சட்டம் சிரிக்கிறது?


                                                                                           -எஸ்.நூர்முகம்மது
தமிழகச் சட்டமன்ற கூட்டம் 30.01.2012 ல் நடைபெற்று, ஆளுநர் உரை ஆளுநரால் வாசிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை என்று அழைக்கப்பட்டாலும், ஆளுநரால் வாசிக்கப் பட்டாலும் ஆளுநர் உரை ஆளும் அரசின் உரை தான். அதில் பல்வேறு அறிவிப்புகள், சாதனை[?]ப் பட்டியல், கொள்கை அறிவிப்புகள் என பல உள்ளன.



"ஆளுநர்  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்பது தான் நகைப்பிற்கு உரிய ஒன்றாக உள் ளது". தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர் கள் பொறுப்பேற்ற உடனேயே வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இருந்த கொள் ளையர்களும், கொலைகாரர்களும், ரவுடி களும் வண்டி ஏறி ஆந்திராவிற்குச் சென்று விட்டார்கள் என்று பெருமையுடன் குறிப் பிட்டிருந்தார். ஆனால் கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அவரது கூற்றை மறுதலிக்கன்றன. கடந்த 6 மாதங்கள் நடை பெற்ற சம்பவங்களையெல்லாம் பட்டிய லிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக கடந்த ஒரு மாதத்தில், அதாவது ஆளுநர் உரை தயாரிப்பு காலமான 2012 ஜன வரி மாதத்தில் நடைபெற்றுள்ள சம்பவங் களே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எவ் வளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிப் படுத்தும்.

ஆளுநர் உரை அன்றே
ஆளுநர் உரை நிகழ்ந்த 30.01.2012 தமி ழகம் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் சம் பவங்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.30.01.2012 ல் சென்னை அருகே மதுரவாயல் அருகில் வேனில் பணத் துடன் சென்றுகொண்டிருந்த தனியார் நிறு வன வேனை வழிமறித்து, ஊழியர்களை அடைத்துப் போட்டு, அதிலிருந்த ரூ.22 லட்சம் பணத்தைக் கொள்ளையர்கள் அள் ளிச் சென்ற செய்தி பத்திரிகைகளில் வந்துள் ளது.அதே நாளில் வேலூர் அருகே ஆம் பூரில் சத்தியமூர்த்தி என்பவரின் எஸ்.ஆர். நகை அடகுக் கடையின் புறச்சுவரில் துளை போட்டு, ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர்.அதே 30 ம் தேதியில் ஒசூரில் வீட் டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை நாகரத்தினத்தின் வீட்டில் நுழைந்து, அவரை மிரட்டி 40 சவரன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஆளுநர் உரையில் சட்டம்-ஒழுங்கு குறித்து பெருமையடித்த நாளிலேயே அதற்குச் சவால் விடும் வகை யில் இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.


கொலைச்சம்பவங்கள்
2012 ஜனவரி மாதத்தில் மட்டும் நடை பெற்ற படுகொலை சம்பவங்களைப் பார்க்க லாம். ஜனவரி 2ல் சென்னை நுங்கம்பாக்கத் தில் சீதாலட்சுமி எனும் வங்கி அதிகாரி படு கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஜனவரி 3ல் துடிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பட்டப்பகலில் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். இவர் அ.இ.அ.தி. மு.க. பிரமுகராக இருந்து கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 6 ல் பாளையங்கோட்டையில் அரசு பொறியியல் கல்லூரி அலுவலர் மணிராஜ், அவரது மனைவி பார்வதி ஆகியோர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கொள் ளையடிக்கப்பட்டுள்ளன.


ஜனவரி 8ல் சென்னை மைலாப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் அரிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஜனவரி 9ல் சென்னை அம்பத்தூரில் ஆந்திராவைச் சார்ந்த பெண்மணி புவனாரெட்டி படுகொலை. ஜனவரி 10ல் சென்னை கொளத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனேஸ்வர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அதே நாளில் கூடலூர் அருகே மணலி கிராமத்தில் கூலித் தொழிலாளி பாலசந்திரனின் 37 வயது மனைவி ராதாமணி, 15 வயது மகள் சம்யா, 12 வயது மகன் விஷ்ணு ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட் டுள்னர்.


ஜனவரி 10ல் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனம்பட்டி கிராமத்தில் அவர் வீட்டருகே வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். ஜனவரி 12ல் சென்னை முகப்பேர் அருகே ஒரு வாலிபர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 16 ல் கோபி செட்டிபாளையத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை படுகொலை செய் யப்பட்டு, உடல் கிடைத்தது. ஜனவரி 17ல் செங்கல்பட்டில் தே.மு.தி.க. கவுன்சிலர் சுரேஷ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 18ல் திருச்சி உப்பிலியபுரம் அருகே கோஷ்டி மோதலில் சிக்கிய ஆசிரியர் கும ரேசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 19ல் சைதாப்பேட்டையில் ராஜ சேகர் எனும் ஆட்டோ ஓட்டுநர் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட் டுள்ளார்.


ஜனவரி 21ல் சென்னை தீவுத்திடல் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மரத் தில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதே நாளில் விருத்தாசலத்தில் 10 சவரன் நகைக்காக தமிழ்ச்செல்வி எனும் பெண் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப் பட்டுள்ளார்.ஜனவரி 23 ல் புதுக்கோட்டை விராலிமலை அருகே அய்யப்பன், ரமேஷ் என்பவர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். ஜனவரி 23 ல் கோட்டூர்புரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஜனவரி 24ல் சென்னை போரூரை அடுத்த மாங்காட்டில் மகளிர் சுய உதவிக்குழு தலைவி அம்பிகா கழுத்தறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்.ஜனவரி 26 ல் வண் டலூர் தவுஷிக் நிஷா எனும் பெண் அவரது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார். ஜனவரி 27ல் ஆலந்தூர் ஜல்ல டியன் பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் வெட் டுக் காயங்களுடன் ஒரு ஆண்பிணம் கண்டு பிடிக்கப்பட்டது.

கொள்ளைச் சம்பவங்கள்
ஜனவரி புத்தாண்டில் வழிபாட்டுக்காக சென்ற மேரி வினோமிகா எனும் பெண்ணை வழி மறித்து 12 சவரன் நகை பறித்துச் செல் லப்பட்டது. ஜனவரி 3ல் சென்னை அசோக் நகரில் தனியாக இருந்த அனுராதா அகர்வால் எனும் பெண்ணிடம் ரூ.2 லட்சமும், நகை களும் கொள்ளையடிக்கப்பட்டது. ஜனவரி 7ல் வில்லி வாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து டேவிட் என்பவரின் வீட்டில் 21 சவரன் நகையும், ரூ.6000 மும் கொள்ளை அடிக்கப்பட்டது. வேளச்சேரியில் ஜெய லட்சுமி எனும் பெண்ணிடம் வழிமறித்து, 10 சவரன் நகை பறிக்கப்பட்டது. ஜனவரி 8ல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.2.5 லட்சம் பணமும், 3 கிலோ வெள்ளியும் கொள்ளை அடிக்கப்பட்டது.


ஜனவரி 12 ல் ஆலந்தூர் ஆலம்பாக்கத் தில் தனியாக இருந்த புஷ்பா எனும் பெண் ணைக் கட்டிப் போட்டு, அவரது கழுத்தில் கிடந்த 11 சவரன் நகையை திருடர்கள் தட்டிச் சென்றனர். ஜனவரி 18ல் சென்னை கொடுங் கையூரில் லாரி அதிபர் ராஜ்குமார் வீட்டில் பூட்டை உடைத்து, 27 சவரன் நகை, ரூ.10000 தொகையும் கொள்ளை அடிக்கப்பட்டது.அதே நாளில் சென்னை வளசரவாக்கத்தில் வெங் கடேச பெருமாள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

அன்றைய தினம் குமரி மாவட்டம் திட்டு விளையில் மெயின் ரோட்டில் உள்ள தோ வாளை கூட்டுறவு வீட்டுவசதி சங்க வங் கியில் 2 கேஸ் சிலிண்டருடன் வந்த கொள் ளையர்கள் லாக்கரை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.


ஜனவரி 23 ல் ஆலந்தூர் பெருங்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் பட்டப் பகலில் துப்பாக்கியால் மிரட்டி ரூ.24 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஜனவரி 25-ல் சிவகங்கையில் அடகுக்கடையில் கள்ளச் சாவி போட்டு திறந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இவ்வாறு இந்த ஒரு மாதத் தில் மட்டும் நடைபெற்ற சம்பவங் களில் ஒரு சில மட்டும் தரப்பட்டுள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் கடந்த 6 மாத ஆட்சியின் லட் சணத்தை இந்த ஒரு மாத நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

காவல்துறை நிலை

இத்தகைய படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் சிலவற்றில் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டாலும் பல வழக்குகளில் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, கைது செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட் டச் செயலாளர் தோழர் கனகராஜ், செல்வம் எனும் நபரின் நில மோசடிக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக அவரது வீட்டில் 2012 ஜனவரி 6 ல் நள்ளிரவு நேரத்தில் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது.கம்யூனிஸ்ட் தொண்டர்கள்மருரத்துவமனையிலேயே தாக்கப்பட்டனர். இதில் குற்றவாளிகள் யார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தும் காவல்துறை இதுவரை குற்றவாளிகள் எவ ரையும் கைது செய்யவில்லை.கையைக்கட்டிக்கொண்டிருக்கின்றனர்.


கடந்த ஆண்டு நவம்பர் 29 ல் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் 4 இருளர் இன இளம் பெண்கள் காவல்துறையைச் சார்ந்த 8 காவலர்களால் கொடூரமான முறையில் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் கூட குற்றவாளி களான காவலர்கள் இதுவரை கைது செய்யப் படாதது வெட்கக்கேடானது. ஒரு பெண் முத லமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இத் தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது.


அதிரடி இடம் மாற்றங்களையும், அரசியல் தொடர்புடையவர்கள் கைது நிகழ்வுகளையும் சந்திக்கும் தமிழகத்தில் ( நில மோசடி, கட்டப் பஞ்சாயத்து, அராஜகச் செயல்களில் ஈடு படும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை) இத்தகைய சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அத்தகைய குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் நடவ டிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, வீண் தம் பட்டம் அடிப்பதில் பலனில்லை.

_____________________________________________________________________________________
முல்லைப் பெரியாறும் , சில தமிழர் துரோகிகளும்
தமிழீழ விடுதலையில் தனது ஊடக பலத்தை முழுமையாக தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய ‘இந்து’ குழுமும் வழக்கம் போல தற்போது முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலிலும் தமது தமிழின விரோதப் போக்கை பார்ப்பனத் திமிருடன் வெளிப்படுத்தியிருக்கிறது. தமது குழுமத்தின் சார்பில் வரும் ஃபிரண்ட்லைன், டிசம்பர் 30, 2011 இதழில் “1886 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமே தவறானது என்றும், முல்லைப் பெரியாறு அணை கட்டியதே தவறு, அதற்குப் பதிலாக புதிய அணையும் கட்டக் கூடாது, அந்த தண்ணீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும்” என்றும் ஒரு நேர்காணல் வெளியாகி உள்ளது. அந்தக் கருத்துக்களை வெளியிட்டவர், மத்திய அரசின் முன்னாள் நீர்வளத் துறையின் தலைமைச் செயலாளரும், இந்தியாவின் முதல் தேசிய நீர் திட்டத்தின் வரைவினைக் கொடுத்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியுமான பி.இராமசாமி அய்யர் ஆவார். இவரைப் போலவே மனித உரிமை விசயங்களில் குரல் கொடுக்கும் கிருஷ்ண அய்யரும் கேரளாவில்அச்சுதானந்தன் நடத்திய கண்டனப் பேரணியில் பங்கேற்றுள்ளார்.

மேற்கண்ட இரு பார்ப்பனர்களும் கேரளத்தில் இருப்பவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பார்ப்பான் ‘இந்து’ ராமும், கேரள பார்ப்பனர்களுடன் இணைந்து மலையாளிகளுக்கு ஆதரவாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். இராமசாமி அய்யரின் நேர்காணல் வெளியாகி இருக்கும் அதே ஃப்ரண்ட்லைன் இதழில் ஆர்.கிருஷ்ணகுமார் என்பவர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதையும் சிறப்பாக வெளியிட்டு மகிழ்கிறது ஃபிரண்ட்லைன். 1886 இல் தங்களுக்கு முழு உரிமை இல்லாத, சொந்தமில்லாத நிலம் என்று தெரிந்தும் வெள்ளையரையும் ஏமாற்றி திருவாங்கூர் சமஸ்தானத்தால் போடப்பட்ட ஒப்பந்தத்தில் திருவாங்கூர் சார்பாக கையொப்பமிட்டவர் திவான் இராமையங்கார் என்ற பார்ப்பனர் தான்.
மத்திய அரசின் மத்திய நீர்வழி ஆணையத்தின் தலைவராக இருந்த மலையாளியான கே.சி.தாமஸ், அண்மையில் 2011, நவம்பா 27 அன்று பத்திரிகை யாளர்களிடம் பேசும்போது, பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது. அதன் உறுதியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. கேரள அரசின் கூற்றுகளில் உள்நோக்கம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை நீர் தேக்கினாலும் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.

1980 இல் அணை தொடர்பாக கேரள - தமிழ்நாடு இரு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடந்தது. அப்பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்து தலைமை தாங்கியவர் இதே கே.சி.தாமஸ் தான். அப்போது மத்திய நீர் வழி ஆணையத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக, அணை பாதுகாப்பாக இல்லை என்று கூறி அதைப் பலப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னார். அதன்படி அணை பலப்படுத்தப்பட்டது. அதைத் தான் மீண்டும் கே.சி. தாமஸ், 1981க்குப் பிறகு அணையின் பாதுகாப்புப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை எனக் கூறுகிறார். மேலும் இராஜஸ்தான் மாநிலத்தில் 1730 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு அணையே இன்று வரை உறுதியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். ஆனால் பார்ப்பன இராமசாமியோ எந்த அணையும் 100 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பானது அல்ல என்கிறார். இந்த பார்ப்பான்தான் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தேசிய நீர்க் கொள்கையை வடிவமைத்தவராம். தமிழர்களின் ஒட்டு மொத்த ஆற்று நீர் உரிமை இழப்புகளுக்கு இவர்தான் காரணம் என்பது தெளிவாகிவிட்டது.

அதேபோல 1979 ஆம் ஆண்டு “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்து எஞ்சியுள்ள நீரை இடுக்கி அணைக்குத் திருப்பி அங்கு மின்சாரம் தயாரிக்கலாம்” என்ற கருத்தை முதன்முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து கேரள அரசுக்குக் கொடுத்து மோதலுக்கு முன்முயற்சி எடுத்தவர் எம்.கே.பரமேசுவரன் நாயர் ஆவார். அவரும் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் “அணை உடைந்தாலும் அந்த நீரை இடுக்கி அணை முழுமையாகத் தாங்கிக் கொள்ளும். அணை பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை” எனறு கூறியுள்ளார்.
பிறப்பால் மலையாளிகளான மலையாள தேசிய இனத்தைச் சேர்ந்த கே.சி.தாமஸ், எம்.கே. பரமேசுவரன் நாயர், அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி ஆகிய நீர் மேலாண்மை வல்லுநர்களும், சட்ட வல்லுநர்களும் முல்லைப் பெரியாறு அணை பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று நேர்மையுடன் அறிவிக்கின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழர்களின் உழைப்பால் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ‘இந்து’ ராம் (இப்போது ‘இந்து’ ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்), கேரளாவின் இராமசாமி அய்யர் போன்ற தமிழ் தேசிய இனத்திலோ, மலையாள தேசிய இனத்திலோ இந்தியத் துணைக் கண்டத்தின் எந்த தேசிய இனத்திலோ சேர்க்க முடியாத - எந்த தேசிய இனத்துக்கும் உண்மையாக, நேர்மையாக இருந்திராத - வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை பல நூற்றாண்டுகளாக துரோகக் கும்பலாகவும், சுரண்டல் கூட்டமாகவும், ஆதிக்க இனமாகவும், இந்தியர் என்ற இல்லாத தேசிய இனத்துக்கு அடையாளமாகவும் வாழ்ந்து வரும் பார்ப்பனக் கும்பலானது - அறிவும், மனிதாபிமானமும், நேர்மையும் இன்றி “இந்த அணை கட்டியிருக்கவே கூடாத அணை, இந்த அணை நீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும்” என்று நெஞ்சை நிமிர்த்தி நேர்காணல் அளிக்கிறது, அச் சிட்டுப் பரப்புகிறது என்றால், அதைத் தமிழர்களும் அனுமதிக்கிறோம் என்றால் தமிழர்களைவிட, திராவிடர்களைவிட சொரணையற்ற இனம் ஒன்று உலகில் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. இராமசாமி அய்யர் எழுதிய கட்டுரையை தமிழ்நாட்டில் ‘இந்து’ பார்ப்பன ஏடும், அவர்களே நடத்தும் ‘பிரன்ட்லைன்’இதழும் வெளியிடுகிறது.
இதுபோன்ற நிலையை எண்ணித்தான் பெரியார் அன்றே சொன்னார், “பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு (தமிழ்நாடு) தனியாகப் பிரியாவிடில், சுதந்திரம் இல்லை. சோறு இல்லை. மான வாழ்வு இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி. - ‘விடுதலை’ 25.2.1949
- அதிஅசுரன்,                                                                                                                                                    நன்றி:‘கீற்று’ 
_____________________________________________________________________________________________
                                                                                      பறவைகளின் ஓவியம்
_________________________________________________________________________________________

     கொலம்பியாவில் புதன் [01-02-12] மாலை குண்டு வெடித்ததில் 5பேர் சாவு.40 பேர் படுகாயம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?