காவிரியில் புதிய அணைகள்
காவிரி நீருக்காக கர்நாடகத்திடம், தமிழகம் நீதிமன்றத்தில் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், தண்ணீர் சிக்கனத்தை எவ்வாறு கடைபிடிப்பது?
தண்ணீரை சிந்தாமல், சிதறாமல் எப்படி பயன்படுத்துவது?
என்பது பற்றி தமிழகம் யோசிக்க வேண்டியது மிக முக்கியமானது.
காவிரி ஆறு, கர்நாடகத்தில் குடகு மலையில் உற்பத்தியானாலும், அதன் பெரும் பகுதி ஓட்டம், தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
அதாவது, கர்நாடகத்தை விட, காவிரியால் அதிக பயன் பெறும் மாநிலம் தமிழகம்தான். ஆனால், தமிழகம் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை சரியாக பயன் படுத்துகிறதா? என்றால், கேள்விக்குறிதான் எழுகிறது.
காவரி ஆற்றில் கர்நாடகம் கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளை கட்டி, தனது விவசாய நிலப்பரப்பை அதிகரித்துள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் அணையை விட மிகப்பெரிய அணை ஒன்றை, தமிழ்நாட்டின் எல்லையான ஓசூர் பகுதியில், கர்நாடகத்துக்குள் உள்ள மேகதாது என்ற இடத்தில் கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை கர்நாடகம் தொடங்கி விட்டது.
ஆனால் தமிழ்நாட்டில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேட்டூர் அணையை மட்டுமே , காவிரி நீரை சேமிக்க நாம் பயன் படுத்தி வருகிறோம்.
புதியதாக எந்த அணையையும் நாம் கட்ட வில்லை. ஈரோடு பகுதியில் நாம் காவிரிகூடுதுறையில் புதிய அணை கட்ட வாய்ப்புண்டு., கரூர் பகுதியில் காவிரி ஆற்றில் புதிய அணை கட்ட வாய்ப்புண்டு.
ஆனால், நாம் எந்த ஒரு புதிய அணை கட்டுவது பற்றி திட்டமிடக்கூட இல்லை. அதே நேரத்தில் ,நூறு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் பயன் படுத்திய அதே விவசாய முறையைத்தான் இப்போதும் நாம் பயன் படுத்தி வருகிறோம்.
ஆனால் முன்னோர் போல் கால்வாய்களை சீரமைப்பதிலும், ஆற்றின் கரைகளை பலப்படுத்துவதிலும் நாம் ஒவ்வொரு ஆண்டும் கவனம் செலுத்துவது இல்லை.
தமிழ்நாட்டில் ஏராளமான கால்வாய்கள் தூர்ந்து போய் கிடக்கின்றன.
தமிழ்நாட்டில் இப்போது ஒரு டி.எம்.சி. தண்ணீரில் 6 ஆயிரம் ஏக்கரில்தான் பாசனம் நடக்கிறது. கால்வாய்கள் சரியாக பராமிரிக்கப்பட்டு, நீர்ப்பாசன திட்டங்களை நாம் சரியாக பயன் படுத்தினால், 1 டி.எம். சி. தண்ணீரில் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது கால்வாய்களை சீரமைத்து, நீர்ப்பாசன முறைகளை சரியாக நாம் கடைப்பிடித்தால், 30 சதவீத தண்ணீரை சேமிக்க முடியும்.
மேலும், நாற்று நட்டு பின்னர் அதை பிடுங்கி வயல்களில் நடும் முறையை விட, நேரடி நெல் விதைப்பு முறையை விவசாயிகளிடம் ஊக்குவிக்க வேண்டும்.
இதன் மூலமும் தண்ணீரின் தேவையை குறைக்கலாம். கடைமடை வரை தண்ணீர் செல்லத்தக்க வசதியாக, கால்வாய்களை சீரமைப்பதும் முக்கியமாகும்.
இது போன்ற காரியங்களை, பவானி , நொய்யல், அமராவதி, காளியங்க ராயன் கால்வாய் மற்றும் வைகை போன்ற பாசன திட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவது முக்கியமாகும்.
தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வரும் நிலையில், கிடைக்கும் தண்ணீரை சேமிக்கவும், அதை சரியாக பயன் படுத்தும் நீர் மேலாண்மையையும் தமிழகத்தில் அமல் படுத்துவதும் முக்கியமானதாகும்.
மேகதாட்டுவில் புதிய அணையை காவிரியில் கர்நாடகம் கட்டி முடித்து விட்டால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பதில் இன்னும் சிக்கல் அதிகமாகும்.
எனவே, காவிரியில் இன்னும் சில அணைகளை கட்ட தமிழக அரசு முன் வரவேண்டும். இவற்றில், காவிரியில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கவும், அதனை முறையாக பயன் படுத்தவும் வேண்டியது முக்கியமானது.
இந்த அணைகளில் சேமிக்கப்படும் தண்ணீர், விவசாயத்துக்கு மட்டும் அல்ல., மக்களின் குடிநீருக்கும் பயன் படும். அதற்கான நடவடிக்கைகளை இப்போது எடுத்தால்தான், இன்னும் 3 ஆண்டுகளிலாவது புதிய அணைகளை நாம் கட்டி முடிக்க முடியும்.
இனி எதிர்காலத்தில், தமிழக விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், காவிரியில் புதிய அணைகள் அவசியமே., சிந்திக்குமா, தமிழக அரசு?.
========================================================================================
இன்று,நவம்பர்-01.
- கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது ( 1956)
- அல்ஜீரியா தேசிய தினம்
- இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
- மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
- நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது(1956)
=========================================================================================
அவன் கல்லறைக்கு வெளியேயும்
அவனது கனவுகள் அலைந்து கொண்டிருந்தது.
வந்திருந்தோர் கலைந்த பின்னரும்
அக்கனவுகள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தது.
கைமாற்று வாங்கி தராமல் இருக்கும் நண்பனிடம்
வாங்கும் முறை பற்றி கவனித்தது.
தான் கடன் கொடுக்க வேண்டிய நண்பன் மறதியில்
நம்பிக்கையை வளர்த்தது.
அடுத்ததெரு கனவான் மனைவி
தன்னைப் பார்த்து சிரிக்கும் சிரிப்பில்
எஞ்சுவது காதலா,காமமா என
ஆய்வை மேற்கொண்டது.
தன் மனைவி மறுமணம் பற்றி பயம் கொண்டது.
குழந்தைகள் எதிர்காலம் பற்றி
இன்னல்கள் கொண்டது.
ஆனால் அப்பொலோ வதந்திகள் பற்றி
சொர்க்கத்தில் விசாரித்தேயாக உறுதி பூண்டது.
முடிவு தெரியா மரணம்
ஆவியாக்கி அலைய விடுமாமே
அதில்தான் பயமும் வந்தது.
அழகுப் போட்டியில் கலந்து கொண்ட இறக ழகிகள் !
“ சிங்கப்பூர் MDIS_SG பல்கலைகழக வளாகத்தில் உலக மேதைகளோடு உண்டு.
.
.
“ காகிதத்தை 7 தடவைக்கு மேல மடிக்க முடியாது ரொம்ப முக்குனா 8,9 அவ்ளோ தான்! .”
.
.
“ 1967 தேர்தலில் : “காமராஜர் தோற்றிருக்க கூடாது, என்ன இருந்தாலும் மக்கள் காமராஜரை தோற் கடித்திருக்க கூடாது' என்றார் அறிஞர் அண்ணா.”
.
“ Fire Ants எறும்புகள் வெள்ளத்துல மூழ்காம இருக்க தங்களோட கைய கோர்த்து செயின் மாதிரி உருவாக்கி தப்பிக்கும்.”
.
.
“ நீரில் வாழும் அறிவிப்பூர்வமான பாலூட்டி களான டால்பின்கள் (Dolphin) தமிழில் 'ஓங்கில்' எனப்படும் .”
“ ராக்கெட் ஏவுகணைகளை விட போலியோ குழந்தைக்கு உருவாக்கிய காலிபர் ஷூவே உண்மையான சாதனை என்றார் #APJAbdulKalam .”
. .
.
“ காகிதத்தை 7 தடவைக்கு மேல மடிக்க முடியாது ரொம்ப முக்குனா 8,9 அவ்ளோ தான்! .”
.
.
“ 1967 தேர்தலில் : “காமராஜர் தோற்றிருக்க கூடாது, என்ன இருந்தாலும் மக்கள் காமராஜரை தோற் கடித்திருக்க கூடாது' என்றார் அறிஞர் அண்ணா.”
.
“ Fire Ants எறும்புகள் வெள்ளத்துல மூழ்காம இருக்க தங்களோட கைய கோர்த்து செயின் மாதிரி உருவாக்கி தப்பிக்கும்.”
.
.
“ நீரில் வாழும் அறிவிப்பூர்வமான பாலூட்டி களான டால்பின்கள் (Dolphin) தமிழில் 'ஓங்கில்' எனப்படும் .”
“ ராக்கெட் ஏவுகணைகளை விட போலியோ குழந்தைக்கு உருவாக்கிய காலிபர் ஷூவே உண்மையான சாதனை என்றார் #APJAbdulKalam .”
.
“ ஏவுகணை மட்டுமல்ல குறைந்த விலையில் 'மாரடைப்பை தவிர்க்க உதவும் Kalam-Raju Stent - டையும் உருவாக்கியுள்ளார் .”
.
.
“ கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், சினிமாவுக்காக மொட்டை யடிப்பது போன்றவை CelebrityWorship Syndrome ஆகும் .”
.
.
“ மனிதர்களுக்கு முன்பிருந்தே 5 கோடி வருசமா எறும்புகள் விவசாயம் செய்து வருகின்றன.”
.
.