"பாரத ரத்னா" ராஜ பக்‌ஷே,.?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து உள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமண்யன் சுவாமி.
இலங்கைக்கு தனிப்பட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவை சந்தித்தபின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் பாரத ரத்னா விருது மஹிந்த ராஜ பக்‌ஷேக்கு வழங்க வேண்டும் என்று சுப்பிர மணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக ஈழத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்த பெருமைக்கு உரியவர் என்பதால் ராஜபக்‌ஷேக்கு இவ்விருதை வழங்கவேண்டும் என்று கூறி உள்ளதாகத்தெரிகிறது.


இவ்விருதை பெற்றவர்களில் இந்தியவர்கள் அல்லாதவர்கள் இருவர். ஒருவர் கான் அப்துல் கப்பார் கான். மற்றவர் நெல்சன் மண்டேலா.
தமிழின விரோதியும், பார்பனீயத்தை உயர்த்திப்பிடிக்கும் சுப்பிரமணியம் சுவாமி வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இலங்கை- இந்திய அரசுகளுக்குச் சாரபாகச் செயற்பட்டவர். தமிழ் நாட்டில்ஈழமக்களைக்காப்பாற்ற வேண்டி மனிதாபிமானிகள் நடத்திய போராட்டங்களை நக்கலடித்து சோ,தினமலர்,இந்து பத்திரிக்கைகளில் பேசியவர்.ஜெயலலிதாவின் நண்பர் யாவரின் ஆலோசனைப்படியே 2-ஜி மோசடியை பூதாகரமாக்கியவர்.


பக்‌ஷேக்கு பாரத ரத்னா விருது வழங்ககோருவது கொஞ்சம் கொடுரமான நகைச்சுவையாகத்தெரிகிறது.அதற்கு சிபாரிசு செய்யும் கொடுமையான பயங்கரவாதி சுப்பிரமணிய சுவாமிக்கு "தமிழின விரோதி"விருதை நாம் வழங்குவோம்.
இச்செய்தி பொய்யாகவே போகட்டும்.
தமிழினத்தை கருவறுக்க கொன்று குவித்து தனது கரங்களை அப்பாவி மக்களின் ரத்தத்தால் கறையாக்கிக்கொண்ட போல்பாட் ,ஹிட்லர் வழித்தோன்றலுக்கு பாரதரத்னா விருது கொடுத்தால் மும்பை தீவிரவாததாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப்புக்கு பரமவீர் சக்ரா விருது வழங்கிடலாமே?
=======================================================================


அலை வீச்சுக் கட்டுப்பாடு விதி
-------------------------------------------------


மொபைல் போன் பயன்பாட்டில் ஏற்படும் அலை வீச்சு குறித்த தகவல் கட்டாயமாக, அவர்கள் வாங்கும் மொபைல் போன்கள் விபர்க்குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதி வரும் செப்டம்பர் 1 முதல் கடுமையாக அமல்படுத்தப்பட இருக்கிறது. 
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவு ரேடியோ கதிர் அலை வீச்சு 1.6க்குள் இருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது.
 இதற்கு மேல் அலை வீச்சு உள்ள மொபைல் போன்கள் விற்பனை செய்வது தடை செய்யப்படும். இவ்விதி தற்போது உலக அளவில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டத்தை போல் கொண்டுவரப்ப்படுகிறது. 
ஒவ்வொரு மொபைல் போனுக்கான அலைவீச்சு விற்பனை செய்யப்படும்போது மக்கள் அறியும் வகையில் குறிப்பிடப்பட வேண்டும். மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் இணைய தளங்களிலும் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்படாத மொபைல் போன்கள் விற்பனை செய்யக் கூடாது.

தற்போது பல மொபைல் போன்கள் இந்த விதி முறைக்குட்பட்ட நிலையில் தான் உள்ளது. ஆயினும் முறையான நிறுவனப் பெயர்கள் இல்லாமல் அரசுக்கு வரியும் செலுத்தாமல் சந்தையில் விற்பனை பரபரப்பாக விற்கப்படும் சீன நாட்டு மொபைல்களில் பல அபாயத்தைத் தரும் அளவிற்கு கதிர் வீச்சினைக் கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது.
இந்திய அரசுயைவ்விதியையும்,கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். இதனால்அதிக கதிர்வீச்சு உள்ள மொபைல்கள் வாங்குவது குறையும் என்று மத்திய அரசு கருதுகிறது.
===========================================================================================================
இஸ்ரேல் தூதர்கள் மீது தாக்குதல்.

டில்லியில் குண்டு வெடிப்புக்குள்ளான கார்
இந்தியாவிலும், ஜார்ஜியாவிலும், இஸ்ரேலிய தூதரக வாகனங்கள் மீது ஒரே நேரத்தில் இரு குண்டுத் தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
டில்லியின் உயர் பாதுகாப்பு இடமான பிரதமர் குடியிருப்பு பகுதியிலேயே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு ஒன்றில் இஸ்ரேலிய தூதர் ஒருவரது மனைவியும், ஓட்டுனரும் காயமடைந்துள்ளனர்.
இந்தக் காரில் ஒரு பொருளை பொருத்திய மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தாம் தேடிவருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் ஜார்ஜிய தலைநகர் திபிலிசியிலும் இஸ்ரேலியதூதர் கார் ஒன்றில் வெடி பொருள் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது வெடிக்கவில்லை.அதற்கு முன்னரே அகற்றப்பட்டுவிட்டது. என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குஇதுவரையாரும் உரிமை கோரவில்லை.
ஆனால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரான் நாட்டின் சதி எனகுற்றஞ்சாட்டியுள்ளார்.
____________________________________________________________________________________________________________





படத்தில் பாலத்தைக்கடப்பவர் பெயர்"சந்திர பகதூர் டான்கி"இப்போதைய உலகில் மிக சிறியவரான இவரின் உயரம்"56'செ.மீ,மட்டுமே.இவரின் வயதோ 72.வயதை விட உயரம் குறைவான இவர் நேபாள நாட்டைச்சேர்ந்தவர்.
இதுவரை உயரம் குறைவானவராகக் கருதப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த"ஜான்ரி பாலவிங்" உயரம்59.93.செ.மீ.ஆகும்.
Chandra Bahadur Dangi, a 72-year-old Nepali who claims to be the world's shortest man at 56cm in height.
உலக சாதனை[?] பத்திரத்தில் கையொப்பமிடுகிறார்.டான்கி.
________________________________________________________________________



இது நம்ம காத்மன்ட் பசுபதிநாதர் கோவில் முற்றும் துறந்தவர்களின் முகாம்.
________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?