ஞாயிறு, 22 மார்ச், 2015

அன்றும் பேரணி ,இன்றும் பேரணி.
2011 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க., அரசின் மீது, பல்வேறு துறைகளிலும் முறைகேடுகள் நடந்து வருகிறது .அவை பல ஆதாரங்களுடன் செய்திகளாக வெளியாகியுள்ளன.

, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து, ஆதாரங்களுடன் புத்தகம் போட தி.மு.க.,முடிவெடுத்திருக்கிறது.  

அடுத்த கட்டமாக, அதை வைத்து புகார் பட்டியல் தயார் செய்து, அதை முன்பு தி.மு.க.மீது எம்.ஜி.ஆர் ,பேரணியாக சென்று, கவர்னரிடம் மனு  கொடுத்தது போல கொடுக்க முடிவெடுத்திருக்கிறது. 

முன்பு எம்.ஜி.ஆர், மனு மீது கவர்னர் நடவடிக்கை எடுத்துதான் கருணாநிதி மீது சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டு விசாரித்தது.

அதே வரலாறு எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சியின் மீதே திரும்பியுள்ளது.
இப்போது திமுக கொடுக்கும்  புகார்கள் மீது, கவர்னர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அவரிடம் கோரிக்கை விடுக்க முடிவெடுத்திருக்கின்றனர். 

ஆனால் ஜெயா ஆதரவாக இதுவரை  செயல்பட்டு வரும் கவர்னர் ரோசையா வழக்கம் போல் முறையாக ஜெயா ஆட்சி மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்தால் , சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணைக் குழு அமைக்க வற்புறுத்துவது எனவும் முடிவெடுத்திருப்பதாக   கூறப்படுகிறது. 

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நான்கு ஆண்டு களை கடந்துவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் , பருப்பு கொள்முதல்,

 உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பதில் முறைகேடாக டெண்டர் ரத்து,
ஆசிரியர் பணி மாற்றம் மற்றும் நியமனம்,

 முட்டை கொள்முதல்,

தனியாரிடம் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியது,

 சி.எம்.டி.ஏ., மூலம் கட்டடம் கட்ட அனுமதி வழங்கியது,

வேளாண் பொருட்களுக்கு மானியம் வழங்கியதில் தவறுகள்,

 போக்குவரத்துத் துறையில் உதிரி பாகங்கள் வாங்கியது,

 நெடுஞ்சாலைத் துறையில் தரமற்ற பொருட்களைக் கொண்டு சாலை போடுதல் என,மற்றும் சாலைப்பணிகள் வகையில் 1000கோடிகளுக்கு மேல் சுவாகா.

காலிப் பணியிடங்கள் நிரப்புவதில் அதிகப்படியான லஞ்சம் அதை தராத அதிகாரிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு கொடுமைப்படுத்தல் என எல்லாத் துறைகளிலும் முறைகேடுகள் நிரம்பி இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
அவற்றோடு, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட மற்ற துறைகளிலும் ஊழல்கள் மலிந்து விட்டதை, தெளிவாக செய்தி தாட்கள் வெளியிட்டு வருகின்றன.
. அவற்றையெல்லாம், முதல்கட்டமாக பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல புத்தகங்கள்,பொதுக்கூட்டங்களை தி முக,காங்கிரசு,பா.ம.க.தே.மு.தி.க,உட்பட எதிர்கட்சிகள் நடத்தி வருகின்றன..  தி.மு.க., சார்பில், அடுத்த மாதம் பேரணியாக சென்று, ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து, நடவடிக்கைக்கு வலியுறுத்தப் போகிறார்களாம்.. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரவும் தி.மு.க,முடிவு செய்துள்ளது.
 இதற்காக, ஊழல் சம்பந்தப்பட்ட பட்டியலை தொகுக்குமாறு, தி.மு.க., வழக்குரைஞர் ணிக்கு ,திமுக  தலைவர் கருணாநிதி உத்தரவிட்டிருக்கிறார். தற்போது தி.மு.க.வழக்குரைஞர் அணியினர் அதற்கென ஒரு குழு அமைத்து ஆதாரங்களைத்திரட்டி மனு தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கின்றனர்.
விரைவில் அதை புத்தகமாக வெளியிட்டு தமிழகம் முழுக்க கொடுத்து பரபரப்பை ஏற்படுத்த உள்ளதாக தெரிகிறது.ஆதாரங்கள் அசைக்க முடியாத படி இருக்க அ.தி.மு.க கட்சியினர்,அமைச்சர்கள் குடைச்சலில் சிக்கி மனம் வெறுத்த நிலையில் உள்ள அரசு அலுவலர்கள் தரப்பில் இருந்தே வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.
==========================================================================
இன்று
மார்ச் -22.
  • உலக தண்ணீர் தினம்
  • இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)
  • அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
  • லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)
  • ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960).
==========================================================================
குளிர்காலம் என்றால் ஜலதோஷம்,
 வெயில் காலம் என்றால் வெப்பம்
இப்படி பருவகாலங்கள் மாறி, மாறி உடல் ஒரு நிலைக்கு வருவதற்குள் அப்பப்பா... கஷ்டம் தான்.
பருவ காலங்கள் மாறுவது ஒரு புறம் இருக்க...
 சிலருக்கு உடல் சூடு மட்டும் மாறாமல் இருக்கும்.

இதற்கு இவர்களது உடல் இயற்கையாகவே சூடாக இருப்பது தான் காரணம். இவர்களுக்காக சில   ஆலோசனைகள்.
தலைக்குளியல் போடுவதற்கு, 4 மணி நேரத்திற்கு முன் கீழ்வரும் செயல்களை செய்ய வேண்டும்:
* முதலில், ஒரு பாத்திரத்தில், நல்லெண்ணெய் வேண்டியளவு ஊற்றி, நன்கு காய வைக்க வேண்டும்.
* காய வைத்த நல்லெண்ணெயில், ஏழு அல்லது எட்டு மிளகை சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்ததும், டப்டப் ஒலி கேட்டவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* காய வைத்த எண்ணெயை, காட்டன் துணியால் தொட்டு, முடியின் வேர்களில் படும்படி, நன்கு ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், எண்ணெயின் பயன் வேர்கள் வழியே உள்ளே சென்று சூட்டை தணிக்கும்.
* முக்கிய பிரச்னையாக கருதப்படும் முடி கொட்டும் தொல்லையும் தீர்ந்துவிடும்.
* இரண்டு மணி நேரம் கழித்து, மிதமாக வெப்பப்படுத்திய தண்ணீரால், மீண்டும் காட்டன் துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* அடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்தால், உடம்புக்கே ஒரு ரிலீப் கிடைத்தது போல் தோன்றும்.
இப்படி, வாரம் இரண்டு முறை செய்து வந்தால், உடல் சூடு குறைந்து, நலம் -வளம் பெறலாம் .
==========================================================================