வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

மீண்டும் ஒரு உலகப் போரா?

"
 "போர் வெறியுடன் ஈரான் மீது அமெ ரிக்கா தாக்குதல் நடத்துமானால், அது ரஷ்யாவின் தெற்கு பிரதேசங்கள் அனைத்தையும் போர்ச்சூழலுக்குள் தள்ளும் என்றும், இதையடுத்து மிகப் பெரும்உலகப் போராகிவிடும் ஆபத்து உள்ளது" என்றுரஷ்ய ராணுவத்தளபதி ஜெனரல் நிகோ லாய் மக்கரோவ் எச்சரிக்கை விடுத் துள்ளார். 


இன்னும் சில மாதங்களில் ஈரான் மீது போர் தொடுப்பதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் அமெரிக்கா மேற் கொண்டிருக்கிறது என்று அவர் எச்ச ரித்தார். அமெரிக்கா தாக்குமானால், அதே அளவுக்கு ஈரானும் பதிலடி கொடுக்கவும் தயாராகி வருகிறது .
“உலக அரங்கில் ஈரான் என்பது மிகவும் முக்கிய இடத்திலுள்ள நாடு. அந்நாட் டின் மீது அநேகமாக வரும் கோடை காலத்தில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் எனத் தெரிகிறது” என்று ரஷ்ய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் நிகோ லாய் மக்கரோவ், மாஸ்கோவில் வியாழ னன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார். தான் தாக் கப்பட்டால் அதே அளவிற்கு மிகவும் கூர்மையான பதிலடித் தாக்குதலை நடத் துவதற்கு ஈரானுக்கும் சக்தி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஈரானை லிபியா,ஈராக் போன்று எளிதாக அமெரிக்கா நினைத்தால் அது பெரும் இழப்பைத்தான் போரின் முடிவில் பெற்றிடும்.


மீள முடியாத முதலாளித்துவ பொரு ளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கித்தவிக்கிறது. தனது பொருளாதா ரம் மேலும் மேலும் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்த எண்ணெய் வளம் கொண்ட லிபியாவை தாக்கி கைப்பற் றிய அமெரிக்க நிர்வாகம், அடுத்து ஈரானுக்கு குறிவைத்துள்ளது. நீண்ட காலமாகவே ஈரானின் அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா திட்டமிட்டு விமர்சித்து வருகிறது. ஈரான் அணு குண்டுகளை தயாரித்து வருவதாகவும் அதனால் உலகின் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், உலகிலேயே மிக அதிகளவிலான பேர ழிவு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இடைவிடா மல் கூப்பாடு போட்டு வருகிறது. ஆனால், அணுசக்தியை தனது நாட்டின் மின் தேவை உள்ளிட்ட ஆக்கப்பூர்வ மான செயல்பாடுகளுக்கு பயன்படுத் தவே ஆராய்ச்சிகளை மேற்கொண்டி ருப்பதாக ஈரான் கூறிவருகிறது. வியா ழனன்று மூன்று அணு உலைகளையும் ஈரான் ஜனாதிபதி திறந்து வைத் துள்ளார்.

ஏற்கெனவே இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்யான காரணத்தைக் கூறி, தனது உலகளாவிய ஊடகங்களைக் கொண்டு போர்வெறிப் பிரச்சாரம் மேற்கொண்டு, அந்நாட் டைத் தாக்கி அழித்து, 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அந்நாட்டின் ஜனாதி பதி சதாம் உசேனையும் தூக்கிலிட்டு படுகொலை செய்தது அமெரிக்கா. அதேபோல லிபியாவிலும் பேரழிவை ஏற்படுத்தி அந்நாட்டின் ஜனாதிபதி மும்மர் கடாபியை படுகொலை செய் தது. சிரியாவுக்கும் அமெரிக்கா குறி வைத்துள்ளது.

இத்தகைய சூழலில், ஈரான் மீது எந்த நேரமும் தாக்குதல் நடத்துவதற்கான முஸ்தீபுகளை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டிருக்கிறது. இதற்காக ஈரானின் கடல் எல்லையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள் ளன. இதனால் அப்பிரதேசம் முழுவதி லும் போர்மேகம் சூழ்ந்துள்ளது.


இது உலகின் அமைதிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இச்சூழலை தடுத்து நிறுத்த ஆசியாவின் மிகப்பெரும் நாடு களான ரஷ்யா-சீனா-இந்தியா ஆகியவை ராஜீய ரீதியாக தலையீடு செய்ய வேண் டும் என, உலகின் பல்வேறு அறிஞர் களும் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தப்பின்னணியிலேயே ரஷ்ய ராணுவத் தளபதியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

'பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் ராணுவ முற்று கை, எந்த நேரத்திலும் இப்பிராந்தியம் முழுவதிலுமே பெரும் மோதலை தூண்டிவிடக்கூடும்' என்று ரஷ்யாவின் கப்பல் படைத் தளபதி அட்மிரல் விளா டிமிர் கோமோயதவ்வும் எச்சரித்துள் ளார்.

ரஷ்யா நாடாளுமன்றமான டூமா வின் பாதுகாப்புக்குழுவின் தலைவராக செயல்படும் அட்மிரல் விளாடிமிர், எந்த நேரத்திலும் ஈரானை அமெரிக்கா தாக்கக்கூடும் என்று தெரிவித்தார். அப்பிராந்தியம் முழுவதிலும் குவிக்கப் பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்க ளிலிருந்து ஒரே நேரத்தில் 450 பேரழிவு ஏவுகணைகளை ஈரான் மீது ஏவி தாக் குதலைத் துவக்க அமெரிக்கா திட்ட மிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


பாரசீக வளைகுடாவில் துவங்கும் இந்த மோதல், காகசஸ் பிரதேசம் முழுவதிலும் பரவக்கூடும் என்றும் ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது.
நிலைமையை உன்னிப்பாக கவ னித்து வருவதாகவும், ரஷ்யாவை ஒட் டியுள்ள பிரதேசத்தில் நிலைமை கைமீறிச் செல்லுமானால், எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு ரஷ்ய ராணுவம் தயாராக இருப்பதாகவும் ராணுவத்தளபதி ஜெனரல் மக்கரோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காகசஸ் பிரதேசத்தில் அமைந்திருக் கும் அர்மேனியா, தெற்கு ஒஸெட்டியா மற்றும் அபாஜியா ஆகிய இடங்களில் உள்ள ரஷ்ய ராணுவ தளங்கள் முழுமை யான தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


துருக்கியில் அமைந்துள்ள தனது ராணுவ தளத்திலிருந்தும் ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும், தனது போரில் ஜார்ஜியாவையும் அஜர்பெய்ஜானை யும் அமெரிக்கா இழுக்கக்கூடும் என் றும் ரஷ்ய ராணுவ நிபுணர்கள் தெரிவிக் கின்றனர். கடந்த வாரத்தில், அஜர்பெய் ஜானை மையமாகக் கொண்டு ஈரா னுக்கு எதிராக இஸ்ரேலிய உளவாளி களின் நடவடிக்கைகள் தீவிரமடைந் துள்ளன என்று ஈரான் அரசு குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலைமையையும் ரஷ்ய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, ஜார்ஜியாவை ஒட்டி கருங்கடல் பகுதி யில் ரஷ்யா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது. அஜர்பெய்ஜானின் துறைமுக நகரங்கள் உள்ள கடல் பகுதி களிலும் ரஷ்யா தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

_________________________________________________________________