பத்தாண்டுக்குப் பின்

 அமைச்சர் பொன்முடி இன்று மாலை ஆஜராக சம்மன். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி இன்று மாலை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்.

நேற்று காலை முதல் நள்ளிரவு வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி ஆகியோர் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாவல் ஊத்து பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக தரிசனத்துக்கு சென்ற சுமார் 3000 பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. வயது79.உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் .

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில் இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்திரவு.

எதிர்க்கட்சிகள் 2வது நாளாக பெங்களூருவில் இன்று ஆலோசனை. பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்; குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பது குறித்து, இன்று முக்கிய ஆலோசனை.

வெயிலின் தாக்கத்தால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதீத வெப்ப அலை. ஆண்டுதோறும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போவதால் அதிர்ச்சம்.

-
-----------------------------------------------

உம்மன் சாண்டி.


கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.

கடந்த சில நாள்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்துள்வந்தார்.

கிச்சை பலனின்றி அவர் காலமானார்.

கேரளா மாநிலத்தில் 2004- 2006, 2011 - 2016 என இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார் உம்மன் சாண்டி. கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உம்மன் சாண்டி. 

கடந்த 1970ஆம் ஆண்டில் முதன் முதலாக கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது முதல் தொடர்ந்து 52 ஆண்டுகளாக அந்ததொகுதியின் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

உம்மன் சாண்டிக்கு வயது தொடர்பாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொண்டை பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது உடல்நல பிரச்னை ஏற்பட்ட நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

-----------------------------------------

பத்தாண்டுக்குப் பின்

தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி.

 கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் வானூர் அருகே உள்ள செம்மன் குவாரி ஏலத்தில், தனது உறவினருக்கு உரிமம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான் புகார் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம் சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தினர்..

இந்த சோத.னையில் முடிவில் , பொன்முடிக்கு சம்மன் அனுப்பு அமலாக்க துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்துக்கு நேற்று இரவு 8 மணியளவில் அழைத்து செல்லப்பட்ட பொன்முடியிடம் இன்று அதிகாலை வரை விசாரணை நடைபெற்றது..

 இதையடுத்து 7 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கதுறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று அதிகாலை 4.30 க்கு அவர் வீடு திரும்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்பொன்முடிகைதுசெய்யப்படவில்லை என அமலாக்கதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவியை தொடர்ந்து எதிர்த்து வந்ததால் ஜெயல்லிதா காலத்தில் போடப்பட்ட வழக்கிற்கு பத்தாண்டுகளுக்குப்பின் தற்போது அமைச்சர் பொன்முடி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

72 வயதாகும் பொன்முடியை நள்ளிரவில் விசாரித்தது மனித உரிமை மீறல் என வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.மனித உரிமை ஆணையத்திடம் தெரிவிக்கப்போவதாகக் கூறினர்

 அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொறுமையாக பதில் அளித்தார். 

இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது என திமுக  வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------

பெங்களூர்- டெல்லி

இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கிறது.

இதில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அதேபோல், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம், இன்று புதுடில்லியில் நடக்க உள்ளது. 

இதில் பங்கேற்க, தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அ.தி.மு.க., சார்பில் கலந்து கொள்ள பழனிசாமி, இன்று காலை புதுடில்லி செல்கிறார். 

அங்கு மாலையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை காலை, சென்னை திரும்ப உள்ளார்.

அ.தி.மு.க.,வின் நிபந்தனைகளை எடுத்துரைத்து, அதை ஏற்றால் மட்டுமே கூட்டணி என்பதை, பா.ஜ., மேலிடத்திடம் தெரிவிக்கும்படி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை அளித்துஉள்ளனர்.

 அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும் என, கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் விரும்புகின்றனர்.

அதேநேரம், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், சி.வி.சண்முகம், ஜெயகுமார் போன்றோர், பா.ஜ., கூட்டணிக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு, பழனிசாமி பங்கேற்க செல்லும்போது, பா.ஜ., தலைமையிடம், சில விஷயங்களை தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, செல்லும் இடங்களில் எல்லாம், தி.மு.க., மீது குற்றச்சாட்டுகளை சொல்லும்போது, அ.தி.மு.க.,வையும் சாடுகிறார்.ஊழல் முறைகேடுகளைக் கூறுகிறார்.திமுக ஆட்சியில் அதை சாடி அதிமுக பேசும் போது அன்னாமலை அதிமுக ஊழல் முறைகேடுகளைக் கூறி மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்.

இதை நிறுத்த வேண்டும் என்பதை, உறுதிபட தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை, 'சீட்' ஒதுக்கீடு செய்வது என்பதை, அ.தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும்; பா.ஜ., அதில் தலையிடக் கூடாது.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் தரப்புடன், எந்த உறவும் வைத்து கொள்ளக் கூடாது.

அ.ம.மு.க.,வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது. இதற்கு உடன்பட்டால் கூட்டணி. இல்லையெனில், நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து, அதற்கு ஒப்புதல் பெறுங்கள் என, ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

அதேநேரம் பா.ஜ., கூட்டணியை ஆதரிக்கும் நிர்வாகிகள், 'மத்தியில் பா.ஜ., தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலை உள்ளது. கூட்டத்தில் என்ன முடிவெடுக்கின்றனரோ, அதற்கேற்ப நம் நிலைப்பாட்டை எடுப்போம். 

நாமே கூட்டணியை முறிக்கும் முடிவுக்கு செல்ல வேண்டாம்'.அது நமக்கு ஆபத்தைத் தரும்.நம் மீது ஏகப்பட்ட குற்றசாட்டுகள் ஆதாரத்துடன் அமித் சா கையில் உள்ளது என்று கூற அதையே ஆமோதித்து  பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.

--------------------------------------

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் இன்று உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்படுகிறது. 

அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியத்தில் ரூபாய் 4800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரியும் , திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

-----------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?