இந்தியா ஆரம்பம்.

 * இந்திய வானிலை ஆய்வு மையம் மஹாராஷ்ட்ராவின் புனேவுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது. அங்கு அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

* சதுரகிரி வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் பற்றி எரியத் தொடங்கிய காட்டுத்தீ, இன்று ஓரளவு கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. 

* யமுனை ஆற்றில் தண்ணீரின் அளவு அபாயகர அளவில் இருந்து இன்று காலை குறைந்தது. ஆற்றில் தண்ணீரின் அளவு 205.25 மீட்டராக உள்ளது

I.N.D.I.A.

2024ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றன. 

கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நேற்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

ஏற்கெனவே காங்கிரஸ் தலைமையில் இருந்த பழைய கூட்டணியின் பெயரான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) என்பதற்கு பதில் புதிய பெயரை வைப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. 

இந்த கூட்டணிக்கு இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், இந்தியாவை காப்போம் கூட்டணி (SAVE INDIA ALLIANCE) அல்லது மதசார்பற்ற இந்திய கூட்டணி (SECULAR INDIA) என்ற பெயரை விசிக தலைவர் திருமாவளவனும் முன்மொழிந்து இருந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து பரிதுரை செய்யப்பட்ட இந்தியா (I.N.D.I.A - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் கூட்டணிக்கு பெயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மோடிக்கு எதிராக இந்தியா ஒருங்கிணைந்து உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இக்கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடத்தவும் 'இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீகாரிலும் இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவது கூட்டத்தை பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடத்த முடிவு செய்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதைவிட அதிகமாக 

எதிர்பார்க்கிறோம்.

* பெங்களூருவில் நடந்த இரண்டுநாள் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், உங்கள் வாழ்த்துகள் உடன் கூட்டம் சிறப்பாக அமைந்தது. இந்தியாவின் ஜனநயகம் அரசியல் அமைப்பு சட்டம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களின் நலன் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கத் தவித்து வருகிகிறது.

அதனால் மத்தியில் உள்ள பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது.

பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகளும், பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் 26 கட்சிகளும் கலந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டை போல் இந்தியா முழுவதும் கூட்டணி அமைந்து வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பாட்னாவிலும், பெங்களூவில் நடந்த கூட்டத்தை பொறுத்தவரை எனக்கு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இது எனக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரும் என்ற நம்பிக்கையை நாடு எதிர்பார்த்து காத்து இருக்கிறது.

இந்த இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். 2024 புதிய இந்தியாவுக்கான ஆண்டாக அமையும்

திமுக அமைச்சர்கள் அமுலாக்கத்துறையால் குறி வைத்து தாக்கப்படுவது எதிர்பார்த்த ஒன்றுதான்; தி.மு.கவைக் கண்டு மோடி,அமித் சா மிகவும் பயப்படுகிறார்கள்.

இன்னும் போக போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம்.

பாஜக கூட்டணியில் உள்ளவர்களின் வழக்குகளை கண்டும் காணாமல் உள்ளதே பிரதமரை பொறுத்தவரை நியாமானது.

இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பக்கத்தில் யார் யாரை உக்கார வைத்துள்ளார் பார்த்தீர்களா?

2000 கோடிகள் ஊழல் செயதவர் என போன மாதம் அவரால் குற்றம்சாட்டப்பட்ட அஜித்பவார்,4800கோடிகள் எடப்பாடியார் என அனைவரையும் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே போகராம்.

 அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் அவர் பக்கத்தில் அமர வைத்துள்ளார். அவர் எங்களை ஊழல்வாதிகள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.

-
----------------------------------

AI பறிக்கும் வேலைகள்.

மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருக்கிறது.

அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் செய்ய வேண்டிய மென்பொருள் வேலைகளை அந்நாடுகள் இந்தியாவிற்கு தந்து விடுகிறது. அவுட்சோர்ஸிங் எனப்படும் இந்த முறையில் இங்குள்ள பணியாளர்களின் ஊதிய விகிதம் அங்குள்ளவர்களை விட பெருமளவு குறைவாக இருப்பதால் அங்குள்ள நிறுவனங்களுக்கு இதனால் பெரும் லாபம் கிடைத்து வந்தது.

தற்போது இந்த துறையில் உள்ள பல பணிகளை செயற்கை நுண்ணறிவை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

 இதனால் இந்தியாவின் பெரும்பாலான வேலைகள் அழிந்து விடும் என்றும் குறிப்பாக "கோடர்கள்" அல்லது "புரோகிராமர்கள்" தங்கள் வேலையை இழக்க நேரிடும் .

 பல்வேறு வகையான வேலைகளை வெவ்வேறு வழிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதிக்கிறது. ஒரு கணினியின் முன் அமர்ந்து ஒருவர் செய்யும் வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால், அது மிகப் பெரிய தாக்கம் என்று கூற வேண்டும். 

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் திறமையான பட்டதாரிகளைப் போல செயலாற்றும். 

ஆனால் அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள். 

வலுவான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட பிரான்ஸ் போன்ற நாடுகளில் தாக்கம் குறைவாக இருக்கும்.

 உதாரணமாக, இந்தியாவில் "லெவல் 3" வரையிலான கோடர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லாமல் போய்விடுவார்கள். 

ஆனால் பிரான்ஸ் போன்ற நாடுகளில், ஒரு டெவலப்பரை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல.அவர்களுக்கு அந்த அளவிற்கு அரசுச்  சட்டப் பாதுகாப்பு உள்ளது.

இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமாக மென்பொருள் புரோகிராமர்கள் உள்ளனர். அவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறுவு கருவிகளான சாட்ஜிபிடி போன்றவற்றின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு கிடையாது.அரசு கார்பரேட்களுக்கேவபாதுகாப்பு சலுகைகளை கொடுக்கிறது.தொழிலாளர் நலன் பா.ஜ.க. ஆட்சியில் சுழியம் 0தான்

 ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளை வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக இது திகழ்ந்து வருகிறது.

 அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

---------------------------------------






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?