நிரந்தர மின்வெட்டும்?
தமிழக ஆளுனர்"அடுத்த இரண்டாண்டுகளில் 4 ஆயிரத்து 704 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய, புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என்றுதனது உரையில் கூறியுள்ளார். இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்தத்திட்டங்கள் துவங்கப்படுமா என்பது சந்தேகம்தான்.ஜெயாஅரசு கூறியுள்ளபடி, 4 ஆயிரத்து 704 மெகா வாட் மின்சாரம் புதிய திட்டங்கள் மூலம் உரு வாக்கப்பட்டாலும், தமிழகத்தினுடைய தற் போதைய மின்வெட்டைச் சரி செய்யப் போதுமானதாக அது இருக்காது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும்.
மின்வெட்டு இல்லாத தமிழகம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வாக் குறுதி கொடுத்தது. முந்தைய திமுக ஆட்சி இழப்பிற்கு மின்வெட்டு முக்கிய காரணமாக அமைந்தது.அதிமுக ஆட்சிக்கு மக்கள் பெரும்திரளாக வாக்களித்ததில் மின்வெட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு.
அதிமுக அரசு பொறுப்பேற்ற உடனேயே மின் வெட்டுக்குத் தீர்வுகாணப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் மின் வெட்டு நேரம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால்ஜெயா அரசில் நடப்பதோ நேர்மாறாக உள்ளது. இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு மாறி தற்போது 5 மணி நேரம், 6 மணி நேரம் தற்போது அனல் மின்நிலையம் உள்ள தூத்துக்குடியிலேயே7மணிஎன்ற அளவுக்கு மின் வெட்டு நீண்டுவிட்டது. அடுத்து 12 மணி நேரம் என்ற அளவை நோக்கி அதிமுக அரசு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜெயலலிதா இதைப்பற்றி கண்டு கொள்வது போல் தெரியவில்லை.மக்கள் கவனத்தை திசை திருப்ப சசிகலா நீக்கம்.முன்னாள் அமைச்சர்கள் கைது,நடிகர் விஜய்காந்துடன் சண்டை என்று வேடிக்கை காட்டுகிறார்.
முந்தைய திமுக ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டையே மிகக் கொடுமையானதாக எழுதித்தீர்த்து மக்கள் கோபத்தை அரசுக்கு எதிராக திருப்பிய ஊடகங்கள் தற்போது 6 மணி நேரத்தை கண்டு கொள்ளவே இல்லை.
மக்களிடமும் முணுமுணுப்பைக்காணோம்.ஜெயா அரசு மின் வெட்டு என்றால் சரிதான் என்ற எண்ணமோ அல்லது பழகி விட்டார்களோ அல்லது தலைவிதி என்று இருக்கிறார்களோ தெரியவில்லை.
கிடைக்க இருந்த கூடங்குளம் அணு மின் நிலைய மின்சாரமும் தற்போது கிடைப்பதாக தெரிய வில்லை.
அதிலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு அரசியல் செய்து அத்திட்டத்தையே தனது சோனியா காங்கிரசு எதிரான நடவடிக்கையால் கேள்விக்குறியாக்கிவிட்டார்.
உண்மையில் அணுமின்சக்திக்கு எதிரானவர் அல்ல ஜெயா அரசு.ஆனால் காங்கிரசை தனது பிடிக்கு கொண்டுவரவே இந்த உதயகுமாருக்கு ஆதரவான நாடகம்.
ஆனால் அவரின் நாடகத்தால் தமிழக மின் தேவையே பூதாகரமாக மாகிவிட்டதே?
கூடங்குளத்தை விடுவொம்.வேறு எந்த மாற்று வழியும் இதுவரை காகித அளவில் கூட மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யவில்லை.தி.மு.க.அரசு கூட பரவாயில்லை.அவ்வப்போது அறிக்கை மூலமாகவாவது மின்சாரத்தை தயாரித்தார்கள்.இவர் அதுகூட இல்லை என்ற நிலையாகிவிட்டது.
மக்கள் இன்று மின் வெட்டை கண்டுகொள்ளவில்லை.10மணி நேரம் என்றால் கூட தாங்கும் வலிமையை தமிழக மக்கள் பெற்று விட்டார்கள்.
இந்த நிலையில் தமிழக ஜெயா அரசுக்கு மக்கள் சார்பில் இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.
"மின் வெட்டு நேரங்களில் தாக்கு பிடிக்க ரீசார்ஜ் விளக்குகள்,கன்வெர்ட்டர்களை சார்ஜ் செய்து கொள்ளவாவது அவ்வப்போது மின்சாரத்தை கொடுங்கள்."
அம்புட்டுதான்.
வாழ்க ஜனநாயகம்!
வாழ்க மின்சார [வெட்டு] ம்!
__________________________________________________________
Q மருத்துவ கொள்[ளை]கை.
-கே.சி.கோபிகுமார் |