ஆயிரம் ரூபாய்
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புகழ்பெற்ற அளவீட்டு நிறுவனமான சென்சார் டவர் திரெட்ஸ் ஆப் பதிவிறக்கம் தொடர்பாக தரவுகளை வெளியிட்டது. இதில், திரெட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் உலகம் முழுவதும் சுமார் 40 மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.
பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்திரவு.
கலிபோர்னியாவின் முரியேட்டாவில் நேற்று அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகும் கலவரம் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமனம்!
ஐ.ஏ.எஸ். நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ் நியமனம்
பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்
வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன் ஐ.ஏ.எஸ் நியமனம்
நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ் நியமனம்.
வந்தேபாரத் ரயில்களை வெள்ளையில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு - தேசிய கொடியில் இருக்கும் நிறம் என அமைச்சர் விளக்கம்.
கடனை திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்ட ஜெயின் துறவி - உடல் கூறுபோட்டு கிணற்றில் வீசப்பட்டதால் பரபரப்பு.
அதிவேக இணைய சேவைக்காக 48 செய்ற்கைகோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
மெட்டாவின் த்ரெட்ஸ் செயலி - முதல் நாளிலேயே 4 கோடி பேர் பதிவிறக்கம் செய்து சாதனை.
500வது நாளை தொட்டும் முடிவடையாத ரஷ்யா-உக்ரைன் போர் . 9 ஆயிரம் பேர்களை இழந்த உக்ரைன்.
-----------------------------------------------
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பெயர் சூட்டினார்
தமிழக முதல்வர் ஸ்டாலின். மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்கள் உள்ளிட்டவையும் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.
----------------------------------------------
திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை,மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை,
பெண்களுக்கு வாக்குரிமை,
அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்
போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங்களால் காட்டியவர் அவர்! பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது.
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியார் போற்றியவர் பனகல் அரசர்.
நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார் இவரது ஆட்சியிலே தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டுகோடிக்கணக்கான கோவில் சொத்துக்கள் அரசின் வசம் நிர்வகிக்கப்பட வகை செய்யப்பட்டது.
அரசுப்பணியில் வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைத்தார்.
சென்னையை விரிவு படுத்தினார்.
இப்போதுள்ள தியாகராயர் நகர் இவரின் காலத்தில் உருவாக்கப்பட்டது.
பரந்துவிரிந்தசென்னைஉருவாக காரணமான பனகல் ராஜா நினைவாகவே பனகல் மாளிகை, பனகல் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.