அதிரவைக்கும்

முதல் தகவலறிக்கை

மணிப்பூரில் கிராமம் மொத்தத்தையும் சூறையாடிய வன்முறை கும்பல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றதும் தடுக்க வந்த 2 ஆண்களை கொடூரமாக கொன்றதும் என பல அதிர்ச்சி தகவல்கள் எப்ஐஆர் மூலம் வெளியாகி உள்ளன.

மணிப்பூரில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

இந்த சம்பவம், கடந்த மே மாதம் காங்போக்பி மாவட்டத்தில் 4 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

கலவரத்தால் உயிருக்கு பயந்து பலரும் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மே 18 ஆம் தேதியே, பக்கத்து மாவட்டத்தில் உள்ள காவல்நிலையில் புகார் அளித்துள்ளார்.

 62 நாட்களுக்கு பிறகு ஜூன் 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்த போலீசார், வீடியோ பரவி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பிறகு 4 பேகுறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைகுல் காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ள எப்ஐஆர் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த மே 4 ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பி பைனோம் கிராமத்துக்குள் பிற்பகல் 3 மணியளவில் ஏகே ரைபிள்கள், எஸ்எல்ஆர், இன்சாஸ், பாயிண்ட் 303 ரைபிள்களுடன் 900-1000 பேர் கொண்ட கும்பல் நுழைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Meitei இளைஞர் அமைப்புகள், Meetei Leepun உள்ளிட்டவற்றை சேர்ந்த அந்த கும்பல், கிராமத்துக்குள் இருந்த சுமார் 25 வீடுகளையும் கட்டிடங்களையும் சூறையாடியதாகவும், பின்னர் தீவைத்து எரித்ததாகவும் எப்ஐஆரில் பதியப்பட்டுள்ளது..

 வீடுகளில் இருந்த பணம், தளவாடங்கள், மின்னணு பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கும்பலுக்கு அஞ்சி அருகில் உள்ள காடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 2 ஆண்கள் நோங்போக் செக்மாய் போலீசார் மீட்டுள்ளனர்.,

 காவல்நிலையத்துக்கு செல்லும் வழியில் வன்முறை கும்பல் அவர்களை வழி மறித்ததாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் போலீசாரை மிரட்டி அவர்களிடம் இருந்து 5 பேரையும் அந்த கும்பல் இழுத்து வந்துள்ளது. 

அதில் 56 வயது மதிக்கத்தக்க ஆணை முதலில் கொன்றதாகவும், 21 வயது மதிக்கத்த பெண்ணை மற்ற 3 பேர் முன்னிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் 19 வயது தம்பி தடுக்க முயன்றதால், அந்த இளைஞனையும் வன்முறை கும்பல் கொடூரமாக கொன்றுள்ளதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட அந்த 3 பெண்களும், வன்முறை கும்பலிடம் இருந்து தப்பியோடி அருகில் கிராமத்தில் தஞ்சமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் போலீசில் புகார் தந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ராணுவத்தில் பணியாற்றியவர். 

அசாம் படைப்பிரிவின் வீரராக பணியாற்றிய அவர், கார்கில் போரில் தேசத்திற்காக போராடியதாகவும், இந்தியாவின் அமைதி காக்கும் படையின் ஒரு பகுதியாக இலங்கையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டை பாதுகாக்க போராடிய தன்னால், ஓய்வுக்குப் பிறகு, தனது குடும்பத்தையும், தன் மனைவியையும் பாதுகாக்க முடியாமல் போனதாக வேதனை தெரிவித்துள்ளார்.

----------------------------------------------

மணிப்பூரில்  மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

மணிப்பூரில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் மெரினாவில் கூட உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. தமிழ்நாடு கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை கூடுதல் போலீசார் பணியமர்த்தி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. மகளிர் உரிமைத்தொகை, ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

மேகதாது அணை அமைய உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வுக்காக நியமித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலியான அதிர்ச்சி.

விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

--------------------------------

டி.எஸ்பாலையா.

.எஸ்பாலையா இவர் 1914 ஆகஸ்ட் 23ந்தேதி பிறந்தார். 

இவர் தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டை என்ற சிற்றூரில் பிறந்தார். 

இவர் பிறந்த போது சுண்டங்கோட்டை திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தால் இவர் திருநெல்வேலி சுப்பிரமணியம் பிள்ளை பாலையா என அழைக்கப்பட்டார். 

அதுவே பின்னாளில் டி.எஸ்.பாலையா என்று மறுவியது.

இவர் 6 ம்வகுப்பு படித்தபோது தூத்துக்குடியில் சர்க்கஸ் பார்க்க சென்றார். அப்போது வித்தைக் காட்டியவர்களுக்கு கிடைத்த கை தட்டலை பார்த்து தானும் சர்க்கஸில் சேர விரும்பினார். 

ஆனால் அவரை சேர்த்துக்கொள்ள அந்த முதலாளி மறுப்பு தெரிவித்ததால் அயற்சியடைந்தார். இதையடுத்து தன் நண்பர் உதவியுடன் சர்கஸில் சேர எண்ணி சேர்த்து வைத்த பணத்துடன் மதுரை புறப்பட்டார். ஆனால் அந்த நண்பர் நான் சொன்னவர் மதுரையில் இல்லை மானாமதுரையில் இருக்கிறார் என்று ஏமாற்றினார். 

இதை நம்பி நண்பருடன் மானாமதுரைக்கு சென்றார். அப்போது இரவாகி விட்டதால் நடைமேடையில் படுத்து விட்டனர். 

ஆனால் காலையில் எழுந்து பார்த்தபோது பாலையாவின் பணத்துடன் அந்த நண்பவர் அங்கிருந்து சென்றிருந்தார். 

கையில் காசு இல்லாமல் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த பாலையா அங்கும் இங்குமாக வேலைக்கு தேடினார். பின்னர் உணவகம் ஒன்றில் பணியாற்றினார். இதையடுத்து கசாப்பு கடை ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். 

அந்த காலங்களில் மதுரை வீதிகளில் நிறைய நாடக கம்பெனிகள் செயல்பட்டதால் தினமும் நாடகம் பார்க்க சென்றார். அங்கு நாடக நடிகர்களுக்கு கைதட்டல் கிடைப்பதை பார்த்த பாலையா தானும் நாடகங்களில் நடிக்க விரும்பினார்.

தையடுத்து மதுரையின் பிரபலமான ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்து விலகிய சிலர் பால மோகன சங்கீத சபா என்ற புதிய நாடக கம்பெனியை தொடங்கி இருந்தனர். பாலையா அந்த கம்பெனியில் இணைந்து கொண்டார். 

அங்கு கந்தசாமி முதலியார் என்பவர் பாலையாவுக்கு நடிப்பை கற்று தந்தார். பாலையா முதல் முறையாக 15 வயதில் நாடக மேடை ஏறினார்

தையடுத்து கந்தசாமி முதலியாரின் சிபாரிசால் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய படத்தில் முதல் முறையாக வில்லனாக அறிமுகமானார். 

அதே படத்தில் எம்.ஜி.ஆர் சிறு வேடத்தில் நடித்தார்.

எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, கே.ஏ. தங்கவேலு போன்ற பழம்பெரும் நடிகர் அறிமுகமானது சதி லீலாவதி என்ற அந்த படத்தில் தான் என்பது ஆச்சரியம் ஊட்டும் உண்மை.

 இந்த படத்தில் பாலையாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து பாலையா நடித்த ஆரியமாலா திரைப்படமும் வெற்றி பெற இயக்குநர்களின் ஆதர்ஷ நடிகரானார் பாலையா.

இதற்கிடையில் கோவையைச்சேர்ந்த பத்மாவதி என்பவரை திருமணம் செய்தார். பின்னர் லீலாவதி என்பவரை திருமணம் செய்தார். மேலும் நவநீதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 இவர்களுக்கு மொத்தம் 7 குழந்தைகள் இருந்தனர். ஆனால் திருமண பந்தங்களில் சலிப்படைந்த பாலையா புதுச்சேரிக்கு சென்று சாமியாராக மரத்தடியில் உட்கார்ந்து விட்டார்.

இது திரைத்துறைக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்தது.

இதற்கிடையில் புதுச்சேரிக்கு வேலைக்காக சென்றிருந்த மார்டன் தியேட்டர்ஸ் உரிமையாளரான சுந்தரம் பாலையாவை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து பாலையாவை வற்புறுத்தி காரில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு மீண்டும் அழைத்து வந்தார். இதையடுத்து பர்மா ராணி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். 

இதையடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்ததோடு சொந்த குரலில் பாடவும் செய்தார். மணமகள் என்ற படத்தில் நாட்டிய பேரொளி பத்மினிக்கு ஜோடியாக நடிப்பில் கலக்கி இருந்தார் பாலையா.

இவர் பாடிய சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடல் இன்றளவும் பிரசித்தி பெற்று விளங்குகிறஉண்மை.

பாடல் மட்டும் இன்றி கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.

இதையடுத்து மதுரை வீரன், அம்பிகாவதி, வேலைக்காரி, ஓர் இரவு கலத்தூர் கண்ணம்மா, புதையல் போன்ற வெற்றிப்படங்களில் தன் நடிப்பில் முத்திரை பதித்திருந்தார். 

காதலிக்க நேரம் இல்லை, ஊட்டி வரை, உறவு போன்ற படங்களில் காமெடியில் கலக்கி இருந்தார் பாலையா. இப்படி தமிழ் திரை உலகில் 36 வருடங்களில் சுமார் 146க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 பாலையாவை திரை உலகிற்கு அறிமுகம் செய்த எல்லீஸ்.ஆர்.டங்கன் என்ற ஆங்கிலேய இயக்குநர் 'No one can Replace Balaiah' என்றார். ஆம் காதலிக்க நேரம் இல்லை என்ற படத்தை ரீமேக் செய்ய முடியாமல் போனதற்கு பாலையா கேர்க்டருக்கும் மட்டும் சரியான ஆள் இல்லாததே காரணம் என்றார் இயக்குநர் ஸ்ரீதர். 

இப்படி 100 ஆண்டுகள் கடந்தும் எல்லீஸ் ஆர்.டங்கனின் அந்த சொல் மறுக்க முடியாதது என்பதே பாலையாவின் திறமைக்குச் சான்று்

பாலையா குறித்த வாழ்க்கை குறிப்பை 'நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா' என்ற பெயரில் சந்தான கிருஷ்ணன் என்பவர் எழுதி உள்ளார். 

இப்படி முகம், உடல், அங்க அசைவுகள் ஒவ்வொன்றிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தும் .பாலையா கடந்த 1972ம் ஆண்டு ஜூலை 22 ந்தேதி மறைந்தார்.

------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?