கடிவாளம் தேவை
சந்திரயான் – 3 ராக்கெட்டை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், விண்ணில் ஏவுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய இறுதிகட்ட பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும்.
அவை 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்தது.
• சூடானின் இடப்பெயர்வு முகாமில் தங்கியிருந்த 13 குழந்தைகள் அம்மை நோய்க்கு உயிரிழப்பு
• பாஜகவின் பி டீமாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செயல்படுகிறார் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அவரது ஆட்சியில் மக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லையென ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
• மகாராஷ்ட்ர அரசியலில் திடீர் திருப்பமாக ஷிண்டே அமைச்சரவையில் துணை முதலமைச்சரானார் அமித்ஷாவால் 2000 கோடி ஊழல் செய்தவர் என குற்றம்கூறப்பட்ட தேசீயவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜித்பவார். அவருடன் சில எம்எல்ஏக்கள் பாஜக அணிக்கு தாவியதால், தேசியவாத காங்கிரசில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பின்பற்றி ராஜஸ்தானிலும் பட்டியலினத்தைச் சேர்ந்த 17 பேர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 8 பெண்கள் முதல்முறையாக நியமித்த அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
•முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்கிறார். முக்கிய திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.
• காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இனறு முதலமைச்சரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன். டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியத்தை அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
• தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரேஷனில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யலாமா என்பது குறித்து இன்று ஆலோசனை நடக்கிறது.
• தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை சிவக்குமார் உள்ளிட்ட யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேகதாதுவில் கர்நாடகா ஒருபோதும் அணை கட்ட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
----------------------------------
மகாராட்டிராவின் தேசியவாத காங்கிரசு கட்சியில் இருந்து 9 சட்டமன்ற உறுப்பினர்களோடு விலகி பாஜக தலைமையிலான ஏக்னாத்சிண்டே அமைச்சரவையில் அசீத்பவார் துணை முதல்வராக பதவியேற்று இருக்கிறார். அவருடன் பாஜக கூட்டணியில் இணைந்த முஷ்ரீப், பூஜ்பல் படேல் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துகள்அமலாக்கத்துறையின் வழக்குகளில் இணைக்கப்பட்டிருப்பதோடு அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் இணைந்த உடன் அமலாக்கத்துறை வழக்குகளும் , ஊழல் குற்றச்சாட்டும் மாயமாய் மறைந்துவிடுகறது என்பதுகவனிக்கப்பட வேண்டியது.
சிபிஎம் இன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்டாசு ,அசீத் பவாரின் கட்சித் தாவல் கூட்டணியை ''அமலாக்கத்துறை( ED ) பாஜகவின் Election Department இன் செய்வினை எனத் தெளிவாக குற்றாய்வு செய்துள்ளார்.
நாடு முழுவதும் அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளை ஒடுக்க விலைக்கு வாங்கப் பயன்படுகிறது என்ற குற்றச்சாட்டு மேலும் மேலும் உறுதியாகி வருகிறது.
தமிழ்நாட்டிலும் செந்தில்பாலாஜியை முன்வைத்து ஒரு பிரிவை உருவாக்கப் போகிறோம் என்று வாயடித்த பாஜக இன்று செந்தில் பாலாஜியின் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது.
ஒன்றிய அரசையும் அதன் கைப்பாவை அமைப்பான அமலாக்கத்துறையையும் புனிதத் திருவுருக்களாக முன்வைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையை நிகழ்வுகள் சுட்டுகின்றன.
------------------------------------------
கடிவாளம் தேவை
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அளித்த பேட்டியில், " தமிழ்நாடு ஆளுநர் ஆர்,என் ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போட வேண்டும். கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அமைச்சர் செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, பாஜகவைபோல் அவர் செயல்படுவதையே காட்டுகிறது;
அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியுள்ளதால், தனது முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார்.
மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது என செயல்படுகிறார்.
தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
----------------------------------------
சந்திராயன்-3
இந்தியாவின் சந்திரயான் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவில் ஒரு தொடர் கனவு திட்டம் ஆகும். முதல் நிலா ராக்கெட் சந்திரயான் – 1, 2008ல் ஏவப்பட்டது.
அது நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.
2019ம் ஆண்டு சந்திரயான் – 2ம் நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், அதன் லேண்டர் மட்டும் மென்பொருள் பிரச்சனையால் சரியாக நிலைநிறுத்தப்படவில்லை.
சந்திராயன் – 3ல் சுமையை ஏற்றும் பணியை இஸ்ரோ மே மாதத்தில் துவங்கியது.
ஏவுவதற்கு குறிக்கப்பட்ட நாளில் ஏவ நடவடிக்கை எடுக்கப்படும் .
இஸ்ரோவின் பெங்களூரில் உள்ள ஆய்வு மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ஏவுவதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
Chandrayaan 3 : சந்திரயான் – 3 ராக்கெட்டை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், விண்ணில் ஏவுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய இறுதிகட்ட பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும். அவை 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் .
சந்திரயான் – 3 ராக்கெட்டை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் இஸ்ரோ தற்போது இறுதிகட்ட பரிசோதனைகளில் வேகம் காட்டி வருகிறது .
விண்கலம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது.
அதில் ஏற்றப்பட வேண்டிய சுமைகளும் ஏற்றி முடிக்கப்பட்டுவிட்டன .
வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏவும் பணிகளுக்கான கண்காணிப்பு நடைபெறும் என்று இஸ்ரோ சேர்மன் சோம்நாத் தெரிவித்தார்.
சந்திரயான் – 3ல் உள்நாட்டு லேண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. புரொபல்சன் தொகுதி மற்றும் ரோவர் உள்ளது. கிரகங்களுக்கு இடையேயான செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்களை வளர்ப்பது மற்றும் விளக்குவது என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
லேண்டர் மென்மையான தரையிறங்கும் திறன் கொண்டது.
நிலவின் குறிப்பிட்ட இடத்தில் இறங்கும் வகையிலும், ரோவரை நிலைநிறுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் நிலவில் தங்கும் காலத்தில் அது வேதியியல் ஆய்வுகளை மேற்கொள்ளும். லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் நிலவின் பரப்பில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு தேவையான சுமையை எடுத்துச்செல்லும்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் – 3 ஏவப்படும்.
நிலவின் வட்டப்பாதையில் 100 கிரோ மீட்டர் வரை லேண்டரையும், ரோவரையும் புரொபல்சன் மாட்யூல் எடுத்துச்செல்லும்.
இந்த ஏவும் வாகனம், வாகன பொருத்தும் இடத்தில் இருந்து ஏவுதளத்துக்கு அடுத்த வாரத்தில் மாற்றப்படும் .
வரும் 13ம் தேதி சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.
-----------------------------------
உடல் தரும் வியப்பு
41. மனிதர்களின் உடலில் உள்ள கொழுப்பை வைத்து 7 சோப்பு கட்டிகளைத் தயாரித்து விடலாமாம்.
42. பிராணவாயு சப்ளை நின்ற பிறகும் மூளை மூன்றிலிருந்து ஆறு நிமிடங்களுக்குச் செயல்படுமாம்.
43. மனிதர்கள் சிசுவாக இருக்கும் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அவர்களது கைரேகைகள் உருவாகின்றன. முதல் மூன்று மாதங்கள் ஆனபின் முழுமையாக வளர்ச்சியடைந்த நிரந்தரமான கைரேகைகள் உருவாகிவிடுமாம்.
44. உங்கள் உடலில் மிகவும் வலுவான சதை உங்கள் நாக்கு. நாக்கில் எட்டு அடுக்கு தசைகள் உள்ளன.
45. எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு உத்வேக சக்தி இருக்குமாம். இது ஒருவர் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டால் அந்த சக்தி வெளிப்பட்டு போராடி காப்பாற்ற வைக்குமாம்.
46. மனித உடலில் சில பாகங்கள் ஒருமையாகவும் சில இரண்டாகவும் இருக்கும். ஆனால் இரண்டாக அமைந்துள்ள பாகங்களில் ஒன்று இருந்தாலே நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்.
47. உங்களது சிறுகுடலில் நீளம் உங்கள் உயரத்தைக் காட்டிலும் பெரியதாகும். அதன் நீளம் சுமார் 23 அடிகள்.
48. மனிதர்களின் பாதங்களில் மட்டும் மொத்தமுள்ள எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு அமைந்துள்ளதாம்.
49. உங்கள் உயரத்தை கணக்கிட்டால் இரவில் இருப்பதைவிட பகலில் உயரமாக இருப்பீர்கள்.
50. உங்களுக்குத் தெரியுமா?
உங்களால் ஒரே சமயத்தில் மூச்சை இழுத்துக் கொண்டே உணவை விழுங்க முடியாது.
-----------------------------------------------
"சவால் "
திரைப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ் சினிமாவை பொருத்தவரை எத்தனையோ திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் சிறிய கதை அம்சம் கொண்ட எத்தனையோ எதார்த்தமான நகைச்சுவை திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் கமலஹாசன் நடிப்பில் வெளியான சவால் திரைப்படம்.
இந்த சவால் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 41 ஆண்டுகள் ஆகின்றன. முழுமையான நகைச்சுவை திரைப்படங்களுக்கு என்றுமே வெற்றி தான் என்பதற்கு இந்த சவால் திரைப்படம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.
அது போன்ற கதைகளை தான் நடிகர் கமல்ஹாசனும் தேர்ந்தெடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கமல்ஹாசன் நடித்த நகைச்சுவை திரைப்படங்களின் பட்டியல் இந்த திரைப்படத்திற்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு
கடத்தல்காரராக ஜெய்சங்கரும், திருடனாக கமல்ஹாசனும் நடித்திருப்பார்கள். பணக்கார வீட்டு சேர்ந்த நடிகை ஸ்ரீபிரியா கமல் மீது காதல் கொள்கிறார்.
இருவரும் காதலிக்கின்றார்.
கடைசியில் இரண்டு சகோதரர்களும் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
இந்த திரைப்படம் 1974 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஹாத் கி சபாய் என்ற திரைப்படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட படமாகும்.
இந்த கதையின் கரு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும், தமிழில் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது அந்த அளவிற்கு கமல்ஹாசன் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நகைச்சுவையை ஈடு கொடுப்பதற்கு மனோரமா கூட்டணி சேர்ந்து இருப்பார். இருவரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கமல்ஹாசனும், மனோரமாவும் சேர்ந்தால் அந்த ஜோடி எப்படி இருக்கும் என்பது தெரிந்த செய்தி
படத்தில் இடம்பெற்ற தெரியும் தெரியும் என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தனகமலின் ஆட்டம் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.. இந்த பாடலை வைரமுத்து எழுதியிருந்தார்.
மற்ற மூன்று பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
-----------------------------------------