திங்கள், 16 மார்ச், 2015

உடன்பாடில்லா உடன்குடி?

உடன்குடி அனல் மின் நிலைய திட்டம் ரத்து என்னும் செய்தி இன்றைய [அ.தி.மு.க.] அரசின் நிர்வாகதிற்கும், குளறுபடிகளுக்கும்  சிறந்த உதாரணம்.
கடந்த தி.மு.க. அரசு தமிழ் நாட்டில்உருவாகும் மின் தட்டுப்பாட்டை நீக்க பல இடங்களில் மின் உற்பத்திநிலையங்களை உருவாக்கியது.அதில் ஒன்றுதான் உடன்குடி அனல் மின நிலையம்.
இந்த திட்டத்தை ‘பெல்’ என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து நிறைவேற்றும் வகையில் 2008-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 2012-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 2013-ம் ஆண்டு மின்வாரியமே நிறைவேற்றஒப்பந்த புள்ளிகளை கோரினார்.அதன் மூலம் இந்த திட்டத்தை தாமதப்படுத்தி மின் வெட்டை அதிகமாக்கினார்.
 1320 மெகாவாட் மின்சாரம் அளிக்கும் இந்த திட்டம் பலவகையிலும் தாமதம் செய்யப்பட்டு, இதில் பங்கேற்ற சீன நிறுவனம் டெண்டர் விதிகள் தமிழ் நாடு அரசு மீறுவதாக கூறி நீதிமன்றம் சென்றது.

 திமுக அரசு கொண்டு வந்த மிந்திட்டங்களை நிறைவெற்றாமல் மாநில தேவைக்கு தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை இப்போது அமைச்சராக இருக்கும் நத்தம் விசுவநாதனும், முன்பு தமிழ்நாடு மின்வாரிய தலைவரும் தற்போது தலைமை செயலாளர் ஆக இருக்கும் ஞானதேசிகனும் சேர்ந்து தான் வாங்கினார்கள்.அதில் தமிழ் நாடு மக்கள் வரிப்பணத்தை வீணடித்து தாங்கள் லாபம் சம்பாதித்துக் கொண்டனர்.
இப்போது உடன் குடி அனல் மின் நிலையத் திட்டத்தை தமிழ் நாடு அரசும் செய்யப்போவதில்லை திட்டம் கைவிடப்பட்டது என்று அறிவித்துள்ளது.
இந்த திட்டம் தாமதம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே 80 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கும் மின்வாரியத்தில் ஒரு திட்டத்தை ரத்து செய்து 80 கோடி ரூபாயை தேவையற்ற முறையில் நஷ்டப்படுத்தி இருப்பது தான் இன்றைய அ.தி.மு.க. அரசின் அவல நிலைமை.நிர்வாகத்திறமை.
தமிழ் நாடு முழுக்க வரௌம் கொடை காலத்தில் முன் வெட்டு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கையில் உள்ள மின் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவது என்னவகை நிர்வாகம்,ஆட்சி என்று தெரிய வில்லை.இருக்கும் ஒரு ஆண்டையும் வெளியே அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி கடத்தி விடலாம என்ற நினைப்பு ஆட்சி செய்வோருக்கு உண்டாகி விட்டது போல் தெரிகிறது.அடுத்து தான தேர்தலி நின்று வெல்ல முடியாது என்ற எண்ணமா?
அல்லது தீர்ப்பு வெளியாகி தேர்தலில் நிற்கவே முடியாது என்ற முடிவு  திண்ணமா?.
முதலில் உடன் குடி அனல் மின் நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் வரவிருந்த மின்சாரம் மட்டும் நட்டமில்லை.இதுவரை செலவிட்ட 80 கோடிகளும் நட்டம் அதற்கு யார் பொறுப்பு?
அந்த நட்டத்தை தற்போதைய துக்ளக் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
சில பின்னணிகள்:
தமிழ்நாடு மின் வாரியம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'பெல்' நிறுவனம் இணைந்து, துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தலா, 800 மெகாவாட் திறன் கொண்ட, இரண்டு அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தன.
 ஆனால், இந்த மின் நிலைய பணிகள் துவக்குவதில்,ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 'பெல்' நிறுவனத்தை ஓரங்கட்டினார்.
 'உடன்குடி மின் நிலையம், தமிழ்நாடு மின் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா, 2012 பிப்ரவரியில் அறிவித்தார்.
 உடன்குடி மின் நிலையத்தின், மின் உற்பத்தி திறன், இரண்டு அலகுகளிலும், 800 மெகாவாட்டில் இருந்து, தலா, 660 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது.
இந்த மின் நிலையத்திற்காக, திருச்செந்துார் தாலுகாவில் உள்ள, 700 ஏக்கர், அரசு புறம்போக்கு நிலம், மின் வாரியத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டது. தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில், வருவாய் துறை அதிகாரி கள் ஈடுபட்டுள்ளனர்.
 இதையடுத்து, மின் வாரியம் சார்பில், உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும், ஒப்பந்த நிறுவனத்தை, தேர்வு செய்ய, 2013 ஏப்ரலில் 'டெண்டர்' கோரப்பட்டது.

இதில், சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் 'பெல்' நிறுவனம் என, நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன.
 இந்நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் விலை புள்ளி என, இரண்டு விவரங்களை, மின் வாரிய அதிகாரிகளிடம் வழங்கின. தொழில்நுட்ப புள்ளி, அதே ஆண்டு அக்., மாதம் திறக்கப்பட்டதில், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனமும், 'பெல்' நிறுவனமும் தேர்வாகின.
தொழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்ட, ஆறு மாதங்களுக்குள், விலை புள்ளி திறக்கப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற காலதாமதம் இழுபறிக்கு பின், கடந்த நவ., மாதம் தான், விலை புள்ளி திறக்கப்பட்டது.
 இதையடுத்து, மின் வாரிய அதிகாரிகள், உடன்குடிக்கு, தகுதி வாய்ந்த ஒரு நிறுவனத்தைதேர்வு செய்து, அதற்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் பெற முடிவு செய்தனர்.

ஆனால், மின் வாரிய அதிகாரிகள், தேர்வு செய்த நிறுவனத்திற்கு,10 பைசாவுக்கு கூட பயனில்லாமல் பணி ஆணை வழங்க,  ஆட்சியாளர்களுக்கும் ,சில அதிகாரிகளுக்கும் விருப்பமில்லை.சீன நிருவனத்திடமும்,அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திடமும் எதை பெற முடியும்?
 இதையடுத்து, நிதித்துறை அதிகாரிகள், உடன்குடி, 'டெண்டர்' விவரங்களை, மின் வாரிய அதிகாரிகளிடம் இருந்து பெற்று, தலைமை செயலகத்தில் உள்ள, எரிசக்தி துறை செயலர் அலுவலகத்தில், ரகசியமாக மதிப்பீடு செய்து வந்தனர்.
 மின் வாரிய அலுவலகத்தில், கடந்த, 13ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு அதன் இயக்குனர் குழு கூட்டம் நடக்க இருந்தது.
ஆனால், அந்த கூட்டம், திடீரென தலைமை செயலகம், ஒன்பதாவது மாடியில் உள்ள, தொழில் துறை கூட்ட அரங்கிற்கு மாற்றப்பட்டு ரகசியமாக நடந்தது.

 மின் வாரிய தலைவர் சாய்குமார், இயக்குனர்கள் தேவராஜன், அண்ணாதுரை, அருள்சாமி, கலைவாணன், அரசு சார்பில், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, நிதித்துறை செயலர் சண்முகம், தொழில் துறை செயலர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியசிறிது நேரத்தில், மின் வாரிய இயக்குனர்களை அனுப்பி விட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதில், உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வற்காக நடத்தப்பட்ட, 'டெண்டரை' ரத்து செய்து விட்டு, புதிதாக, 'டெண்டர்' வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


இந்நிலையில், தற்போது, உடன்குடி, 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி புதிதாக 'டெண்டர்'விட ஆரம்பித்தால் டெண்டர் விடும் பணிக்கு, 1 ஆண்டு; கட்டுமான பணி, 4 ஆண்டு என, 2020ம் ஆண்டிற்கு பின்னர்தான், உடன்குடி மின் நிலையம் அமைக்கப்படும் .
திட்ட செலவும், தற்போதைய, 10,121 கோடி ரூபாயில் இருந்து,
15 ஆயிரம் கோடிரூபாயாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அதிமுக ஆட்சியாளர்களால் இன்னமும் வெட்டியாக மக்கள் பணம் சீரழியும் நிலைதான் உண்டாகியுள்ளது.

'10 பைசாவுக்கு கூட பயனில்லை':

, உடன்குடி பணிகளை விரைவாக முடிக்கும் வகையில், கட்டுமான பணி வழங்கப்படும் ஒப்பந்த நிறுவனம், தன் சொந்த செலவில், மின் நிலையம் அமைக்க வேண்டும்;

பின், அதற்கான நிதி வழங்கப்படும்.
 இந்த அடிப்படையில், 'டெண்டர்' கோரப்பட்டது.
ஆனால், இதில்,
ஆள்வோருக்கும்,அலுவலர்களுக்கும்எந்த பயனும் இல்லை என, தெரிகிறது. எனவே, '10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத, 'டெண்டரை' ரத்து செய்யவும்' என மேலே இருந்து  தொடர்ந்து வலியுறுத்தல் வந்ததால், 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

=========================================================================
இன்று
[16 மார்ச்] 
  • மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்க ஐநா பொதுச்சபை ஆதரவு அளித்தது(2006)
  • திரவ எரிபொருளால் இயங்கும் முதல் ஏவுகணை மசாசுசெட்சில் செலுத்தப்பட்டது(1926)
  • இஸ்ரேல், ஜெரிகோ நகரை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்தது(2005)
  • முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)
=========================================================================

டிராபிக் ராமசாமி:

1. சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திப்பதால், இவரது முயற்சியால் 2006 ஆம் ஆண்டு கட்டாய தலைகவசம் கொண்டுவரப்பட்டது.

2. 2009 ஆம் ஆண்டு எந்திரன் படப்பிடிப்பு கிண்டி கத்திபாராவில் காலையில் வேலை செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னையில் பகலில் டிராபிக் அதிகமாக உள்ள இடத்தில் படப்பிடிப்பு எடுத்தால் அது விதி மீறல். ஆனால் அவரது வழக்கு எந்திரன் குழுவின் செல்வாக்கால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

3. இவர் வழக்கு தொடர்ந்ததை பற்றிசிலர் இணையத்தில் இவருக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்தனர். 
அவர் செய்தது எதுவும் தனது சுயநலத்திற்காக அல்ல என்பதை புரிந்துகொள்ள வில்லை.

4. சென்னையில் பெருவாரியான பல கட்டிடங்கள் விதி மீறல்கள் உள்ளன. அவற்றை எதிர்த்து பல வழக்குகள் போட்டு, தி. நகரில் பல வணிக நிறுவங்களை மூட காரணமாய் இருந்தார். ஆனால் பண பலம் மூலம் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன.

5. திரு. சகாயம் அவர்களை தாது மணல் மற்றும் கல் குவாரி ஊழலை கண்டறிய நியமிக்க உதவியாக இருந்தார்.

6. விளம்பர பலகைகள் வைக்க கூடாது என வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றும், அதை அரசியல் கட்சிகள் மீறுவதும் அதற்கு காவல்துறை துணை போவதும் இவருக்கு கோபத்தை உருவாக்கி அதை அவரே கிழித்து எறிந்தார். அதனால் தான் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

7. எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் அரசியல், ஆகவே இளையசமுதாயம் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினார். பலமுறை தேர்தலில் நின்றார். மிக சொற்ப ஓட்டுகளே பெற்றார். 


இன்று அதிமுக கட்சிக்காரர் வீரமணி புகாரின் பேரில் ராமசாமியை கைது செய்து சட்டை,செருப்பு இல்லாமல் தெருவில் இழுத்துச் சென்றது காவல் துறை.நீதிமன்ற கண்டிப்புக்குப் பின்னர்,மக்களின் அதிருப்திக்குப்பின்னர் சுதாரித்துக்கொண்ட ஆளுங்கட்சி சில நடவடிக்கைகளை எடுத்தது.
  வீரமணி தனது கார் கண்ணாடியை ராமசாமி உடைக்கவில்லை தான் அப்படி புகார் ஏதும் கொடுக்கவில்லை என்று சொல்லி விட்டார். காவல் துறை டிராபிக் ராமசாமி கொடுத்த புகாரின் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றது.
அப்படி என்றால் உள் ரத்தக் காய்ங்களுடன்,ரத்தக் கசிவுகளுடன் மருத்துவ மனையில்
டிராபிக் ராமசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரே அந்த காயங்கள் எப்படி அவருக்கு ஏற்பட்டது?
வீரமணி புகாரின் பேரில் டிராபிக் ராமசாமி மீது கடுமையாக நடந்து கொண்ட தமிழக காவல் துறை அவர் தந்த புகாரின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது?வீரமணியை ஏன் கைது செய்து சட்டையில்லாமல்,செருப்பில்லாமல் சிறைக்கு அழைத்து செல்லவில்லை?