒரே கரகாட்டக் கோஷ்டி நம்ம அதிமுக! எமர்ஜன்சி காலத்தில் மட்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்திருந்தால் இந்திரா படத்தை அதிமுக அலுவலகத்தில் மாட்டியிருப்பார்!
சரி, மோடிக்கு எழுதிக்கொடுத்தவர்கள்தான் தவறாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். அதை மொழிபெயர்த்த உள்ளூர் சங்கீ எச்.ராஜாவுக்காவது அறிவு வேண்டாமா! வெட்கமா இல்லை!! சரி விடுங்கள். அவர்கள் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்! அறிவு என்பதற்குத் தேவையான 'மூளை' என்கிற அடிப்படை அப்பாரடஸ் இல்லதாவர்கள்தானே!
ஆனால் சங்கிகளே. ஒன்னே ஒன்னு சொல்றேன். அரசியலில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கிண்டல் அடிக்கலாம். அது இயல்புதான். அது ஜனநாயகம்தான். ஆனால் உங்களுக்கு மட்டும் அந்தத் தகுதியே கிடையாதுடா. தகுதியே கிடையாது!!
-டான் அசோக்
மார்ச் 6, 2019

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?