மின் உற்பத்தி குழப்பங்கள்,,,,,,,,,,,,,,,,,.
-காண்டீபன், |
உலகமயமாக்கலும் அது திறந்து விட்ட சந்தைகளும் ஒவ்வொரு மாநிலத் தின் மின்தேவையையும் அதிகரித்தது. மாநிலத்தின் மின்சார செயல்பாடு களுக்கு பொறுப்பு வகிக்கும் ஒரே நிறு வனமாக இருந்து ஏகபோகமாக மின் விநியோகம் செய்துவரும் மாநில மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைத்துவந்த புதிய மின்திட்டங்கள் நிதிப் போதாமை யால் தேக்கமடைந்தன. இத்தேக்கத்தை உடைக்க மின்துறையில் தனியார்களும் பங்கேற்று உற்பத்தி செய்யலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
பல்வேறு சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தனியார் மின் உற்பத்தி நிலை யங்களும் உருவாகத் தொடங்கிவிட்டன. வணிக ரீதியான மின்உற்பத்தி செய்வதை அங்கீகரிக்கும் நோக்கிலும், தனியாரை மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடுத்துவதற்காகவும் டாக்டர் அம் பேத்கர் அவர்களால் 1948 ஆம் ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்ட இந்திய மின்வழங்கல் சட்டம் -1948, அன்றைய மைய அரசான பாரதிய ஜனதா கட்சியால் மின்சார சட்டம் -2003 என திருத்தி அமைக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகள் தவிர இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர். மின்சார சட்டம்-2003ஐ ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாநில அரசுகளின் மின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி மாநில அரசில் பொறுப்பாக இருந்த அரசியல் கட்சிகள் முதல் மாநில சுயாட்சி முழக்கமிட்ட பகுத்தறிவுவாதி கள் வரை அதிகாரம் வகித்துவந்த மாநில அரசுகள் தங்களது நிதித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, மின்சார சட்டம் -2003ஐ ஏற்றுக்கொண்டன. அச்சட்டம் வகுத்தளித்துள்ளபடி மாநிலத்தின் மின் வாரியங்கள் பிரிக்கப்பட்டன. இந்தியாவில் மாநில அரசின் கீழ் பொதுத்துறையாக இயங்கும் மின்வாரி யங்கள் மூன்று லட்சம் கோடி ரூபாய் அள வில் நட்டத்தில் சென்றுவிட்டன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மின் துறை சீர்திருத்தங்களின்படி பிரிக்கப் பட்ட மின்வாரியங்களில் 20 மின்வாரி யங்கள், அப் பிரிவினைக்குப் பின்னர் மிக மோசமான நிலைமைகளுக்கு சென்று விட்டன என்று மற்றொரு நிதி நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறது. அதில் மிக மிக மோசமான நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் உள் ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1) நிதி பற்றாக்குறையை ஈடுகட்டுவது 2) நிதி நிறுவனங்கள் நிதி அளிக்க வேண் டியது 3) நிலக்கரி பற்றாக்குறையை சரி செய்வது ஆகிய மூன்றுதான் மின்துறை யில் தற்பொழுதுள்ள மிக முக்கியமான பிரச்சனைகளாகும். மாநிலங்களின் மின் துறை வளர்ச்சிக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாமல் அவை களின் பெருகி வரும் மின்தேவையை சமாளிக்க தனியார் மின்உற்பத்தி நிலை யங்களை சார்ந்து நிற்கும் நிலைக்கு தள் ளியதுதான் மாநில மின்வாரியங்களில் அதிகமான அளவில் வருவாய் இழப்பு ஏற் பட்டதற்கு காரணமாக அமைந்துவிட்டது மின்பற்றாக்குறைக்கு காரணமாகும். இயற்கை பேரிடர்கள் ஏற்படும் பொழுது மின்தொடர்புகள் நாசமானால் உடனுக்குடன் சரி செய்யும் ஏற்பாடு மக் களை ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளது. அதற்கு தமிழகத்தை தாக்கிய தானே புயல் உதாரணம். மக்களின் வாழ்வா தாரத்தை துவம்சம் செய்த புயல் பாதிப் பிலிருந்து மக்களுக்கு உடனடியாக மின் தொடர்புகளை அளித்து மக்களை பேராபத்திலிருந்து காப்பாற்றிய பெருமை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மின்வாரியம்தான் என்பதை தமிழக அரசு உணர்ந்து மனதாரப் பாராட்டியுள்ளது. மின்வாரியம் ராணுவத்தைப்போன்று களத்தில் நின்று ஆறுமாதத்தில் முடிக்க வேண்டிய பணியை ஒரு மாதத்தில் முடித்ததை தனியாரிடம் எதிர்பார்க்க முடியாது, இதனையெல்லாம் நன்கு உணர்ந் திருந்தும் மின்சார சட்டத்தை மாநிலங் கள் முழுமையாக அமல்படுத்திட வேண் டும் என்று மத்திய அரசு பிடிவாதமாக நிற்பது என்பது அதும் ஆளும் வர்க்கத் தின் சேவைக் கருவியாகவும் முதலாளித் துவத்தின் பாதுகாவலாகவும் உள்ளது என்பதை மெய்ப்பிக்கும். லாபத்தை மட் டுமே மையமாகக் கொண்ட விநியோகப் பிரிவுகளை உருவாக்குவது உட்பட அனைத்திலும் லாபம் கொப்பளிக்கும் வழிகளைச் செய்திட திட்டக்குழு உறுப் பினர்களும் எரிசக்தி துறையும் வலி யுறுத்துகின்றது. புதிய அனல்மின்நிலையங்கள் அமைத் தால்தான் நாடு எதிர்நோக்கும் மின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். தற் போது இந்தியாவின் உச்சபட்ச மின் தேவை நேரங்களில் 20 முதல் 30 சத வீதம் வரை மின்பற்றாக்குறை உள்ளது. வரும்ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் இருக்க வேண்டும் என்று திட்டக்கமிஷனும். மத்தியஅரசும் விரும்புகின்றன, ஆனால் மின்துறையின் வளர்ச்சி வேகம் 2009-10 ஆண்டைக் காட்டிலும் 3 சதவீதம் குறை வாக உள்ளது, தனியார் மின் உற்பத்தி யாளர்கள், தாங்கள் ஒப்புக்கொண்ட அனல்மின்நிலையங்களுக்குத் தேவை யான நிலக்கரி உள்நாட்டில் கிடைக்காது என்பதால் வெளிநாடுகளிலிருந்து நிலக் கரியை இறக்குமதி செய்ய வேண்டி யுள்ளது, இறக்குமதி செய்யும் நிலக்கரி யின் விலை உள்நாட்டு விலையைவிட கூடுதலாகும், எனவே அதானி கம் பெனி போன்ற பல தனியார்கள் அவர் களிடம் ஒப்படைக்கப்பட்ட அனல்மின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி விட்டு அதனை மத்திய அரசிடமே ஒப் படைத்து விட முடிவு செய்துள்ளனர். இதே போன்று டாடா, ரிலையன்ஸ், ஜின்டால் கம்பெனிகள் தங்களது அல்ட்ரா மெகா பவர் பிராஜக்ட் ஒப்பந் தங்களை மறுபரிசீலனை செய்திட மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. முதலாளிகள் கண்களில் நீர் வடிந் தால் நமது பிரதமர் மன்மோகன்சிங் கண் களில் உதிரம் கொட்டுமல்லவா? உடனே பதறியடித்துக்கொண்டு எழுந்த எரிசக்தி துறை, பிரதமர் தலைமையில் மின் உற் பத்தியில் ஈடுபடும் முதலாளிகளின் கூட்டத்தை ஜனவரி 18, 2012 அன்று கூட் டியது, பிரதமர் மன்மோகன்சிங் அவர் களும் அதில் கலந்து கொண்டு ஜின் டால், டாடா, லான்கோ, ரிலையன்ஸ், அதானி, ஜிஎம்ஆர் போன்ற முதலாளி களின் முறையீட்டை கேட்டார். அக்கூட்டத்தில் மத்திய அரசுடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட மின் சாரம் வாங்கும் ஒப்பந்தத்தை மறுபரி சீலனை செய்வதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி இனி தனியார்களின் மின்சாரம் மேலும் கூடுதல் விலை கொடுத்து வாங் கப்படும், உள்நாட்டில் கிடைக்கும் நிலக் கரியை 50 சதவீதம் வரையிலும் தனியார் முதலாளிகளின் அனல்மின்நிலையங் களுக்கு அளிப்பதற்கும் ஏற்பளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய நிலக்கரி வெட்டியெடுக்கும் பொதுத்துறை நிறு வனம் இந்தியாவின் கோல் இந்தியா நிறு வனமாகும், இந்நிறுவனம் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கும் மற்றும் பெரிய மின்உற்பத்தி நிறுவனமான தேசிய அனல்மின் கழகத்தின் பொறுப்பிலுள்ள அனல்மின்நிலையங்களுக்கும் நிலக்கரி வழங்கி வருகிறது, தனியார்களுக்கு 50 சதவீதம் வரையிலும் நிலக்கரி அளிக்கப் படுமேயானால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு அரசின் மின்உற்பத்தி கட்ட மைப்பில் பாதிப்பு உண்டாகும். இந் நிலக் கரி பற்றாக்குறை தமிழகத்தையும் பாதிக் கும் என்பதில் சந்தேகமில்லை, இந்தியாவின் தற்போதைய நிலக்கரி பற்றாக்குறை 10 கோடி டன்களாகும், கட்டுமானத்தில் உள்ள வடசென்னை, மேட்டூர் மற்றும் தேசிய அனல் மின்கழக அனல் மின்நிலையங்களுக்கு தேவை யான நிலக்கரியை அளிப்பதில் மத் தியஅரசு இன்னும் சரியான முடிவை எடுக்கவில்லை. இந்த அனல்மின்நிலை யங்கள் மின்உற்பத்திக்கு தயாராகிவிட் டாலும் எரிபொருள் பிரச்சனையால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படக்கூடிய அபாய மும் உள்ளது. தற்போது உள்ள மின்பற்றாக்குறை தீருவதற்கு இந்த அனல்மின்நிலையங் களையே தமிழகம் நம்பி உள்ள நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையினால் மீண்டும் மின்உற்பத்தி பாதிக்கும் நிலையே நிலவுகிறது. புதிய நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதில் நிலம் கையகப்படுத்துவ தும், சுற்றுப்புறச்சூழல் பிரச்சனையும் பெருந்தடைகளாக நிற்கின்றன. கோல்இந்தியா நிறுவனமும் தனியார் நிறுவனங்களும் நிலக்கரி வெட்டியெடுப் பதில் திறந்த வெளி சுரங்கங்களைத்தான் பெரிதும் விரும்புகின்றன. இதில் செல வும் அல்லது அபாயமும் குறைவு. இதை விரும்புவதன் உள்நோக்கம் இதுதான். பூமிக்கடியில் சுரங்கங்களை வெட்டி னால் பெரிய அளவில் நிலக்கரிப் படிவங் களை வெட்டி எடுக்க முடியும். மரங்களை யும், காடுகளையும் அழிக்க வேண்டிய தேவை இருக்காது, பெருமளவில் நிலக் கரியும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் திட்டக்குழு இதுபோன்ற ஆலோ சனைகளை வழங்குவதற்கு பதிலாக நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப் படைக்கும் ஆலோசனையையே வழங்கி வருகிறது, முதலாளிகள் வளர வேண்டும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் திட் டங்கள் தீட்டுகிறதே தவிர மக்களின் நலனை ஒருபோதும் முன்னிறுத்துவ தில்லை.
-நன்றி:தீக்கதிர்,
|
பால் வீதியில் ஒரு அழகுக்காட்சி.விண்கற்கள் கிரகத்தை சுற்றி வலம் வரும் இக்காட்சியை நாசா எடுத்துள்ளது.
_________________________________________________________________________________