சட்டம்-ஒழுங் [கின்மை] கு,


இந்த ஆண்டு பிறந்தது முதலே தமிழகம் முழுக்க கொலைகளும்,கொள்ளைகளும் தலைவிரித்தாகிறது.

ஒரு புள்ளி விபரப்படி முந்தைய ஆட்சியைவிட படு கேவலமான முறையில் சட்டம்-ஒழுங்கு இந்த ஆட்சியில் உள்ளதாக தெரிகிறது.[எந்த புள்ளிவிபரம்  என கேட்கக்கூடாது]இது நமது சொந்த இதழ்களில் வந்த விபரப்படியும் கலைஞர் கூறிய புள்ளி விபரப்படியும்தான்.


மதுரை அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ளபோது தனிப்பட்டமுறையில் மக்களுக்கு நல்ல முறையில் அச்சம் கிடையாது.ஆனால் அதிமுக ஆட்சிவந்து அஸ்ராகார்க்,சம்பந்தம் கட்டுப்பாட்டில் இதுவரை பட்டப்பகல் தெரு கொலைகள் 20 நடந்துள்ளதாக மதுரை மண்ணின் மைந்தர் ஒருவர் கூறியுள்ளார். நெல்லை யில் தொடர்ச்சியாகக் கொலைகள் நடந்து இப்போது சில நாட்கள்தான் மக்கள் பயம் கொஞ்சம் குறைந்துள்ளது.
தூத்துக்குடியோ சுத்தம். மருத்துவர் சேது லட்சுமி புத்தாண்டில் ஆரம்பித்து குறை வைக்காமல் தொடர்கிறது.500 ரூபாய்க்காக ஒருவர் இருநாட்களுக்கு முன்னர் கொலையானதுதான் இப்போதைக்கு கடைசி.
கொள்ளையோ தினசரி குறிப்பிட்ட சில பகுதிகளில் தினசரி நடந்து வருகிறது.அதுவும் ஏற்றுமதி-இறக்குமதி செய்பவர்கள் வீடாக இருப்பது விசேடம்.
காவல்துறையினர்  கடைசியில் சினிமா போலீசு போல் வந்து கைரேகையை தேடி படம் எடுத்து சென்றுள்ளனர்.

இப்போ ,காவ்ல்துறையினருக்கு முதலிலேயே இங்கு கொலை நடக்கப்போகிறது.இங்கு கொள்ளை நடக்கப்போகிறது என கண்டு பிடித்து நிறுத்துவது இயலாத காரியம்தான்.ஆனால் அவ்வப்போது நகர்வலம் அதான் ரோந்து வந்தாலே பாதி குற்றங்கள் நடப்பது நின்றுவிடும்.
ஆனால் இப்போது எங்கேயாவது காவல்துறையினர் [ரோந்து]-நகர்வலம் வருவதை இதைப்படிக்கும் யாராவது பார்த்திருக்கிறார்களா?
இத்தனைக்கும் காவ்ல்துறையில் ஆள் பற்றாக்குறை கிடையாது.
 என்ன ஒரு சங்கடம்.இருக்கும் காவலர்களில் 90% காவலர்கள் தலமைக்காவலர்களாக,சார் ஆய்வாளர்களாக,சிறப்பு ஆய்வாளர்களாக உயர்ந்து விட்டதுதான் பெரும் துயரமாக விட்டது.எல்லோரும் அதிகாரிகள்.வேலை செய்ய யார் இருக்கின்றனர்?

அதிலும் பெண் காவலர்கள் தேர்வே வித்தியாசமாக உள்ளது.ஊரில் இருக்கும் பெண்களிலேயே நோஞ்சான் யார் என்று தேர்ந்தெட்க்கிறார்கள்.
அவர்களும் வேலை கிடைத்த இன்பத்தில் கொஞ்சம் பெருக்கிறார்கள்.அதன்பின் மணமாகி மழலைகள் பெருகிறார்கள். இன்று எல்லா மாவட்டங்களிலும் காக்கி சேலையில்தான் பெண் காவலர்களைப்பார்க்க முடிகிறது.அது அவர்கள் குழந்தை உண்டாகி அலுவலக இலேசானப்பணிகளை மட்டும் செய்கிறார்கள் என்று அர்த்தமாம்.
அதை நாம் குறை கூறவில்லை அதெல்லாம் இயற்கை.காவலர்கள் பற்றாக்க்றைக்கு காரணம் கண்டு பிடிக்கிறோம் அவ்வளவுதான்.
தமிழ்நாடு தலைநகர் நிலையோ இன்னும் மோசம்.
 சென்னையில்கொலை,கொள்ளை ,கற்பழிப்பு ,மோசடி செய்தி இல்லாத நாளிதழைக் கொண்டுவருபவர்களுக்கு வரும் சுதந்திரதினத்தில் விருது வழங்கலாம்.

இது முந்தைய அரசை சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வில்லை என்று கூறிய ஜெயலலிதா ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக கையாளப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டிடத்தான்.
இதில் நாம் பரமக்குடி,சங்கரன் கோவில்,திண்டுக்கல்,தூத்துக்குடியில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களை சேர்க்கவில்லை.அதையும் சேர்த்தால் சட்டம்-ஒழுங்காக இல்லை என்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாகிவிடும்.
____________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?