மாதவன் நாயரே- ."எந்தா பறையுன்னு?"


பெங்களூரை மையமாகக் கொண்ட தனியார் நிறு வனம் தேவாஸ் மல்டிமீடியா. இதற் கும் இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறு வனத்திற்கும் இடையே ஊடக பயன்பாட்டுக்கு உதவும், விண்வெளி அலைக்கற்றை ஒதுக்கீடு ஒப்பந்தம் 2005ம் ஆண்டு ஜனவரி 28ம்தேதி மேற்கொள்ளப்பட்டது.

 மாதவன் நாயர் இஸ்ரோ தலைவராக இருந்போது இந்த ஒப்பந்தம் இருதரப் பினர் இடையே கையெழுத் தானது. ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீடு ஒப்பந்தம் குறித்து, விண் வெளி ஆணையத்திற்கோ அல்லது, மத்திய அமைச் சரவைக்கோ மாதவன் நாயர் தலைமையிலான விஞ்ஞானி கள் தெரிவிக்கவில்லை. 
ஆனால் ஒப்பந்தம் நிறைவேறிய அதே 2005ம் ஆண்டில் நவம்பர் 27ம்தேதி ஜிசாட்-6 என்ற செயற்கைக்கோளை கட்டமைக்க இஸ்ரோ, அரசின் அனுமதியை கோரியது. ஜி சாட் செயற்கை கோள்களில் ஒன்று ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த பயன்பாட் டுக்கும் வந்துவிட்டது.
இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தபோது, உண்மை நிலையை கண்டறிய விண் வெளி ஆணையத்தால் பிரத் யுஷ் சின்கா தலைமையில் 5 உறுப்பினர்கள் கொண்ட குழு விசாரணைக்கு 2011ம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது.

இந்தக்குழு ஒப்பந்த ஆவ ணங்களை ஆய்வு செய்த போது, பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதும், வெளிப்படைத் தன்மை இல் லாததும் உறுதிப்படுத்தப் பட்டது. விசாரணை செய்த பிரதியுஷ் சின்கா மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். விசாரணைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில், ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. இஸ்ரோவின் தலைவராக இருந்த மாதவன் நாயர் மற்றும் பாஸ்கர நாராயணா, கே. ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, வீணா ராவ் ஆகிய விஞ்ஞானிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியத் தேவை உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.


விசாரணைக்குழுவால் குற்றம்சாட்டப்பட்ட 4 விஞ் ஞானிகளும் ஓய்வுபெற்று விட்டனர். ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்திற்கு ஒப் புதல் பெறும், நடவடிக்கை யில் அரைகுறையான மூடி மறைக்கப்பட்ட மற்றும் துல்லியமில்லாத தகவல்கள் கூறப் பட்டிருந்தன. எனவே, முறை கேடு செய்த, விஞ்ஞானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரத்யுஷ் அறிக்கை திட்டவட்டமாக தெரிவித்தது.
ஒப்பந்தம், தேவாஸ் நிறு வனத்திற்கு சாதகமாக இருக் கும் வகையிலேயே இருந்தது. ஒப்பந்த விதிமுறையில் செயற் கைக்கோள் பழுதாகும் சூழல் ஏற்பட்டால், அதற்கான செலவினம்,மற்றும் தயாராக்கித்தருவது  வரை முழுவதும் விண்வெளித்துறையைச் சார்ந்தது. குறிப்பிட்ட செல வினத்தில் வெற்றிகரமாக செயற்கைக்கோள் ஏவப்படும் என தேவாசுக்கு உறுதி அளிக் கப்பட்டிருந்தது.

தேவாஸ் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி பெங்களூர் என குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும், அந்த நிறுவனம் சர்வதேச வாடிக்கையாளராக பரிசீலிக் கப்பட்டிருக்கிறது என தனது அறிக்கையில் பிரத்யுஷ் குழு ஆச்சரியப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்திற்கு, விண் வெளித்துறையின் சட்டப்பிரிவிடம் ஒப்புதல் பெறப்பட வில்லை. ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து தொழில்நுட்ப ஆலோச னைக்குழுவிடமும் தெரிவிக் கப்படவில்லை.
ஒப்பந்தம் பேசி முடிக்கப்படுகிறது?


செயற்கைக்கோள் கமி ஷன் கொள்கை மற்றும் இன் சாட் கழக குழு(ஐசிசி) வரை யறைப்படி செயற்கைக்கோள் திறன், குத்தகை, முதலில் வரு பவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையைக் கொண்டது.

ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த விவரம் திட்ட மிட்டே மூடி மறைக்கப்பட் டுள்ளது. செயல்பாட்டில் உள்ள ஒப்பந்த விவரம் 6ஏ செயற்கைக்கோள் கட்ட மைப்புக்காக விண்வெளி ஆணைய ஒப்புதல் கோரும் போது தெரிவிக்கப்படவில் லை. எனவே முறைகேடு நடந்து உள்ளது என தெரி வித்த விசாரணைக்குழு, மீனாட்சி சுந்தரம், பாலச்சந் திரன், ஆர்ஜி நதூர் ஆகிய விஞ்ஞானிகள் மீதும் நட வடிக்கை எடுக்குமாறு பரிந் துரைத்தது.

இவ்வளவு முறைகேடுகளையும் மறுக்காத அல்லது மறுக்க முடியாத மாதவன் நாடயர், பிரத் யுஷ் சின்கா அறிக்கையில் குறிப் பிட்ட பகுதிகளை மட்டும் வெளியிட்டிருப்பது நியாய மற்றது. கோழைத்தனமானது என்று மட்டும் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டும் கே. ராதாகிருஷ்ணன் தலைமை யிலான விண்வெளி துறை வெளியிட்டுள்ளது. முழுமை யான அறிக்கையை எப் போது வெளியிடப்போகிறீர் கள் என நாயர் கேள்வி எழுப்பி உள்ளார். அப்படியானால் மற்ற பகுதிகளில் மாதவன் நாயர் உட்பட விஞ்ஞானிகள் செய்ததை நியாயம் என்று அறிக்கை கூறு கிறதா என்ன?


ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்த முறைகேடு குறித்து பிரத்யுஷ் அறிக்கை வெளி யான நிலையில் மாதவன் நாயர் மற்றும் குற்றம்சாட் டப்பட்ட விஞ்ஞானிகள் அரசுப்பதவி வகிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தனக்கு பின்னால் இஸ்ரோ தலைவ ரான ராதா கிருஷ்ணனை மாதவன் நாயர் கடுமையாக விமர்சித்து வரிகிறார்அவருக்கு வேறு வழி?தான் செய்த முறைகேடுகளை சரி என்று அவர் கூற இதுவரை அவருக்கு இயலவில்லை.எனவே தற்போதைய இஸ்ரோ தலைவரும் தனது குழுவினரின் முறைகேடுகளை கிளறியவருமான ராதாகிருஷ்ணனை வசைபாடுகிறார்.


பிரத்யுஷ் சின்கா குழு நியமிக்கப்படுவதற்கு முன்பாக, 2011ம் ஆண்டு, பிப்ரவரி 10ம் தேதி இந்த முறைகேடான ஒப்பந்தம் பற்றி விசாரிக்க உயர் அதிகார ஆய்வுக் குழுவை பி.கே.சதுர்வேதி, ராடம் நரசிம்மா ஆகியோ ரைக் கொண்டு மத்திய அரசு நியமித்தது. அவர்கள் இன்னும்  ஆராய்ந்து  கொண்டே இருக்கிறார்கள்.அந்த அறிக்கை இன்னும் தயாராக வில்லையாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?