மின்வெட்டு 12 மணியாக அதிகரிக்கும்!
மின் உற்பத்தியில் கடும் பாதிப்பு மாநில அரசின் தொடர்அலட்சியத் தாலும், நிர்வாகச் சீர்கேடு களாலும்,, மின்துறையை சீர்குலைத்து தனியாரிரடம் ஒப்படைக்கும் நாசகரக் கொள்கையாலும் இந்தகொடிய நிலை நீடிக் கிறது. இப்போது மின்வெட்டு 12 மணி நேரமாகும் அபாயத்தை நோக்கி செல்கிறது. |
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்காக கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு நிலக் கரி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கடந்த சில மாதங்களாக நிலக்கரி பற்றாக்குறை ஏற் பட்டதால், அனல்மின் நிலையத்தில் 1050 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் படுவதற்கு பதிலாக, 720 மெகாவாட் அளவிற்கே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று இரவு 4வது யூனிட்டில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 4வது யூனிட் டில் தினசரி நடைபெறும் 180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. இதனிடையே தூத்துக் குடி துறைமுகத்தில் கப்ப லில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யும் கிரே னிலும் சனிக்கிழமையன்று திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்க முடியவில்லை. ஏற்கனவே 4வது யூனிட் டில் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிரேனும் பழுது பட்டுள்ளதால், மின் உற் பத்தி கடுமையாக பாதிக்கப் படும் அபாய நிலை ஏற்பட் டுள்ளது. இது குறித்து அனல்மின் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4வது யூனிட்டிலும், நிலக்க ரியை எடுத்துவரும் கிரேனி லும் பழுது ஏற்பட்டுள்ள தால் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கிரேன் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 3நாட்களில் முடிவடையும். 4வது யூனிட்டை பழுது பார்க்க தில்லியில் இருந்து வல்லுநர்குழு வருகிறது. தற்போது தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளதால் மின் வெட்டு அதிகரிக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே, வடசென் னை அனல் மின் நிலையத் தில் ஹைட்ரஜன் வாயு கசிவு ஏற்படுவதால் அங்கு மின் உற்பத்தி குறைந்துள் ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஸட்டர் இயந் திரக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. நெய்வேலி முதல்நிலை சுரங்கத்தில் நீராவி இயந்திர கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. நெய்வேலி இரண்டாம் நிலை சுரங்கத்தில் கொதிகலன் பிரச்சனையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது. நிலக்கரி பற்றாக்குறை யாலும், தரமற்ற நிலக்கரியா லும் அனல் மின்நிலையங் கள் கடுமையான பாதிப் புக்குள்ளாகியுள்ளன. கிட் டத்தட்ட இயந்திரங்கள் பழுதாகிற அளவிற்கு நிலைமை சீர்கெட்டுள்ளது.
மாதாமாதம் இயந்திரங்கள் சரி பார்க்க சடவுன் என்று மின்தடை செய்து வந்தார்களே அப்போதெல்லாம் எதை பழுது பார்த்தார்கள்?
இப்போதும் மின் வெட்டு நேரமும் வாரா,வாரம் மின் கருவிகள் பழுது-சரி பார்க்க என்று ஒருநாள் முழுக்க மின் விநியோகத்தையே நிறுத்தி என்னதான் செய்கிறார்கள்.?
மொத்தத்தில் எதிர்பாரா காரணங்களுடன் அரசும் திட்டமிட்டேதான் இந்த மின்தட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மின் உற்பத்தி-வழங்கல் துறையை தனியாரிடம் தள்ளிவிடும் நாடகத்தில் இது ஒரு சோக காட்சியாகவே தெரிகிறது.
கடந்த திமுக ஆட்சியில் வெளி மாநிலங்களில் ,மத்திய அரசிடம் இருந்து வாங்கி மின்தட்டுப்பாடை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தது போல் இப்போதைய ஜெயா அரசு செய்ய மறுப்பதின் காரணம் என்ன?
மேலும் அதிக விலைக்கு வாங்கிவிட்டதாக கூறி அதற்கு விசாரணையும் வைத்துள்ளது.தானும் செய்வது கிடையாது.
அடுத்தவர் செய்தால் அதில் ஆயிரத்தெட்டு குறைகளக்கூறுவது.இதுதான் இன்றைய ஜெயா அரசின் ஆட்சி லட்சணம்.
கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பாளர்களுக்கு முழு ஆதரவும் அதை ஆதரிப்பவர்கள் மீது வழக்கு கைது என்று இந்த ஜெயா அரசு எடுக்கு ஒரு சார்பான நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்புகிறது.
இப்படி உருவாகியுள்ள நெருக்கடிகளால் ஏற்கெனவே இருந்த மின் வெட்டு மிகப்பெரிய அள வில் சிக்கலாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நிரந்தரமாகி யுள்ளது. தினசரி 8மணிமுதல்10மணிநேரம் வரை மின்வெட்டு இருக்கிறது. இதனால் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து
வருகின்றனர். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ,மாணவர்கள் தேர்வுக்கு பயில்வதும் மிகக்கடுமையான முறையில் பாதிக்கப்பட் டுள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களும் தொழில் அமைப்பினரும் போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக தொழிற்துறையினருக்கு மின்வழங்காமல் வஏடிக்கைப்பார்த்து பல லட்சம் தொழிலாள்ர் வயிற்றிலடிக்கும் ஜெயா அரசு தமிழ்நாட்டில் உள்ள ஹுன்டஐ,நோக்கியா,சுஸுகி,போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் இலவசமாகவும்-மானிய விலயிலும் நம்மக்களை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்கிவருவது பொறுத்த மற்ற செயலாகத்தெரிகிறது.
மேலும் தமிழகத்தில் வந்து பல்வேறு சலுகைகளில் தொழில்துவங்கஜப்பான் நிறவனங்களை முதல்வர் அழைப்பும் விடுவித்துள்ளார்.அச்சலுகைகளில் தடையற்ற மானியவிலை மிசாரமும் அடங்கும்.
கடந்த வாரத்தில் தொழில் வளமிக்க கோயம்புத்தூரில் கடுமையான மின்வெட்டு காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 30 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிற்சாலைகளை மூடி தொழிலாளர்களும் மக்களும்பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு காவ்ல்துறையினரால் அடித்து விரட்டப்பட்டனர். இந்நிலையில், மின் வெட்டு மேலும் அதிகரிக்கும் என்ற அபாயம் ஏற்பட் டுள்ளது. இதனால் மக்கள் - தொழில் துறையினர் போராட்டமும் மேலும் தீவிரமடையும்கோணத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் அரசோ அனைத்தையும் எங்கோ நடப்பது, தனக்கு சம்பந்தம் இல்லாதது என பக்கத்து வீட்டுக்காரன் போன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
________________________________________________________________
இணைய அமைப்பில் மாற்றம் வருகிறது.
இணையதளத்தின் வழியே நாம் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை பரிமாற முடியும். நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணினியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரியும் தேவைப்படுகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை உலகளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.
இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை ஐபிவி4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு ஐபிவி6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும். ஐபிவி4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், ஐபிவி4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் ஐபிவி6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது. இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும் என தெரிகிறது. |