குப்பையில் படை வீரர்கள்,,?

அமெரிக்க குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட 300 படைவீரர் பிணங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் விர்ஜீனியாமாகாணத்தில் உள்ள குப்பைக்கிடங்கு ஒன்றில் சுமார் 300 அமெரிக்க ராணுவத்தினரின் பிணங்கள் கொட்டப்பட்டதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளில் பணிபுரிந்து, அங்கு கொல்லப்பட்டவர்களாவர். ஓராண்டு அல்ல, சுமார் ஐந்தாண்டுகள் இந்தப் பிணங்களை இங்கு கொண்டு வந்து போடுவது நடந்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுவரையில் இந்த 300 பிணங்கள் கிடங்கில் குவிக்கப்பட்டன. பிணங்களை இங்கு கொண்டு வந்து போடும் பொறுப்பை அமெரிக்க விமானப்படை மேற்கொண்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டில் இந்தக் கொடுமை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த 300 பேர் என்பது அரசு வட்டாரங்களில் சொல்லப்படும் விபரமாகும். உண்மையில் இந்த எண்ணிக்கை பெரும் அளவில் இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குப்பைக்கிடங்கில் கொண்டு வந்து ராணுவத்தினரின் பிணங்களைப் போடும் விஷயத்தை அமெரிக்க ராணுவம் மறைத்திருக்கிறது. இந்த வகாரம் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு தகவலும் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். இது குறித்துக் கருத்து தெரிவித்த கேரி லின் ஸ்மித் என்ற பெண்மணி, ஒடுமொத்த உடம்பு மட்டுமல்ல, ஒரு சிறிய நகத்தைக்கூட அவ்வாறு குப்பைக் கிடங்கில் கொண்டு போய் போடக்கூடாது என்கிறார். இராக் ஆக்கிரமிப்பில் அமெரிக்கப் படைகளுக்கு உதவ சென்றிருந்த லின் ஸ்மித்தின் மனைவிதான் கேரி லின் ஸமித். 2006 ஆம் ஆண்டில் ஸ்மித் கொல்லப்பட்டார்.


டேலாவரே என்ற இடத்தில் உள்ள டோவர் விமானப்படைத்தளத்தில் பிணக்கிடங்கு உள்ளது. போரில் உயிரிழக்கும் ராணுவத்தினர் பலரின் உடல்கள் இங்குதான் கொண்டு வந்து வைக்கப்படும். பின்னர், குடும்பத்தினருக்கு மற்றும் உறவினருக்குத் தகவல் கொடுத்து வரவழைப்பார்கள். அவர்கள் வந்த உடலை அடையாளங்கண்டு சொன்னபிறகு ராணுவம் சார்பாகவே உடல் அடக்கம் செய்யப்படும். ஆனால் இந்த பிணக்கிடங்கிலிருந்து ரகசியமாக சுமார் 300 உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு மன்னர் ஜார்ஜ் பிராந்தியத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டன. இவ்வாறு கொட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களது ரணம் பற்றியத் தகவலும் சொல்லப்படவில்லை. பல உடல்கள் குப்பைக்கிடங்குகளில் உள்ள குப்பைகளோடு சேர்த்து எரிக்கப்பட்டன.

தண்டனை இல்லைஇத்தகைய பணிகளைச் செய்தவர்களுக்கு இதுவரை பெரிய அளவில் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. இவ்வாறு குப்பைக்கிடங்கில் கொட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபிறகு, ராணுவத்தில் அதிருப்தி எழுந்தது. இந்த அதிருப்தியைத் திசைதிருப்பவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தது. இதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பெரிய அளவில் தண்டனை தர வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பொது மக்களி
மிருந்து கோரிக்கை வந்தது. ஆனால் டோவர் விமானப்படைத்தளத்தில் உள்ள பிணக்கிடங்கின் பொறுப்பாளராக இருந்த கர்னல் ராபர்ட் எச் எட்மாண்ட்சனுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிணக்கிடங்கு மேற்பார்வையாளர்களுக்கும் சிறிய தண்டனைகள் தரப்பட்டன. பணிநீக்கம் செய்யப்படவில்லை.

விர்ஜீனியா மாகாணத்தில் மற்றொரு இடத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றியும் விசாரணை நடந்துள்ளது. அடையாளம் கண்டுகொள்வதற்காக பிணங்களை அடுக்கி வைக்கும் இடமொன்றில் ஏராளமான பிணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் ராணுவத்தினர் மற்றும் மருத்துவ நிர்வாகத்தினரால் செய்யப்படவில்லை. பலியானவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்தப் பிணங்கள் ஓரிரண்டு ஆண்டுகள் வரையிலும் அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. பல ராணுவத்தினரின் உடல் பாகங்கள் கேட்பாரற்றுக் கிடந்திருக்கின்றன. இவையனைத்துமே பொது மக்கள் கவனத்திற்கு வராதவாறு ராணுவத்தினர் பார்த்துக் கொண்டனர்.

1991 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் அளிக்காமல் பிணங்களை வீசியெறியும் பணி துவங்கிவிட்டது. அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் துணை அதிபர் டிக் செனி ஆகியோரின் காலத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் செய்யப்பட்டிருக்கிறது. பிணக்கிடங்கு ஊழியர்களிடம் விசாரணை அதிகாரிகள் கேட்டபோது, மேலிடத்திலிருந்துதான் உத்தரவு வந்தது. இதுபற்றிப் பேச வேண்டாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார்கள். குப்பைக்கிடங்கில் வீசியெறியப்பட்ட பிணங்களில் பெரும்பாலானவை ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய இருநாடுகளில் ஆக்கிரமிப்புப் பணி
யில் இருந்தபோது உயிரிழந்தவர்களின் பிணங்களாகும்.
பிணக்கிடங்கிலேயே பிணங்களை எரித்துவிட்டு, அங்குள்ள மருத்துவமனையிலுள்ள கழிவுகளோடு சாம்பலைக் கலந்து குப்பைக் கிடங்குக்கு அனுப்பும் வேலையை டோவர் விமானப்படைத்தளத்து நிர்வாகம் செய்துள்ளது. இத்தகைய வேலைகளுக்கு எந்தவிதமான நாடாளுமன்ற அல்லது மக்கள் ஒப்புதலோ கிடையாது. ராணுவத்தில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றிய தகவல் எதுவும் இல்லாமல், ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து அவர் சண்டையில் கொல்லப்பட்டார் என்ற விபரம் கிடைத்து பிணங்களை இன்னும் தேடிக் கொண்டிருப்பவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை இந்த விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் பேராசைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை சரியானதாகத் தரப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.
______________________________________________________________________________

வானில் தெரிவது முழு நிலவுதான்.

வெள்ளை மாளிகை பின்னணி எப்படி?
_______________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?