தற்காலிக நிறுத்தி வைப்பு மட்டுமே!
இன்றைய தமிழ் இந்துவில் வந்திருக்கும் தா. பாண்டியனின் பேட்டி..
ஈழ வியாபாரிகள் சிலர் திமுக மீதும்,கலைஞர் மீதும் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் இப்பேட்டி என்பதற்காக தான் இந்த பதிவு !
?விடுதலைப்புலிகள் செய்த தவறுகள் குறித்து அந்த இயக்கத்தில் இருந்தவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ராஜீவ் கொலையான சம்பவத்தில், நூலிழையில் உயிர் பிழைத்தவர் நீங்கள். விடுதலைப்புலிகள் என்ன செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
! ஒன்றை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறேன்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தவறு பற்றி முழு உண்மை தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மொத்தமே மூன்று பேர்தான்.
கலைஞர், முரசொலி மாறன், நான்.
இதுபற்றி கலைஞரே எழுதிய கட்டுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முரசொலியில் வந்துள்ளது. பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தன்னையும், முரசொலி மாறனையும் கடைசிக் கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, “விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத்தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்.
இந்தியா முழு வாக்குறுதி தருகிறது” என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார்.
அது உண்மைதான். ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம்.
முரசொலி மாறன் இப்போது இல்லை.
நான் மட்டுமே.
கலைஞர்தான் கலந்துகொண்டவர். “கலைஞரிடம் ராஜீவ் சொன்னார். அதை விடுதலைப்புலிகளிடம் சொல்லச் சொன்னார்.
கலைஞர் சொன்னாரா?
அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா?
ஏற்றுக்கொண்ட பிறகுதான் ராஜீவைத் திட்டமிட்டுக் கொன்றார்களா?” என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு கலைஞருக்கு உண்டு.
அவர் சொன்னால்தான் 25 ஆண்டுகாலக் குழப்பத்தில் தெளிவு ஏற்படும்.
ஆனால்,அவர் சொல்லத் தயங்குகிறார். பிரபாகரன் ,விடுதலைப்புலிகள் மீது அவப்பெயர் உண்டாக்கும் என எண்ணுகிறார்.
இலங்கை மக்கள் மீது தமிழக மக்களுக்கும்,
உலக மக்களுக்கும் இருக்கிற கொஞ்ச நஞ்ச அனுதாபமும் இத்தகைய செய்திகளை நாம் வெளியிடுவதால் பாழ்பட்டுவிடுமோ என்று அவர் அஞ்சுகிறார்.
“பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதைப் பற்றித்தான் இப்போது யோசிக்க வேண்டும்”என்று ரொம்பவே உருக்கமாக என்னிடம் சொன்னார்.
இதிலிருந்து ராஜீவ் சொன்னதை கலைஞர் விடுதலைப்புலிகளிடம் கூறி பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்று தெரிகிறது.
பிரபாகரன் செய்த தவறு அது.அத்தவறு விடுதலைப்புலிகளை மட்டுமல்ல அவரையே இல்லாமல் செய்து விட்டது.ஆனாலும் கலைஞர் இப்போதாவது உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அவர் மீது ஈழ வியாபாரிகள் பழ,நெடுமாறன்,சைமன் ,வைகோபால்சாமி போன்றோர் கூறி வரும் கரையை போக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
=======================================================================================
சிறுவாணி:
அட்டப்பாடி அணை.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அட்டப்பாடி அணைக் கட்டுவது தொடர்பான “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை வழங்கலாம்” என்று “சுற்றுப் புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக்குழு” அளித்த பரிந்துரையை தற்போதைக்கு நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் நிரந்தரமாக அனுமதி மறுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாக இருக்கிறது.
காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு முடிவுறும் வரையிலோ அல்லது தமிழக அரசின் அனுமதி பெறும் வரையிலோ இந்த வல்லுநர் குழுவின் பரிந்துரையை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக (Kept in Abeyance) மட்டுமே மத்திய அரசு தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது நெருடலாகவே இருக்கிறது.
கேரள மாநிலம் சிறுவாணையின் குறுக்கே அணைக் கட்ட அனுமதி அறவே கிடையாது என்று கூறுவதற்கு பதில் “அனுமதி கொடுப்பது” நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,
அதுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
“காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு நாட்களில் அமைக்கிறோம்” என்று முதலில் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, அந்த கெடு முடியும் தருவாயில் அதே உச்சநீதிமன்றத்தின் முன்பு வேறொரு மனுவை தாக்கல் செய்து “காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது ” என்று கர்நாடக மாநிலம் தொடர்பான அரசியல் காரணங்களுக்காக கை விரித்தது மத்திய பாஜக அரசு.
தமிழக விவசாயிகளுக்கு விரோதமான இந்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாய கூட்டமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.
காவேரி குறித்து விவாதிக்க ஆளும் அதிமுக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முன்வராத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தீர்மானமே நிறைவேற்றி யிருக்கிறது.
ஆகவே, தமிழக நலனை மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்று விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கடுங்கோபத்தை தணித்து திசை திருப்பும் பொருட்டு சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்டும் விவகாரத்தில் “வல்லுநர் மதிப்பீட்டுக் குழு” அறிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு.
“சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு அனுமதி கிடையாது” என்று ஒரு வரியில் கொடுக்க வேண்டிய உத்தரவிற்கு பதில் இப்படி சுற்றி வளைத்து “அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று மட்டும் மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழக விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகிறேன்.
“காவேரி மேலாண்மை வாரியத்தில் தமிழக விவசாயிகளை நம்ப வைத்து கை விட்டது போல் சிறுவாணி அணை விவகாரத்திலும் கை விடுவதற்கு” இந்த உத்தரவு ஒரு முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகமே எழுகிறது.
ஆனால் அதிமுக தலைமையில் உள்ள தமிழக அரசோ சிறுவாணியில் ஏதோ சாதித்து விட்டது போல் எட்டுப்பக்கம் பத்திரிக்கைச் செய்தியாக வெளியிட்டு தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
சிறுவாணி பிரச்சினை எழுந்தவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் கோவையில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தி அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
2.9.2016 அன்று தமிழக சட்டப் பேரவையில் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்தது. அதே போல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன.
இதற்கிடையில், "மதிப்பீட்டுக் குழுவின் 92வது கூட்டத்தில், தமிழக அரசின் இசைவுடன் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், 96வது கூட்டத்தில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றே, கேரள அரசுக்கு அணைகட்ட அனுமதி கொடுத்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அதிகாரிகளோ அல்லது தமிழக அரசு அதிகாரிகளோ கேரள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர்.
அவர்களைக் கண்டுபிடித்துக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழுக்கைப்பாறை பாலு அவர்களும், பொதுச்செயலாளர் கந்தசாமி அவர்களும் நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள தகவல்கள் கடுமையானவை; அலட்சியப் படுத்திடக் கூடியவை அல்ல. ஆகவே, அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும் அதிமுக அரசுக்கு இருக்கிறது.
“சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட” மேற்கொள்ள வேண்டிய ஆய்வு குறித்த பரிந்துரையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதை நினைத்து தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல், அங்கே அணை கட்ட கேரள அரசுக்கு நிரந்தரமாகவே அனுமதி மறுக்கும் உத்தரவை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
“அணை கட்ட நிரந்தரமாக அனுமதி மறுப்பது ஒன்றே” சிறுவாணி ஆற்றை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகளுக்கும்- குறிப்பாக கொங்கு மண்டல விவசாயிகளுக்கும், கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கும் நிரந்தர தீர்வாக அமையும் என்பதால் “சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்ட கேரள அரசுக்கு அனுமதி கிடையாது” என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
-மு.க.ஸ்டாலின்
====================================================================================
இன்று,
நவம்பர்-06.
இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, ஜப்பானை ஒடுக்க ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி இரண்டு அணு குண்டுகளை வீச முடிவு செய்தது.
இன்று,
நவம்பர்-06.
- டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
- போலந்தில் 2வது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)
- எட்வின் ஆம்ஸ்ட்ராங், எஃப்.எம்., ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)
- புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)
- தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)
புளூட்டோனியம்
யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கி புளூட்டோனியம் உருவாக்கப்படுகிறது. புளூடோனியத்தின் அணு எண் 94 ஆகும்.
1940-ம் ஆண்டில் பெர்கெலி, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' உதவியின் மூலம் புளூடோனியத்தை உருவாக்கினார். புளூடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, ஜப்பானை ஒடுக்க ஒரு திட்டம் தீட்டியது.
அதன்படி இரண்டு அணு குண்டுகளை வீசயுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கி புளூட்டோனியம் உருவாக்கப்படுகிறது. புளூடோனியத்தின் அணு எண் 94 ஆகும்.
1940-ம் ஆண்டில் பெர்கெலி, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் 'சுழல் விரைவாக்கியில்' உதவியின் மூலம் புளூடோனியத்தை உருவாக்கினார்.
புளூடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c.
இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா, ஜப்பானை ஒடுக்க ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி இரண்டு அணு குண்டுகளை வீச முடிவு செய்தது.
இதற்கு பயன்படுத்த புளூட்டோனியத்தை 1944-ம் ஆண்டு நவ.6-ந்தேதி அமெரிக்கா உருவாக்கியது.
====================================================================================