மோடியின் சேவை நாட்டுக்கு...?

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, என மோடி அரசு அறிவித்தது முதல், வரலாறு காணாத வகையில் நாட்டில் முற்றிலுமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுநாடெங்கிலும் பணப்பரிவர்த்தனை பெரியளவில் முட‌ங்கியதுடன் சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் வங்கியில் வரிசையில் நின்று பணம் மாற்ற முயன்ற பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட இதுவரை 40 பேர் வரை இறந்துள்ளனர். 

இனால் மத்திய அரசுக்கு எதிராக நாட்டில் அனைத்து மக்களும் கொந்தளித்து போயுள்ளனர்.
அவர்களை சில கடசியினர் தங்களுடன் இணைத்து போராட்டம் நாடு முழுக்க வெடிக்கும் சூழலும் நிலவுவதாக செய்திகள் பரவிவருகிறது. 

முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்,மம்தா பானர்ஜி ஆகியோர் அரசுக்கு மூன்று நாட்கள் கேட்டு விதித்துள்ளனர்.இந்த அணியில் மேலும் அகிலேஷ்,நிதிஷ் உட்பட்ட மேலும் பல முதல்வர்கள் இணையும் சூழல் உண்டாகியுள்ளது.
அதை கூட அரசியலாக்க மோடி,பாஜக ,ஆர்.எஸ்.எஸ்,கூட்டணி எண்ணினாலும், வங்கிகளில் பணம் பற்றாக்குறையானதும்,பல வங்கிகள் இரண்டாயிரத்தை கூட மாற்றிக் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.ஏ.டி.எம், கள் 90% கடந்த 12 நாட்களாக மூடியே கிடப்பதால் மக்கள் கைச்செலவுக்கும்,மளிகை சாமான்கள் வாங்கவும் கூட திணறுகிறார்கள்.

இதில் மருத்துவ செலவு இருப்பவர்கள் நிலை மிக கொடுமையாக உள்ளது.மோடி விளைவு (மோடி எபெக்ட்)பண விவகாரத்தால் உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
அவை அரசால்,ஊடகத்தால் மறைக்கப்பட்டும் வருகிறது.ஊடகங்கள் கார்பரேட்கள் கைவசம் போனதால் அது மோடிக்கு எளிதாகவே உள்ளது.

பல வங்கிகள் தங்களிடமிருந்த 100 தாட்களை வைத்து இதுவரை நிலையை சமாளித்தது.ஆனால் அரசு இன்னமும் 500,1000 புதிய தாள்களை அச்சிட்டு அனுப்பாததால் அவைகளும் முடங்கி விட்டன.
100 தாட்களை வாங்கியவர்களுக்கு எண்ணி,எண்ணி சிக்கனமாக செலவழிப்பதாலும்,
100 வாங்கிய வியாபாரிகளும் அதை வியாபாரம் செய்ய சேர்த்து வைத்ததாழும்,வங்கியில் போட தயங்குவதாலும் தற்போது பணசுழற்சியே பொது மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது.

மக்கள் அத்யாவசிய பொருட்களை மட்டும் வாங்கினாலும் கையிருப்பு எத்தனை நாட்கள் வரும் என்றே தெரியவில்லை.உடனடியாக 500,1000 தாட்கள் வந்தால் மட்டுமே நிலை சீரடையும்.ஆனால் அதற்கு மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கையில் மாய் வைக்கவும்,பணமாற்றும் அளவை 4000இல் இருந்து பாதியாக 2000ஆக குறைத்து விட்டது.

அதுவும் குறையும் சூழலே தற்போது.
அப்படி மாற்றி தரும் பணம் ஒரு 2000 தாளாக இருப்பதால் சில்லரை கிடைப்பதே இல்லை.நாயிடம் மாட்டிய தேங்காய் நாயுக்கும் பயனில்லை.மற்றவர்களுக்கும் கிடைக்காது என்ற சங்கப்பாடல் நிலைதான் தற்போது.

ஆனால் பாஜக ஆதரவாக சில ஊடகங்கள் இது நாட்டுக்கு மிகத்தேவையான நடவடிக்கை.இதை செய்த மோடி நல்லவர்,வல்லவர் என்றும் மோடியை பொது மக்கள் அனைவரும் பாராட்டி குவிப்பதாகவும் செய்திகள் வெளியிட்டு மக்களை மேலும் கோபத்தில் தள்ளுகின்றன.
மவுனமாக மோடி,பாஜக அரசுக்கு எதிரான கோபக்கனல் மக்களிடம் பறவை வருகிறது.

முதலில் இதற்காக மோடியை பாராட்டி பேசியவர்கள் கூட பாதிப்பால் தாக்கப்பட்டு இப்போது பகிரங்கமாக திட்டுகின்றனர்.
மோடியின் நோக்கம் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்திய விதம் பகிரங்கமாக கருப்பு,கள்ளப்பண முதலைகளுக்கு ஆதரவாக உள்ளதாலும்,பாமர மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாகவும் அமைந்து விட்டது.

தங்கள் தடை செய்த 500,1000 ரூபாய்களை அச்சிடாமல் 2000 மட்டுமே அச்சிட்டு வெளியிட்டது கறுப்புப்பணம் பதுக்குபவர்களுக்கு சாதகமான மோடியின் செயலாக உள்ளது என பாமரனும் பேசும் அளவு மோடியின் பணக்கார ஆதரவு நிலை வெளிப்பட்டு போய்விட்டது.அது அவரை ஆட்சியை விட்டு வெளியே தள்ளும் வாய்ப்புக்காக மக்கள் அமைதியாக காத்திருக்க வைத்து விட்டது.
இவை மத்திய உளவுத்துறை மூலமாக மோடியின் காதுகளை எட்டி விட்டது.

இதனால் பயந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை சமாளிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் அகல மார்பு அஞ்சா நெஞ்ச பிரதமர் மோடி கூலி பணத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் கருப்புப்பண முதலைகள் பாமர மக்கள் போராட்டத்துக்கு அசர கூடாது. 
பணிந்து போகக் கூடாது.

பயபப்படாமல் விஜய் மல்லையா,அம்பானி,அதானி போன்ற நலிந்த ,ஏழைகளுக்கு மேன்,மேலும் உழைக்கவும்,அவர்களின் வங்கிக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும் மாதச்சம்பளம் 15000இல் இன்னமும் மாற்றமுடியாமல் 500 ,1000 வைத்துக்கொண்டு வங்கி வாசலில் நிற்கும் கரும் புள்ளி குத்தப்பட்ட ஊழல் செய்தவர்கள் சார்பில் வேண்டுகிறோம்.
====================================================================================
ன்று,
நவம்பர்-19.
  • உலக ஆண்கள் தினம்
  • பிரேசில் கொடிநாள்
  • வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
  • இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
  • இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த தினம்(1917)


====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?