போராட்டமே வாழ்க்கையா?



"மூன்று அரசு சாரா அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை, கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். அதனால், அந்த அமைப்புகளின் அனுமதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன" என்றுள்ளார்.
பத்திரிகைக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் சில அரசு சாரா அமைப்புகள், கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன' என, புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி நேற்று கூறியதாவது: தொழுநோயை ஒழிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளைச் செய்வதாகக் கூறி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்ற, மூன்று அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ.,க்கள்), அந்த நிதியை, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்காக, தவறாக பயன்படுத்தியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் விசாரணையில், இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து, அந்த அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்காக பெருமளவு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.


போராட்டத்துக்காக, அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர், டிராக்டர்களில் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) விதிமுறைகளை மீறி, இந்த மூன்று அரசு சாரா அமைப்புகளும் செயல்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில் தெரியவந்த விவரங்களின் அடிப்படையில் தான், பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
                                               
அணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள் மீது, மத்திய அரசு சந்தேகம் அடைந்தது. இதன் பேரில், மத்திய உள்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், கடந்த மாதம் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தூத்துக்குடி வந்து, தூத்துக்குடி மல்டிபர்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம்), கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட ஆறு தொண்டு நிறுவனங்களில், அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின. தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தான் நிதியுதவி கிடைக்கிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மத்திய அரசு அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை, டில்லிக்கு கொண்டு சென்று ஆய்வு நடத்தினர்.

 ஆய்வு முடிவில், வெளிநாட்டு நிதிக்கு சரியாக கணக்கு காட்டாத மூன்று நிறுவனங்களின், லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 அமெரிக்கா, நார்வே, சுவீடன், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவற்றில் இயங்கும் சில சுயநல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், இந்தியாவில் செயல்படுத்தப்பட இருக்கும், கூடங்குளம், ஜெய்தாபூர் ஆகிய இரண்டு அணு மின் திட்டங்களுக்கு எதிராக மக்களை பயன்படுத்தி சிலர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திய மக்கள், அணு மின்சார உற்பத்திக்கு ஆதரவாகவே உள்ளனர் என்றும்பிரதமர் பேட்டிமூலம்,கூடங்குளம் போராட்டத்தின்போராடும் உதயகுமார் போன்றோரின் உள்நோக்கம் பற்றியும்,போராட்ட செலவினம் பற்றியும் கேள்விகளை நாட்டின் பிரதமரே எழுப்பியுள்ளார்.


இதனால் தனது போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசுக்கு எதிராக கொள்கை கொண்ட அமைப்புகளை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக உதயகுமார் சென்னையில் முகாமிட்டிள்ளார்.
பிரதமர் கூறியதுபோல் பணம் கிடைக்கவில்லை,அது செலவிடப்படவில்லை.இது முழுவதும் மக்களால் நடத்தப்ப்படும் போராட்டம் என்பதை உதயகுமார் விளக்கவேண்டும்.
அணு நிலையம் செயல் படக்கூடாது என்பதுதான் அவரின் நோக்கம் என்றால் மத்திய ,மாநில அரசு குழுக்களிடையே பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது.
அணுமின் நிலைய பாதுகாப்பு நிலை,வடிவமைப்பு,வரைபடம் எதற்கு தேவை?
செயல்படக்கூடாது என்ற நிலை மட்டும்தானே இருக்க வேண்டும்.?
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக மக்கள் வேலைக்கும் போகாமல்,மீன் பிடிக்கவும் போகாமல் வெறும் முழு நேரப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அவர்களின்,போராட்டம் நடத்துவதற்கு தேவையான பணம் எங்கிருந்து வருகிறது.அதை தருபவர்கள் யார்.என்ன நோக்கத்துடன் அதை தருகிறார்கள் என்று பார்ப்பது அவசியமாகத்தானே உள்ளது.


முன்பு ஆதரவை பெருக்கிய இந்த அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம்.தொடரும் மின் வெட்டாலும் மத்திய,மாநில அரசுகளின் மவுனகுரு வேடத்தாலும் மக்களின் ஆதரவை வேகமாக இழந்து வருகிறது என்பதுடன் அணு உலையை சீக்கிரம் திறந்து மின் உற்பத்தியை துவக்குங்கள் என்கிற அளவு மக்களின் மனதில் எண்ணங்கள் உருவாகி வருகிறது.அரசுகளால் உருவாக்கப்பபட்டு வருகிறது.
இப்போது உதயகுமார் தனது போராட்டத்திற்கு எந்தவிதமான பனமும் எங்கிருந்தும் பெற்வில்லை இது உணர்வுபூர்வமான போராட்டம்தான் என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஏனெனில் பலமாதமாக போராடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளனர்.வாழ்வதற்கு பணம் எங்கிருந்து வருகிறது.அரசு கூறுவது  போல் அந்நிய நிறுவனங்கள்தான் தருகிறதோ? என்ற கருத்து போராடுபவர்கள் மீது ஏற்பட்டுவருகிறது. 
________________________________________________________________
இன்னொரு பூமி,
Clouds over the southern Indian Ocean 
பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய கிரகத்தைஒன்றைவிஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு ஜி.கே 1214-பி எனவும் பெயரிட்டுள்ளனர். 
இந்த கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது.அந்த கிரகத்தில் வெப்பநிலை 200 டிகிரி வரை இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த கிரகம்பூமியை விட 2.7 மடங்கு பெரியதாகவும்,8 மடங்கு எடை அதிகமாகவும் உள்ளது.
________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?