குர்ஷித் போய் பெனி பிரசாத்
ஏற்கனவே தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசி, சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது பேச்சை கண்டித்து, ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையம்கடிதம் எழுதியது. ஆனாலும், அவர் மீதுஎந்த நடவடிக்கையும் ஆணையம் எடுக்கப்படவில்லை. இந்த தெம்பில்காங்கிரசு அமைச்சர் பெனிபிரசாத் வர்மாவும்
பெனி பிரசாத் வர்மா |
தேர்தல்விதிமுறைகளை மீறியுள்ளதுடன் தேர்தல் ஆணையத்தையு கிண்டல் அடித்துள்ளார்..
சல்மான் குர்ஷித் மேடையில்தான் இவரும் பேசியுள்ளார். அரசியல் சட்ட அமைப்புகளை தாக்கி, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தேர்தல் ஆணையம் வெறுமனே கண்டிப்பதால் அவர்கள் விதி முறைகளை கண்டுகொள்ளவதில்லை.
இப்போது விதிமுறை மீறல் என தெரிந்தே செய்வதை செய்து பார் என்றே பேசும் பெனிபிரசாத் வர்மா மீது,தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மீண்டும்,மீண்டும் காங்கிரசு அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி பேச தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையும் எடுக்காததுதான் காரணம்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி மற்றும் கமிஷனர்கள் சம்பத், பிரம்மா ஆகிய மூன்று பேரும் இது போன்ற வெறும் அறிக்கை மட்டும் விட்டால் போதாது ஆணையத்தின் பலத்தைக்காட்ட வேண்டும்.இல்லை எனில் ஆள்,கட்சி பார்த்து தேர்தல் ஆணையர்கள் செயல் படுகிறார்கள் என்ற குற்ற சாட்டு உண்மையாகிவிடும்.
கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் எப்படி செயலில் இறங்கியது.
வெறும் கட்சிக்கொடி கம்பங்களைக்கூட துணியால் மூடியதே.ஆளுங்கட்சிக்காரர்கள் கட்சிக்கரைவேட்டி கூட கட்டமுடியாத நிலையை உருவாக்கியதே.வீட்டுக்கு பலசரக்கு வாங்கக்கொண்டுபோன பணத்தைக்கூட பறிமுதல் செய்து கணக்கு கேட்டார்களே.ஆனால் இப்போது குடியரசுத்தலைவரின் மகனே பணத்தை காரில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி மாட்டிக்கொண்டும் தப்பிவைக்கப்பட்டுள்ளார்.
பிரவின்குமார்-குரேஷி |
தேர்தல் ஆணையம் ஆள்பார்த்து யார் வெல்ல வேண்டும் என்று கணக்கிட்டு செயல்படுவதாக இந்நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாமா?
தமிழ் நாடு தேர்தல் தலமை அலுவலர் பிரவின்குமார் அதிமுக ஆட்சி பொறுப்பேற்கும் விழாவில் முன் வரிசையில் உட்கார்ந்து சிறப்பித்தாரே.
இது போன்று ஆட்சி பொறுப்பேற்பு விழாக்களில் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொள்வதில்லை.அது தங்கள் நடுநிலையை காட்டும் என்பதற்காக.
அவர் பெண்ணாகர இடைத்தேர்தலில் நடந்து கொண்ட முறைக்கும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நடந்து கொள்ளும் விதங்களில் ஏழு வித்தியாசங்களுக்கு மேல் உள்ளதே.அமைச்சர்கள்27 பேர்கள் சுற்றி வருவதை கண்டு கொள்ளவில்லை.சென்ற தேர்தலில் பாதி கற்கள் பரப்பப்பட்டதுடன் சாலைப்பணிகள் நிறுத்தி மக்களை சித்திரவதை செய்தனர்.ஆனால் இன்று சங்கரன் கோவிலில் புதிய சாலைப்பணிகள் பரபரப்பாக நடக்கிறது.
சரி அதை விடுவோம்.
தொடர்ந்து மத அடிப்படையில் ஓட்டுகளை வாங்கிடும் பழக்கத்தை, காங்கிரஸ் செய்து வருகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது.
பெனி பிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தங்களிடம் மனு கொடுத்த பாஜ கட்சியினரிடம்தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.ஆகட்டும் பார்க்கலாம்.
________________________________________________________________________
ராஜீவ் கொலை -புது விளக்கம்,
_______________________________
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகமான சி.ஐ.ஏ.இருப்பதாக இலங்கை நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான மாவீரன் பிரபாகரன், அந்த இயக்கத்தையே அழிக்கச்செய்யக்கூடிய இத்தகையதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும் அளவுக்கு முட்டாள் அல்ல"என்றும் அமைச்சர் விமல் வீரவன்சகூறியுள்ளார்.
‘இதுதென்னிந்தியாவிலுள்ள விடுதலைப்புலிகள்ஆதரவார்கள் சிலருக்கு பிரபாகரனுக்குத் தெரியாமல் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஒப்பந்தம் என நான் எண்ணுகிறேன்.
இதற்கு காரணம் இந்தியாவை ராஜீவ் காந்தி ஆளும்வரை இந்தியாவையும் தெற்காசியாவையும் அமெரிக்காவில் கட்டுப்படுத்த முடியாதென்பதாகும். அவர்களுக்கு, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்று இனவாதமான, பலவீனமான தாம் கட்டுப்படுத்தக்கூடிய தலைவர் இந்தியாவில் நிர்வாகத்திற்கு தலைமை தாங்க வேண்டுமென விரும்பினார்கள்’ என அவர் கூறினார்.
சி.ஐ.ஏ.யானது உலகின் எந்வொரு பகுதியிலும் தமக்கு இணங்கி நடக்காத தலைவர்களை அகற்றுவதற்கு தயங்கியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.திடீரென இலங்கை அமைச்சர் ஒருவர் அமெரிக்கா மீது ராஜீவ் கொலை குற்றம் சாட்டுவதன் மர்மம் என்ன?
தங்கள் ராஜ பக்க்ஷே மீது அமெரிக்கா விசாரணை நடத்தவேண்டும் என்பதினால் கூட இருக்கலாம்.ஆனால் அமெரிக்காவும் அமைச்சர் கூறியபடி செய்யும் நாடுதான்.
________________________________________________________________________
_______________________________________________________________________