புதிய தாள்களை அச்சிட எத்தனை நாட்களாகும்?

உண்மையிலேயே கருப்புப்பணத்தை ஒழிப்பதுதான் அரசு விருப்பம் என்றால் அதை பெருமுதலாளிகள்,அமைசர்கள்,அரசியல்வாதிகள்,திரையுலகை சேர்ந்தவர்களிடமிருந்துதான் மோடி ஆரம்பித்திருக்க வேண்டும்.

ஆனால் வழக்கமான தீவிரவாதிகள் தடுப்பை "சர்ஜிக்கல் ஸ்டைர்க் "என்று தனது மாவீரத்தனமான செயலாக காட்டிக்கொள்ளும் மோடி தொலைக்காட்சிகளில் நேரடியாகத்தோன்றி "இனி 500,1000 ரூபாயத் தாள்கள் செல்லாது .அவை இனி வெறும் காகிதம் "என்று சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு.அதன் பின்னர் அதை மாற்றிக்கொள்ளலாம் என்று மெதுவாக சொல்வது சரியானதா?ஒரு 120 கோடி மக்கள் உள்ள நாட்டின்   பொறுப்பான பிரதமரின் பொறுப்பற்ற அந்த பேச்சினால் இதுவரை ஐந்து ஏழைகளின் உயிர் போயுள்ளது.
இவர்கள் திருமணத்துக்கும்,விவசாயத்துக்கும்,கல்விக்கும் கந்து வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கி 1000,500 ரூபாய்களாக வீட்டில் வைத்திருந்த ஏழைகள்.

பிரதமரே தொலைக்காட்சியில் தோன்றி அந்த பணம் செல்லாது,வெறும் காகிதம்தான் இனி என்று கூறினால்?மாரடைப்பில் மூவரும்,தூக்கில் இருவருமாக மோடியரசால் "கொலை"செய்யப்பட்டுள்ளார்கள்.
பொறுப்பான பிரதமர் "ஜனவரி முதல் இந்த காகிதங்கள் செல்லாது.அதுவரை அவைகளை மாற்ற அரசு வழி செய்துள்ளது வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்" என்று பொறுப்பாக சொல்லியிருந்தால்...
இவை நடக்குமா?

பேருந்தில் ஏறியவர்கள் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.உணவு விடுதியில் முன்பு தொழுநோய்க்காரர்கள் உள்ளே வராதீர் என்பது போல் 500,1000 வைத்திருப்பவர்கள் உள்ளே வராதீர்கள் என்று பலகை அறிவிப்பு.
மளிகை சாமான்கள் வாங்கி அன்றாடம் உணவு சமைப்பவர்கள் பாடு அதை விட மகா கேவலம்.20 ரூபாய் அரிசி 15 கிலோ வாங்கிவிட்டு 500 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்து சில்லறை மறுக்கப்பட்டு,செல்லாத பணத்துக்கு இது  கிடைத்ததே என்று அழுது வந்தவர்கள் கணக்கு தெரியுமா ,அறிவிப்பை வெளியிட்ட கையோடு இன்று ஜப்பான் உல்லாசப் ப்யணத்தில் இருக்கும் மோடிக்கு?

இந்த அறிவிப்பு கள்ளப்பணத்தை வேண்டுமானால் தற்போது மட்டும் அல்லது பாகிஸ்தான் மீண்டும் அச்சடிக்கும் வரை தடுக்கலாம்.
ஆனால் கருப்புப் பணத்தை?
அவை எல்லாம் உரியவர்களுக்கு முன்பே தகவல்கள் போய் நகைகள்,தங்கக் கட்டிகள்,நிலங்களாக மாறிவிட்டன.அம்பானி,அதானி போன்ற பெரும் முதலைகள்,அமிதாப் போன்ற திரையுலக நாயகர்கள்,அரசியல்வாதிகள்,அமைச்சர்கள் பணங்கள் எல்லாம் ஏற்கனவே அயல் நாடுகளில் வங்கிகளிலும்,உல்லாச தீவுகள்,ஓட்டல்களாகத்தான் உள்ளன.

இதோ  பாஜக செய்தி தொடர்பாளரும் டெல்லி MP யும் ஆன மீனாட்சி லேகி பேசிய காணோலி அதில் , 'கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகச் சொல்லும் மத்திய அரசின் திட்டம் நிச்சயம் வெற்றிபெறப்போவதில்லை; மாறாக அவை புதிய வடிவில் இன்னும் பாதுகாப்பாகவே புழங்கப்படும். மோடியின் அறிவிப்பால் வங்கி கணக்கு வைத்திருக்காத 65% பாமர மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர்." என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பணத்தை இறக்க,மக்களிடம் புழக்கத்தில் கொண்டுவர,பழைய 500,1000ங்களை செல்லாததாக்க  பல வழிகள் உள்ளன.
மக்கள் புழங்கும் இந்தப்பணங்கள் கடைக்காரர்கள் மூலம் வியாபாரிகள்,மொத்த வியாபாரிகள் என்று அலைந்து கடைசியில் வங்கிக்குத்தான் வரும்.கருப்புப் பணம் மட்டுமே அன்பு நாதன் போன்றவர்கள் மூலம் கிடங்குகளுக்குப் போய் வெளிநாடு வங்கிகள்,தீவுகள் என்று மாறும்.

பொது மக்கள் மூலம் வங்கிகளை அடையும் 500,1000 தாள்களை அப்படியே வங்களில் முடக்கி விட்டு பணம் எடுப்பவர்களுக்கும்,ஏ.டி.ஏம்,களிலும்  புதிய கரன்சிகளை மூன்றாம் பேருக்கு தெரியாமல் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு தகவல்தராமல் புழக்கத்தில் விட்டு விட்டு,பழைய  கரன்சிகள் முந்தைய 2,5ரூபாய்,கிழிந்த ரூபாய் தாட்கள் போல் மக்களிடம் இருந்து மறைந்த பின்னர்,அரசு இனி 500,1000 செல்லாது .மாற்ற வேண்டியவர்கள் இத்தனை நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளுங்கள் என்றால் கருப்புப் பண முதலைகள் திணறும்.

கருப்பு இரட்டிப்பு வருமான வரியுடன் வெள்ளையாகும்.மற்ற கிடங்கு,கண்டெய்னர்கள் மக்கி கரையான் தின்னும்.
ரூ.14.18 லட்சம் கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30க்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டும். இது சாதாரண பணி அல்ல. 

இதனை நன்கு புரிந்து கொள்ள  சில உண்மை விபரங்களை அறிந்து கொள்ளவ்து அவசியம்.
 இன்று வங்கிகளிடம் உள்ள தொகை ரூ.76,000 கோடிகள் மட்டும்தான்.வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.9 லட்சம்கோடிகள். 

ஆனால் வங்கிகள் சில வாரங் களில் ரூ.14.18 லட்சம் கோடி மதிப்புள்ள பழையநோட்டுகளை வாங்க வேண்டும். 
அதே சமயத்தில் இதே அளவு உள்ள புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடவேண்டும். 
இந்த இமாலய பணியை செய்வதற்கு ஊழியர்கள் உட்பட வசதிகள் வங்கிகளிடம் உண்டா என்றால் இல்லை.

புதிய தாள்கள் அறிமுகம் செய்ய வேண்டும் எனில் சுமார் 2400 கோடி அளவிற்கு 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் தேவை. அதாவது 24 கோடி பண்டல்கள் தேவை. இவை ரிசர்வ் வங்கியிலிருந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆறு மாதங்களாக திட்டமிட்டதாக கூறப்படும் இந்த திட்டத்துக்கு இதுவரை போதிய அளவு ரூபாய் தாட்கள் அச்சிட்டு  வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை.ஏடிஎம் களிலும் வைக்கப்படவில்லை.நான்கு நாட்களாக ஏடிஎம்கள் மூடியே கிடக்கின்றன.
என்ன நிர்வாகம்,என்ன நடைமுறையாக்கம்.இதனால் பாதிக்கப்படுபவர்கள்.நடுத்தட்டு வர்க்கம்,பாமரர்களே.
ஆனால் இங்கு கருப்புப் பண முதலைகளுக்குத்தான் அரசின் ஆறு மாத திட்டமிடல் முதலிலேயே தெரிந்திருக்கிறது.அவர்களுக்கு அவகாசம் கொடுத்த பின்னரே பாமரர்கள் மீது மோடி தாக்குதலை தொடங்க்யிருக்கிறார்.

அதற்கு நல்ல உதாரணம்.இந்த மோடியின் வீரச்செயலை பாராட்டி அறிக்கை விட்டவர்கள் பெரும் பணக்காரர்கள்,அமிதா பச்சன்,ரஜினிகாந்த் போன்ற திரையுலக வருமானவரி சோதனைக்குட்பட்டவர்கள்தாம்.
எதிர்த்து பேசியவர்கள்,கண்டனம் பதிந்தவர்கள் பாமர மக்கள்,ஏழைகள்,ஒழுங்காக வருமான வரி கட்டும் மாத சம்பளக்காரர்கள்,அரசு ஊழியர்கள்.

இன்று கூலி வேலை,கொத்த வேலை பார்ப்பவர் கூலியாக 500,1000ங்களில்தானே ஊதியம் பெறுகிறார்கள்.
முதலில் மோடி கருப்புப்பண முதலைகளுக்கு எதிராக பெரும் முதலாளிகளை தனது நண்பர்களாக் கொண்டவர் அவர்களுக்கு எதிராகவே  கடும் நடவடிக்கை எடுத்துள்ளாரே என்று எண்ணியவர்களுக்கு தற்போது மோடி எடுத்திருக்கு நடவடிக்கை வழக்கம் போல் அவர்களுக்கு ஆதர்வாகவும்,கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராகவுமே அமைந்துள்ளது வெட்ட வெளிச்சமாகி யுள்ளது.

கருப்புப்பணமும் ஒழியாது.கள்ளப்பணமும் மறையாது.அசல் ரூபாய்தாள்களுக்கு குறையாமல்  கள்ளப்பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் பாகிஸ்தான் இந்த புதிய தாள்களை அச்சிட எத்தனை நாட்களாகிவிடும்.
சொல்லப் போனால் தற்போது மோடி அச்சிட்டு வங்கிகளுக்கு அனுப்புவதற்குள் பாகிஸ்தான் ஒஉழக்கத்தில் போலிகளை விட்டு விடும். அங்கிருந்து வருவதை தடுக்க வக்கில்லாத மோடி அரசு மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துகிறதா என்ன?

ஆனால் அதில் எரிவது கருப்புப்பண மூட்டை பூச்சிகள்அல்ல,எப்போதும் போல் அஞ்சுக்கும்,பத்துக்கும் அலைகிற மக்கள்தான்.
=====================================================================================
ன்று,
நவம்பர்-12.
  • ஆஸ்திரியா குடியரசானது(1918)
  • அஜர்பைஜான், அரசியலமைப்பு தினம்
  • சூடான், துனீசியா ஆகிய நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)
  • ஜெனீவா, ஐ.நா.,வில் இணைந்தது(1968)
  • இணைய வலை  திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)
=====================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?