சரணடைகையில் கொல்லப்பட்டவர்கள்,

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் விஜய் நம்பியார் கூறியுள்ளார்.சரணடைபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் ஆனால் சரணடையச் சென்றோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது .போரின் இறுதிக் கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன், சாமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைவது குறித்து தன் மூலமாக சர்வதேச சமூகத்திற்கு சில தகவல்களை அனுப்பப்பட்டதாக சிரியாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் மேரி கொல்வின் தெரிவித்திருந்தார்.
ஐநா மூத்த அதிகாரி விஜய் நம்பியார்
இந்த நிலைமையிலேயே, விடுதலைப் புலித் தலைவர்கள் சரணடைவதை மேற்பார்வை செய்ய தான் அனுமதிக்கப்படவில்லை என்று விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
ஐநா மன்றத்தில் தலைமைச் செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகராக (பர்மா விவகாரம்) உள்ள விஜய் நம்பியார், பர்மா நிலைமை தொடர்பில் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றி உங்களுக்கு என்ன விடயங்கள் தெரியும், அந்த நடவடிக்கைகளில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று விஜய் நம்பியாரிடம் கேள்வியொன்றைக் கேட்டார்.
இதன்போது, பர்மா சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கே பதிலளிக்க முடியும் என்று விஜய் நம்பியாருக்கு அருகிலிருந்த ஐநா தலைமைச் செயலரின் துணைப் பேச்சாளர் கூறியதை அடுத்து, குறித்த ஊடகவியலாளருக்குத் தேவையானால் இலங்கை விவகாரம் குறித்து பின்னர் தனிப்பட்ட ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என்று விஜய் நம்பியார் கூறினார்.
அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த விஜய் நம்பியார், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவர் சரணைடைவதற்கு தான் ஏற்பாடு செய்ய முயன்றதாகக் கூறினார்.சிரியாவில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கொல்லப்பட்ட பிரி்ட்டிஷ் ஊடகவியலாளர் மேரி கொல்வின், தன்னுடன் தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இருவர் சரணடைவதற்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு கேட்டதாக விஜய் நம்பியார் கூறினார்.
விடுதலைப் புலிகளின்  மூத்த தலைவர்கள் புலித்தேவன், நடேசன் (கோப்புப் படம்)
இதன் பின்னர், தான் அமெரிக்க தூதர் பிளேக்குடன் இரண்டு தடவைகள் தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் இருவரும் சரணடைவதை கண்காணிக்க செல்லத் திட்டமிட்டதாகவும், செஞ்சிலுவை சங்கத்தால் கடல்வழியாக செல்ல முடியாமல் இருந்ததாகவும் அதனாலும் அரசு மாற்று ஏற்பாடு செய்து தராததாலும்தம்மால் போகமுடிவில்லை என்று விஜய் நம்பியார் விளக்கமளித்துள்ளார்.
நடு ராத்திரியில் மேரி எனக்கு அழைப்பு எடுத்தார். இரண்டு பேர், நான் அந்தப் பேர்களையும் மறந்துவிட்டேன்., ஒருவர் சமாதான அலுவலகத்தைச் சேர்ந்தவர், அவர்கள் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் வெளியில் வர ஒருவழியை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவாதம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மேரி கூறினார். சரி, நான் அதனைச் செய்கின்றேன் என்று கூறினேன். அது தொடர்பில் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன். அப்போது சரணடைபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது’ என்று அந்த ஊடகவியலாளரிடம் கூறினார் விஜய் நம்பியார்.
உங்களுக்கு உத்தவாதம் அளிக்கப்பட்டிருந்தால் ஏன் உங்களுக்கு சரணடையும் இடத்துக்குச் செல்ல அனுமதி தரப்படவில்லை? உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏன் நீங்கள் அதுபற்றி மௌனம் காத்தீர்கள்? என்று மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அவர்கள் அவர்களின் ஆட்களாலேயே சுடப்பட்டிருக்க்க் கூடும். எந்த விதமான ஊகங்களுக்கும் செல்ல நான் தயாரி்ல்லை...என்று பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார் போரின் இறுதித் தருணங்களில் இலங்கைக்குச் சென்றிருந்த ஐநா பிரதிநிதி விஜய் கே. நம்பியார்.
ஆக சரணடைந்த விடுதலைப்புலிகள் இலங்கைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது ஐ.நா,இந்தியாவுக்கு தெரிந்தே நடந்துள்ளது.அதனால்தான் அவர்கள் சரணடைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார்கள்.
அங்கும் கேரள மாபியா கும்பல் எனப்படும் கும்பலில் ஒருவரான நம்பியார் உள்ள போது தமிழன் நடுநிலையை எதிர்பார்க்கலாமா?
அவர்கள் அவர்கள் ஆட்களாலேயே சுடப்பட்டீருக்கக் கூடும்.என்ன ஒரு நயவஞ்சக வார்த்தைகள்.ராஜபக்‌ஷேவை விட புலிகளின் மீது விடம் கக்குகிறார் இந்த நடு[?]நிலையிலான ஐ.நா.பிரதிநிதி.நம்பியார்.
இப்படி பட்டவர்கள் நடத்தும் போர் குற்ற விசாரணை என்ன உண்மையை தரும்.எந்த விதமான தண்டனையை ராஜபக்‌ஷேக்கு பெற்று தரும்.?
தமிழர் அழித்தொழிப்பு விசாரணை செய்யும் அளவு ஐ.நா.,நடுநிலையைப் பேணவில்லை.பின் எங்கு சென்று நீதியை பெற இயலும்?
__________________________________________________________________________________________________________
போலியோ வியாதி உள்ள ,தாக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை உலக சுகாதார நிறுவனம் நீக்கிவிட்டது.போலியோ தாக்கல் இந்தியாவில் இல்லை என்பதுதான் அதற்கான காரணம்.
                           போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் இந்தியா ஆர்வம் காட்டியது பலன் தந்துள்ளது.
இப்போது உ.சு.நிறுவன பட்டியலில் மூன்று நாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
அவை பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,நைஜிரியா ஆகியவைதான்.இன்னும் இரு ஆண்டுகள் இந்தியாவில் யாருக்கும் போலியோ தாக்குதல் இல்லாமல் இருந்தால் மட்டுமே போலியோ ஒழிக்கப்பட்ட நாடாக இந்தியாவை உ.சு.நிறுவனம் அறிவிக்கும்.
________________________________________________________________________________
விக்கிப் பீடியாவுக்கு தடை.
மத்திய ஆசியாவின் மிகவும் மக்களடர்த்தி கூடிய நாடான உஸ்பெக்கித்தான் தனது சொந்த மொழி விக்கிப்பீடியாவை இணையத்தில் பார்ப்பதற்குத் தடை விதித்துள்ளதாக தெரிகின்றது.


உஸ்பெக் விக்கிப்பீடியா சின்னம்
இணையத்தில் கடந்த சில வாரங்களாக உஸ்பெக் மொழி விக்கிப்பீடியாவைத் (uz.wikipedia.org) தேடி வருவோர் எம்எஸ்என்.கொம் இணையத்தளத்திற்கு வழிமாற்றுச் செய்யப்படுகிறர்கள். உஸ்பெக்கித்தானுக்கு வெளியே இந்தத் தடை இல்லை. வேறு மொழி விக்கிப்பீடியாக்களுக்கும் தடை எதுவும் இல்லை.

இது குறித்து கருத்துத் தெரிவிப்பதாக உறுதி கூறிய உஸ்பெக்கித்தான் தகவல் தொடர்பு அமைச்சகப் பேச்சாளர், தற்போது அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்து வருகிறார். உருசியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உஸ்பெக் தூதரகமும் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டதாக ரியாநோவஸ்தி செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை வரை உஸ்பெக் விக்கிப்பீடியாவில் மொத்தம் 7,876 கட்டுரைகள் உள்ளன. 30-மில்லியன் மக்கள்தொகை கொண்ட உஸ்பெக்கித்தானில் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாக அரசுத் தகவல் தெரிவிக்கிறது.


முன்னரும் இரு தடவைகள், 2007, 2008 ஆம் ஆண்டுகளில், உஸ்பெக்கித்தான் தனது மொழி விக்கிப்பீடியாவைத் தடை செய்திருந்தது. உஸ்பெக்கித்தானில் மிகக் கடுமையான தணிக்கை அமுலில் உள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்றஅமைப்பு உஸ்பெக்கித்தானை "இணையத்தின் எதிரிகள்" எனத் தனது 2011 அறிக்கையில் தெரிவித்திருந்தது.
____________________________________________________________________________________________

ஏழைகளின் உணவு,
                
-பேராசிரியர் ராஜு
                                   
பில்கேட்ஸ், கணினி உலகின் சக்கரவர்த்தி என்பது நமக்குத் தெரியும். பில் கேட்ஸ் - மெலிண்டா பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியாக சில துறைகளுக்கு அவர் கணிசமாக நிதியுதவி செய்து வருவது பலருக் குத் தெரிந்திருக்கலாம். ஏழை விவ சாயக் குடும்பங்களுக்கு உதவ அண்மையில் அவர் 2 பில்லியன் டாலர் நிதியை ( சுமார் 10000 கோடி ரூபாய்) ஒதுக்கியிருக்கிறார். பெரும் பாலான இந்தக் குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கி நடத்தி வரக் கூடியவை. நிலத்தின் தன்மை கெடாமல் பாதுகாத்து உற்பத்தி யைப் பெருக்குவதுதான் நிதியளிப் பின் நோக்கம். ஏழு முக்கியமான பயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு உலகம் முழுவதற்கும் சேர்த்து 3 பில்லியன் டாலர் நிதி மட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது என்ற விவரத்தோடு ஒப்பிட்டால் பில் கேட்ஸின் உதவி மகத்தானது என்று தெரிந்து கொள்ளலாம். திட்டத்தின் ஏழு முக் கியமான பயிர்களில் மரவள்ளிக் கிழங்கு ஒன்று. அது 50 கோடி ஆப்பிரிக்க மக்களின் முக்கியமான உணவு. உலகிலேயே மரவள்ளிக் கிழங்கை அதிகமான அளவில் உற்பத்தி செய்யும் நாடு நைஜீரியா.
மரவள்ளிக் கிழங்குப் பயிர் இரண்டு முக்கியமான வைரஸ் களால் பாதிக்கப்படுகிறது. பயிரின் இலைகளுமே உண்ணத்தகுந்த வைதான். “கசாவா மொசைக்” நோய் பயிரின் இலைகளைத் தாக் குகிறது. “பிரவுன் ஸ்டீக்” நோய் வேர்களைத் தாக்குகிறது. இந்த நோய்களை எதிர்த்துப் போராடு வதற்கும் மரவள்ளிக் கிழங்கின் ஊட்டச்சத்தினை அதிகரித்து, விஷத் தன்மையைக் குறைப்பதற்கும் கேட்ஸ் பவுண்டேஷன் இந்த நிதியை ஒதுக்கியிருக்கிறது. 
                                ஆப்ரிக்க நில 'அபகரிப்பு'
இந்தியாவின் பல பகுதிகளிலும் மரவள்ளிக் கிழங்கு மக்கள் உண வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதை குச்சிக் கிழங்கு என்றும் குறிப்பிடுகிறோம். மர வள்ளிக் கிழங்கைப் பொடி செய்தே ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. வடை, உப்புமா, பாயாசம் போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்க ஜவ்வரிசி பயன்படுகிறது. உரு ளைக் கிழங்கு, சோளம், மிளகாய் போன்றே மரவள்ளிக் கிழங்கும் உணவு தயாரிப்பில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

தொடக்கத்தில் போர்ச்சுக்கலைச் சேர்ந்த மாலுமிகள் அதை பிரேசி லிலிருந்து ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் கொணர்ந்தனர். சில நூற்றாண்டுகளுக்குள்ளாக வே அது ஆப்பிரிக்காவின் பாரம் பரியமான பயிர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, ஆப்பிரிக்காவின் முக்கியமான உணவுப் பயிராக ஆகிவிட்டது. அதனால்தான் அப் பயிரை நோய் தாக்கினால் அது கோடிக்கணக்கான ஏழை மக்க ளின் வாழ்வாதாரத்தையே பாதிக் கக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது.

மரவள்ளிக் கிழங்கில் கால் சியம் அதிக அளவில் உள்ளது. ஆனாலும் அதை உட்கொள்ளும் போது அது வயிற்றை நிறைக்கிறதே தவிர, போதுமான ஊட்டச்சத்தை அளிப்பதில்லை. இந்த சவாலைச் சந்திக்கவே “பயோகசோவா பிளஸ்” என்ற சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மரவள் ளிக் கிழங்கின் துத்தநாகம், இரும் புச் சத்தை ஆறு மடங்காகவும் புரோட்டீன் சத்தை நான்கு மடங் காகவும் வைட்டமின் ஏ, ஈ - சத்து களை பத்து மடங்காகவும் அதிகரிப் பது, வைரஸ்கள் தாக்காமல் பாது காக்கும் பயிரின வகைகளைக் கண்டுபிடிப்பது, அதன் சயனஜன் உள்ளடக்கத்தைக் கணிசமாகக் குறைப்பது ஆகியவற்றை நோக் கங்களாகக் கொண்டு அந்த அமைப்பு செயல்படும்.

பச்சை மரவள்ளிக் கிழங்கு சிதையும்போது விஷத்தன்மை யுள்ள இரு கூட்டுப் பொருட்களை உருவாக்கக் கூடியது. பிரேசில், ஆப்பிரிக்க மக்கள் இந்த விஷத் தை அகற்றும் வழியைக் கண்டு பிடித்து வைத்துள்ளனர். கிழங்கின் தோலை அகற்றிவிட்டு, அதை சில நாட்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து, பின் காயவைத்து சமைத் தால் விஷம் அகற்றப்பட்டுவிடும். இதே முறையில் தயாரிக்கப்படும் ஜவ்வரியும் பாதுகாப்பானது. பயோ கசோவா பிளஸ் குழுவினர் இர ண்டு முக்கிய சாதனைகளை நிகழ் த்தியுள்ளனர்.
                     

மரவள்ளிக் கிழங்கின் வேர் களில் உள்ள என்சைமின் (வேதி யியல் வினைகளை ஊக்குவிக்கும் பொருள்) அளவை அதிகரித்து அதன் மூலம் புரோட்டீன்கள், அமி னோ அமிலங்களை அதிகரிப்பது, சயனஜன் அளவைக் குறைப்பது என்பது ஒன்று. வைரஸ்களால் தாக்கப்படாமல் இருக்க பயிரின் தாக்குப் பிடிக்கும் திறனை அதி கரிப்பது மற்றொன்று. உயிரியல் மூலக்கூறு  அளிக்கும் வாய்ப்புகளைஏழைகளின் வாழ்வை மேம்படுத்தப் பயன்படுத்த முடியும் என்பதற்கு பயோகசோவா அமைப்பு எடுக்கும் முயற்சிகள் நல்ல உதாரணம்.

                                                             உதவி கட்டுரை : ‘தி இந்து’ நாளிதழில் டி. பாலசுப்பிரமணியன் .=======================================================================








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?