திடீர் போராளியான

 அமைச்சர்?

த்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூசி, உ.பி., சட்டசபைத் தேர்தலில் பரூக்காபாத் தொகுதியில் காங்., வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த மாதம் இவரை ஆதரித்து, சல்மான் குர்ஷித் பிரசாரம் செய்தபோது, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு தாங்கள்அளிக்கப்போவதாக பேசினார்.இதற்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்த தேர்தல் ஆணையம்" சட்ட அமைச்சரே, இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது' என தெரிவித்தது.

ஆனால் கிர்ஷித் அடங்குவது போல் தெரியவில்லை.மேலும்மேலும்தன்னை பெரும் போராளியாகக்காட்டி மத உணர்வைத்தூண்டி வாக்குகளை தனது மனைவிக்கு சேகரிக்கிறார்.
 நேற்று பரூக்காபாத்தில் சல்மான் குர்ஷித் பிரசாரத்தின்போது, "தேர்தல் கமிஷன் என்னைத் தூக்கில் தொங்க விட்டாலும் சரி, வேறு என்ன செய்தாலும் சரி. முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன். உ.பி.,யில், 22 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என்றார்.
இவர் இத்தனைநாளாக அமைச்சராக இருந்துள்ளார்.இட ஒதுக்கீடுக்கும்,முஸ்லீம் உரிமைக்கும் என்ன செய்தார்.?

தேர்தல் ஆணையம் தூக்கில் போடாது என்பதை தெரிந்து கொண்டு தனது வீரத்தை மேடைகளில் காட்டுகிறார்.
இத்தனை நாள் இல்லாத மத உணர்வு,அதற்கு உரிமைகளை பெற்றுத்தர தூக்கு மேடை ஏறும் தகிரியம் இப்போது தேர்தலில் வாக்கு சேகரைக்கும் போது மட்டும் வருவதை உணர்ந்து கொள்ள இயலாத அளவு உணர்வு இல்லாதவர்களா இஸ்லாமிய மக்கள்.?
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பேச்சு குறித்து, பா.ஜ., சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறக் கூடாது என சல்மான் குர்ஷித்துக்கு, தேர்தல் கமிஷன் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கட்டுப்படாமல், மதத்தை அடிப்படையாக வைத்து, அவர் மீண்டும் ஓட்டு சேகரித்து வருகிறார். எனவே, சட்டசபை தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், உ.பி.,க்குள், அவர் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் நடத்தை விதிகளை சல்மான் குர்ஷித் தொடர்ந்து மீறி வருவது குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு சல்மான் குர்ஷித் பணிய மறுப்பதாகவும், அவருடைய பேச்சின் தொனி தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ உத்தரவை அவமதிப்பாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சல்மான் குர்ஷித் மீது குடியரசுத் தலைவர் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ள தேர்தல் ஆணையம், குர்ஷித்தின் முறையற்ற நடவடிக்கை, அரசியல் சட்ட அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பணியில் ஊறுளைவிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது.
சல்மான் குர்ஷித் மீது மேற்கொள்ளவேண்டிய அடுத்த நடவடிக்கை குரித்து தேர்தல் ஆணையம் இருநாட்களில்முடிவு செய்யும் என்று தெரிகிறது.

இது குறித்தும்,தேர்தல்விதிகளை கண்டபடி மீறும் தனது அமைச்சர் பற்றியும் கட்சித்தலைவியும் ,அமைச்சர் என்ற முறையில் குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் குர்ஷித் பற்றி மன்மோகனும் கண்டு கொள்ளாமல் இருக்கக்காரணம் என்ன? வாக்குகள் பொறுக்குவது குறைந்துவிடக்கூடாது என்பதுதானா?
______________________________________________________________________________
கிளைவ் போன்
தென் மேற்கு இங்கிலாந்தில் இருக்கும் பிட்போர்ட் உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் கிளைவ் போன் என்பவர் இந்த மன்ற கூட்டங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் தன்னை சங்கடப்படுத்துவதாகவும் தனது இறைநம்பிக்கையின்மைக்கு எதிராகஅமைவதாகவும் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம்
"உள்ளூராட்சி மன்ற கூட்டங்களின் ஒரு பகுதியாக பிரார்த்தனை நடத்தும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், இந்த குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றம் தனது அதிகார எல்லைக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாக" லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிந்துள்ளது.
இதன் மூலம் இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மத சடங்குகளில் ஏற்படும் சங்கடம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இங்கு இந்தியாவிலும் அரசு அலுவலகங்களில் அங்கங்கே மாட்டப்பட்டுள்ள கடவுள்கள் படங்கள்,அலுவலக வாயிலில் அமைக்கப்பட்டுள்ள வாசல் சாமிகள்டியிருப்புஆக்கிரமிப்புகளை அகற்றினால் நல்லாயிருக்கும்.
_________________________________________________________________________________
நேற்று நடந்தவைகள்.
==========================
இது சிலியில் நடந்த தக்காளிச்சண்டை விழா.3000 பேர் இந்த சண்டையில் கலந்து கொண்டனர்.30 டன் தக்காளி சண்டை ஆயுதமாகப்பயன் படுத்தப்பட்டுள்ளதாம்.
கீழே கிரீசில் நடந்த" 48 மணி நேர போராட்டத்"தில் கலந்து கொண்டு மோதிய உண்மை சண்டை.
காவலர்களுடனான சண்டையில் வீழ்ந்த புற நானூற்று வீரன்?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தண்ணீரே உன் விலை என்ன [இந்திய அரசின் தண்ணீர் கொள்கை பற்றி]
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



இலங்கையின் மிகப் பெரிய முருகன் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.


இறக்குவானை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலை 12 அடி உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.



-----------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?