நெருக்கடி,நெருக்கடி தேவையிலா நெருக்கடி!

அறிவிக்கப்படாத ஒரு அவசரகால நெருக்கடியைப் போல அனைத்தும் முடங்கிக் கிடக்கிறது. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ந் தேதி இரவில் இருந்து தூக்கத்தைத் தொலைத்து விட்டு, ஏடிஎம் வாசல்களில் காத்துக்கிடக்கிறது மக்கள் கூட்டம்.

நெல்லை மாநகரின் மிகப்பெரிய காய்கறிச் சந்தை பாளை மார்க்கெட். காய்கறி, பலசரக்கு என 500 கடைகள் உள்ளன. 
ஒரு நாளைக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வியாபாரம் 8ந் தேதிக்கு முன்பு வரை நடந்து வந்தது. இப்போது ஒரு நாளைக்கு 15 லட்சத்திற்கும் குறைவாகவே வியாபாரம் நடக்கிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை நடந்த கடைகளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை என வியாபாரம் கீழே விழுந்து படுத்துவிட்டது.
ஒரு நாளைக்கு 2000 தேங்காய் விற்ற தேங்காய் கடையில் இப்போது 800 கிலோ வரை தான் விற்பனை.

காய்கறி விலை குறைந்ததால் வந்த விலைக்கு விற்று விவசாயிகளே முழு பாரத்தையும் சுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உருளைக்கிழங்கு வரவில்லை. ஊட்டியில் இருந்து கேரட்டும் வரவில்லை. அங்கேயே அழுகிக் கிடக்கின்றன. மோடியின் மூக்கை எட்டவில்லை அதன் நாற்றம்.

l ஜவுளி விற்பனை 60 சதவீதம் குறைந்து விட்டது. சங்கரன்கோவிலில் உற்பத்தியான ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் தேங்கி கிடக்கிறது. சிறு தொழில் முட்டுச்சந்தில் முட்டி நிற்கிறது. 
இதே நிலை நீடித்தால் கதவடைப்பு செய்வதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் விசைத்தறி உற்பத்தியாளர்கள்.

நெல்லையில் சில பஞ்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. 
ஆலங்குளம் மெயின் பஜாரில் டீக்கடைக்காரர் சொல்கிறார், ‘ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் வரை ஏவாரம் நடந்துச்சி, இப்ப நானூறு ஐநூறுக்கு ஒடுறதே திண்டாட்டமா இருக்கு, இப்பிடி போனா கடை வாடகை, வேலையாள் சம்பளம் எப்பிடி கொடுக்க’. தெருவோரக் கடைகள் தெருவுக்கே போனது போல் ஆகிவிட்டது.

செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு போகும் பேருந்து ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வரை கொண்டு வந்து சேர்க்கும். இப்போது 8 ஆயிரத்தை தாண்ட மறுக்கிறது. காலையிலும், மாலையிலும் புல் லோடில் போன வண்டிகள் இப்போது காத்தாட பாதி பயணிகளோடு போய் வருகின்றன. ஞாயிறன்று (நவ. 20) நல்ல முகூர்த்தம். ஆனாலும் பஸ்சில் கூட்டமில்லை.

திருமண ஏற்பாடுகளும் சிக்கலில் கிடக்கிறது. வேட்டி இல்லை என்றால் சட்டை என்று சொந்தங்களுக்கு ரேசன் முறையில் உடை எடுத்து சமாளித்தாலும், இந்த நிமிடம் வரை ரூ.2.5 லட்சம் எடுக்க வங்கிகளுக்கு உத்தரவு வந்து சேரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணினியில் பட்டனை அடிக்க முடியவில்லை; நான் என்ன செய்ய என்கிறார் பழைய 50 ரூபாய் நோட்டுக்களை எண்ணியபடி வங்கி உதவி மேலாளர்.

பீடிக் கம்பெனிகளில் வாரச்சம்பளம் போட பல லட்சம் தேவை. ஆனால் பணம் எடுக்க முடியாது. சில கம்பெனிகள் தொழிலாளர்களது வங்கிக் கணக்கில் பணத்தை போட்டுள்ளனர். பிடித்தம் போக 600 ரூபாயை எடுக்க ஏடிஎம்ல் பட்டனை அழுத்த ஒரு நோட்டும் வர மறுக்கிறது. ஒன்லி 2 ஆயிரம் மட்டும் தான் வருமாம்.
சில கம்பெனிகளில் பழைய 500 ரூபாய் நோட்டை தருகிறார்கள். 
அதை தொழிலாளிகள் மாற்றுவதற்கு அல்லோலகல்லோலப்படுகிறார்கள். கஞ்சாவை மறைப்பது போல 500 ரூபாய் நோட்டை மறைத்துக் கொண்டு அலைகிறார்கள். 
 500 ரூபாய் நோட்டை வைத்திருந்தால் போலீஸ் பிடிக்கும் என இன்று இரவு மோடி அறிவிக்க கூடும். எவனுக்குத் தெரியும்!

பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் ஷட்டரை கீழ் வரை இழுத்து மூடிக்கிடக்கின்றன. திறந்து இருந்தால் 2 ஆயிரம் மட்டுமே வருகிறது.

தலையை பிய்த்துக் கொண்டு அலைகிறது பொதுஜனம். நிற்க, நிலைமை இவ்வாறு இருக்க, மணல் லாரி தங்கு தடையின்றி ஓடிக்கொண்டு இருக்கிறது. தியேட்டரில் வெறும் வெள்ளைத் தாளை கொடுத்து பண வசூல் நடக்கிறது. பாளையில் ஒரு பெட்ரோல் பங்கில் 200 ரூபாய் கொடுத்தால் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டார்கள். ஆனால் யாரும் பிடிபடவில்லை. போலீஸ் வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறது; ஒரு வலை தான் இருக்கும் போல!

கட்டுமானத் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். கிராமங்கள் ஓரமாய் நிறுத்தப்படும் டிராக்டரைப் போல சோம்பிக் கிடக்கிறது. மோடி விறுவிறுப்பாய் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்.

முதலைகள் தப்பித்து விட்டன. அயிரை மீன்கள் செத்துக் கொண்டு இருக்கின்றன.

                                                                                                                                        -கே.ஜி.பாஸ்கரன்
 
இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.  கடந்த சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சென்னை ஆர்.கே.சாலையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

சிறந்த இசையமைப்பாளர் மற்றும்  பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும்  பெற்றவராவார். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி  போன்ற பட்டங்களுக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

வயலின், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பதிலும் பரீட்சயம் கொண்டவராகத் திகழ்ந்தார். பாலமுரளி. அத்துடன் சுமார் 400 இற்கு மேற்பட்ட பாடல்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=20816#sthash.mpOrVaG9.dpuf

ர்நாடக இசை பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்படும் பாலமுரளிகிருஷ்ணா ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர்.
தன் பெற்றோர்களிடம் இசை பயின்ற முரளிகிருஷ்ணா, பின்னர் முறையாக சங்கீதம் பயின்று தனது எட்டாவது வயதிலேயே பொது மேடையொன்றில் தனது முதல் கச்சேரியை நடத்தினார். 
 அந்த கச்சேரியில் அவர் பாடல் திறனை மெச்சி, அவருக்கு ‘பால’ என்ற அடைமொழி வழங்கப்பட்டது.
அகில இந்திய வானொலியுடன் இணைந்து 60களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா தனது பக்திப் பாடல்களுக்காக அப்போது பிரபலமாக அறியப்பட்டார். 
 முதலில் விஜயவாடா , பின்னர் ஹைதராபாத் வானொலி நிலையங்களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா, பின்னர் சென்னை அகில இந்திய வானொலியிலும் பணியாற்றி, சென்னையிலேயே குடி பெயர்ந்தார்.
உலகெங்கும் பல ஆயிரக்கணக்கான கச்சேரிகளை பாலமுரளிகிருஷ்ணா நடத்தியிருக்கிறார்.
 ஏராளமான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
1978ல் அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. 
பின்னர் 1991ல் இந்திய அரசின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் பட்டமும், பிரெஞ்சு அரசின் செவாலியர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
பக்தப் பிரகலாதா என்ற தெலுங்குப் படத்தில் பாலமுரளிகிருஷ்ணா முதலில் நடித்தார்.
 தமிழ்த் திரைப்படங்களில் அவர் பல பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
உலக நாயகன் கமல்ஹாசன் பாலமுரளி கிருஷ்ணாவிடம்தான்  பாடக்  கற்றுக்கொண்டார்.
திருவிளையாடல் படத்தில் அவர் பாடிய ‘ஒரு நாள் போதுமா’ பாடல் மிகப் புகழ் பெற்றது. கலைக்கோயில் படத்தில் சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ , நூல் வேலி படத்தில் அவரது ‘ மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’ , கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ போன்ற பாடல்கள் பெரிய அளவில் மக்களை கவர்ந்தது . 
தற்போது அவரது வயது 84,
இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.  கடந்த சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சென்னை ஆர்.கே.சாலையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

சிறந்த இசையமைப்பாளர் மற்றும்  பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும்  பெற்றவராவார். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி  போன்ற பட்டங்களுக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

வயலின், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பதிலும் பரீட்சயம் கொண்டவராகத் திகழ்ந்தார். பாலமுரளி. அத்துடன் சுமார் 400 இற்கு மேற்பட்ட பாடல்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=20816#sthash.mpOrVaG9.dpuf
===================================================
==========
ன்று ,
நவம்பர்-23.

  • கவிஞர் சுரதா பிறந்த தினம்(1921)
  • அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது(2007)
  • முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது(1936)
===================================================
===========

கருப்பில்லாத பணம் பறி முதல் என்பதுதான் மோடியின் இந்த மக்கள் பணப் பறிமுதல் திட்டத்துக்கு சரியான பெயராக இருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?