செவ்வாய், 17 மார்ச், 2015

கண்டிப்பாக வேண்டும்..காலை உணவு.!

நீங்கள் மற்ற நேரங்களில் எப்படி சாப்பிடுகிறீர்கள்,அல்லது சாப்பிடாமல் உலவுகிறீர்களா என்பதல்ல இப்போதைய கேள்வி?
கண்டிப்பாக காலை உணவை சாப்பிட்டீகளா?
காலை உணவை அடிக்கடி தவிர்ப்பவர் என்றால் கண்டிப்பாக மேலே படியுங்கள்.உங்களின் தவிர்ப்பு உங்கள் உடலை பாதிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முதல்நாள் இரவு 9 மணிக்கு  சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம்.
 இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இது  கிட்டத்தட்ட விரதம் இருப்பது போலத்தான்.
 நாம் தூங்கினாலும், நம் ஆரோக்கியத்துக்காக உடல் உறுப்புகள் உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.
அவற்றுக்கு அடுத்த நாளின் தொடக்கத்திலாவது சக்திக்கான உணவு வேண்டும்.
காலையிலும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் மதியம் ஒரு மணி வரை  இந்த விரதம் நீடிக்கும். பிறகு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கு எப்படி சக்தி கிடைக்கும்?
நீங்கள் எப்படி  ஆரோக்கியமானவராக இருக்க முடியும்?

எனவே காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்.
நாள் ஒன்றுக்கு 1500 முதல் 1800 கலோரி வரை நம் உடலுக்கு சக்தி தேவை. இதில் மூன்றில் ஒரு பங்கு கலோரிகள் காலை உணவிலிருந்தே  உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
 அப்போதுதான் நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் செயல்படுவதற்கு உங்கள் உடல் உங்களுக்கு உதவி செய்யும்.  அதனால், எரிபொருளை நிரப்புங்கள்!

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்புகிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத்  தயாராகிவிடுங்கள்.
குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்துவிடும்.
உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும்.  இல்லாவிட்டால், 11 மணிக்கு பசி அதிகமாகும். காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற  நொறுக்குத்தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும்.
 ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால்  உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிகமாகும்.
தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக்குத்தீனிகளால்ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக  சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும்  அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
ஆகவே, நோய்களை விரட்டுங்கள்.

காலை உணவின் மகத்துவங்களில் ஒன்று உடல் சோர்வு மற்றும் மனச்சோர்விடம் இருந்து நம்மைத் தற்காப்பது.
 நம் உடலுக்குத் தொடர்ச்சியாக  தேவைப்படுகிற குளுக்கோஸ்தான் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குறிப்பாக நம் மூளையின் செயல்திறனுக்கும் அதிகம் தேவைப்படுகிறது.
இது காலை உணவின் மூலமே அதிகம் கிடைக்கிறது. இதன்மூலம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டு,  நினைவுத்திறனை அதிகப் படுத்தி, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு மிகமிக  அவசியம்.
 அவசரமாக, ஏதாவது ஒன்றை டிபன் பாக்ஸில் அடைத்துத் தந்தால் பள்ளியில் மந்தமாகவே இருப்பார்கள். படிப்பதிலும் பின்தங்குவார்கள்.  காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு தாக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே,  ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிட வேண்டும், இரவில் சிப்பாய் மாதிரி சாப்பிட வேண்டும்’ என்று  கேள்விப்பட்டிருப்பீர்கள். காலை உணவின் முக்கியத்துவத்தைமருத்துவரீதியாக உணர்ந்து சொல்லப்பட்ட பொன்மொழி இது. ராஜா மாதிரி என்றால்  அதிகம் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம் என எல்லாம் கலந்த சரிவிகித உணவாக சாப்பிட வேண்டும் என்பதே  இதன் அர்த்தம்.
நான்கு இட்லி சாப்பிட்டாலே உங்களுக்குத் தேவையான சரிவிகித உணவு காலையில்கிடைத்துவிடும்.
இட்லியில் மாவுச்சத்தும்,  சாம்பாரில் காய்கறிகளும் பருப்பும் இருப்பதால் நார்ச்சத்தும் புரதமும் கிடைத்து விடும். ஆகவே, ராஜாவாகி விடுங்கள்!
காலை உணவு 7 மணியிலிருந்து 9.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.
 • தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, ஆப்பம், பொங்கல், உப்புமா, இடியாப்பம் போன்றவற்றில் ஏதாவது ஒரு உணவை சாம்பார், சட்னியுடன் சாப்பிடலாம். 
 • சாதம் சாப்பிடுவதோ, பழைய சாதம் சாப்பிடுவதோ தவறில்லை.
 •  ஆனால், வீணாகிவிடக் கூடாது என்று அதிகமாக  சாப்பிட வேண்டாம்.
 • சப்பாத்தி, கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், பிரெட், சாண்ட்விச் போன்ற கான்டினென்டல் உணவுகளும் காலைக்கு ஏற்றவையே.
 •  சிப்ஸ், பப்ஸ் போன்ற ஜங்க்   உணவுகள், இனிப்புகள் கட்டாயம் கூடாது. சிலர், காலை உணவாக பழங்கள் மட்டுமே சாப்பிடு வார்கள். பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான்... ஆனால்,  அதிலிருந்து நார்ச்சத்து மட்டுமே கிடைக்கும். 
 • மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சரிவிகித சத்துகள் கிடைத்தால்தானே நல்ல  உணவு. 
 • எனவே, பழங்களை மட்டும் சாப்பிடுவதும் தவறுதான்!
நம் இசுலாமிய நண்பர்கள் ரமலான் விரதத்தை பகல் முழுக்க சிலர் எச்சிலை கூட விழுங்காமல் இருப்பார்கள்.
அவர்கள் கூட விடிகாலையே  காலை உணவை அருந்தி விட்டுசூரிய உதயத்துக்குப் பின்னர் விரத்ததை துவக்கி சூரியன் மறைவுக்குப் பின்னர் நோன்பு கஞ்சியுடன் நிறைவு செய்வார்கள்.
காலை உணவு உடலை காக்குமென்பதையும்,முக்கியம் என்பதையுமே இது உணர்த்துகிறது..
===========================================================================
 இன்று :-
17மார்ச்.
 • இத்தாலிய பேரரசு அமைக்கப்பட்டது(1861)
 • ரப்பர் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டது(1845)
 • ரவுலட் சட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்ய மகாத்மா காந்தி சென்னை வந்தார்(1919)
 • கலிபோர்னியம் என்ற 98வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1950)
 • அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை[செயற்கை கோள்] ஏவியது(1958)
==========================================================================
சிக்குவாரா ? 
அக்ிலி கிருஷ்ண மூர்த்தி.

நெல்லை வேளாண் பொறியியல் துறையில், செயற்பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தப்பிக்க வைக்கும் நோக்கில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருவதாக எதிர்க்கட்சியினரும், இறந்து போன முத்துக்குமாரசாமியின் உறவினர்களும் கூறுகின்றனர்..
சி.பி.சி.ஐ.டி., போலீசார்,தற்போது இரண்டு தனிப்படைகள் அமைத்து, சென்னை மற்றும் நெல்லையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் நடந்த விசாரணையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்கள், முத்துக்குமாரசாமியால் பணி நியமனம் செய்யப்பட்ட, 7 ஓட்டுனர் பணியிடங்களுக்கு, 21 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, முத்துக்குமாரசாமிக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட, 7 ஓட்டுனர்கள், முத்துக்குமாரசாமியின் உறவினர்கள், அலுவகத்தில் பணிபுரிந்தவர்கள், உள்ளூரிலுள்ள அ.தி.மு.க.,வினர் உள்ளிட்ட பலரிடம், விசாரணை நடத்தப்பட்டது.
அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் உதவியாளர் பூவையாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், முத்துக்குமாரசாமியிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

இந்த விவகாரத்தில், தன்னை தவிர மேலும் பலருக்கும் தொடர்பிருக்கும் விவரத்தையும், அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மற்ற உதவியாளர்களான தியாகராஜன், பாண்டியன் ஆகியோரையும் போலீசார் விசாரித்தனர். அப்போது பல  அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில்விசாரணை நடத்தினால் கண்டிப்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்டிப்பாக சிக்குவார்.
அக்ரியும்,                    பூவையாவும்.
இதையே, சி.பி.சி.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால்,  மேலிட நெருக்கடியில் மேற்கொண்டு விசாரணையை கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதாகவு சி.பி.சி.ஐ.டி வட்டத்தினர் தெரிவித்தனர்.

 அரசுக்கு நெருக்கடி தரும் வழக்குகள் தான் தற்போது ஆட்சியாளர்கள் தப்பிக்கவும்,சி.பி.ஐ வரை சென்று விடாமல் இருக்கவும் சி.பி.சி.ஐ.டி மாற்றப்படுகின்றன.
அதனால், இந்த வழக்கில் என்ன தான் தீவிரமாக விசாரித்தாலும்,ஆட்சியாளர்கள் நெருக்கடியால்சி.பி.சி.ஐ.டி விசாரணைமுழுமை அடைவதில்லை.
சாதாரண போலிசாரின் விசாரணையை போன்றே அமைந்து மறக்கடிக்கப் பட்டு விடுகிறது.
அதுவும் இன்றைய உளவுத்துறையும்,காவல் துறையும் ஆளுங்கட்சியின் ஒரு கிளையினர் போன்றே இயங்குகின்றன.
 முத்துக்குமாரசாமி வழக்கிலும், அப்படியொரு நிலை தான் ஏற்ப்பட்டுள்ளது..
குற்றவாளியாக மய்யமாகியுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆளுங்கட்சி மேலிடம் தவிர்க்கக் கூறுவதால்  அடுத்தடுத்த கட்டங்களில், வழக்கை எப்படி கொண்டு செல்வது என்பது சி.பி.சி.ஐ.டி.யினர் வட்டத்துக்கு தெரிய வில்லை. ”உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி செயல்பட மட்டுமே எங்களால் இயலும்..
உயரதிகாரிகள் அனுமதித்தால், இந்த வழக்கில், எதிர்க்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் விசாரணைக்கு அழைத்து வர, நாங்கள் தயாராக இருக்கிறோம்.ஆனால் ஆளும் மே[லி]டம் அதை விரும்ப வில்லை.”
இவ்வாறு, அந்த சி.பி.சி.ஐ.டி வட்டங்கள் தெரிவித்தன.

நெல்லையில் உள்ள முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக, தி.மு.க., மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆகியோர் செல்ல விருப்பப்பட்டு , முத்துக்குமாரசாமி குடும்பத்திற்கும் தெரிவித்து, அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர்.ஆனால் இச்செய்தி உளவுத்துறை மூலம்  மே[லி]டத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அக்ரி கிருஷ்ண மூர்த்தியார் பதவியேற்பு.
அங்கிருந்து வந்த ஆணையின்படி,காவல் துறையினரின் மிரட்டலால் அரசியல்வாதிகள் யாரையும் முத்துக்குமாரசாமி வீட்டுக்குள் அனுமதிக்க, அவரின் உறவினர்கள் மறுப்பதாக தகவல்.

முத்துக்குமாரசாமி தற்கொலை விசாரணையை, சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என வலியுறுத்தி  வழக்கறிஞர் பிரம்மா, வரும் 23ம் தேதி, நெல்லையில் உண்ணாரவிரதப் போராட்டம் நடத்தவிருக்கிறார். 
அந்த போராட்டத்தில், முத்துக்குமாரசாமியின் உறவினர்கள்,எதிர்கட்சியினர் திரளாக கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கிறது.
அதையும் தடுக்க ஆளுங்கட்சியினரும்,காவல் துறையினரும் முயற்சித்து வருகின்றனர்.
==========================================================================